மதுரை கலைஞர் நூலகம் வெல்க!

மதுரை கலைஞர் நூலகம் வெல்க!

சென்னையின் முக்கிய  அடையாளங்களுள் ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது அண்ணா நூற்றாண்டுவிழா நூலகம். வாசகர்கள், போட்டித்தேர்வு எழுதுவோர், ஆராய்ச்சியாளர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் விரும்பி நாடும் இடமாக அந்நூலகம் திகழ்ந்துவருகிறது.

அதுபோன்ற ஒரு நூலகம் தமிழகத்தின் வேறு எந்த இடத்திலும் இல்லை.  குறிப்பாக, தென் மாவட்ட மக்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பு இல்லை.

இக்குறையைப்போக்கும் வகையில் ரூ.206 கோடி செலவில் மதுரையில் கலைஞர்  நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், அமைச்சர் பெருமக்கள் ஆகியோர் இந்நூலகத்தைத்திறந்து வைத்துள்ளனர்.

8 தளங்களுடன்கூடிய  2லட்சத்து 13 ஆயிரத்து 288 சதுர அடியில் இந்நூலகம் அமைந்திருக்கிறது. மொத்தம் 3 லட்சத்து 30 ஆயிரம் நூல்கள் இடம்பெறுகின்றன.

புகைப்படம்: மாண்புமிகு முதல்வர் அவர்களின் முகநூல்
புகைப்படம்: மாண்புமிகு முதல்வர் அவர்களின் முகநூல்

தென்மாவட்ட வாசகர்களின் அறிவுப்பசியைத்தீர்க்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இந்நூலகத்தைப் பொதுமக்களும் எழுத்தாளர்களும் பதிப்புலகமும் இரு கரம் நீட்டி வரவேற்கின்றனர். கலைஞர் அவர்களின் நினைவைப் போற்ற இதுபோன்ற நினைவுச்சின்னங்களே மிகப்பொருத்தமானவை.

இத்தோடு நில்லாமல், கோவை, திருச்சி, நெல்லை, நாகர்கோவில், சேலம் முதலிய  நகரங்களிலும் இதுபோன்ற நூலகங்களை உருவாக்க தமிழக அரசு முன்வரவேண்டும் என்று தமிழக அரசை ‘முனைவு’ கேட்டுக்கொள்கிறது.

இந்நூலகங்களுக்கு சமூக சீர்திருத்த சிற்பிகளான தந்தை பெரியார், பனகல் அரசர், அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசனார், திரு.வி.க, நூலகத்துறையின் தந்தை  இரா.அரங்கநாதன், காமராசர், டி.எம்.நாயர்  முதலியோரின் பெயர்களைச் சூட்டிப் பெருமைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *