சாட் ஜி.பி.டி ஆண்டிராய்டு செயலி வந்தாச்சு!

சாட் ஜி.பி.டி ஆண்டிராய்டு செயலி வந்தாச்சு!

பல்வேறு துறைகளின் எதிர்காலத்தை முடிவுசெய்ய இருக்கும் தொழில்நுட்பம் என்று செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பார்க்கப்படுகிறது. எல்லாத்துறைகளிலும் இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதைப் பார்க்க முடிகிறது. இதுவரை கூகிள் போன்ற தோடு பொறிகளைப் பயன்படுத்தியவர்கள் பலரும் சாட் ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் இயங்கும் இணையதளத்துக்குத் தாவுகின்றனர். தேடுபொறிக்கும் இதற்கும் அடிப்படையில் உள்ள வேறுபாடுதான் காரணம்.

எடுத்துக்காட்டாக, ’தக்காளி விலை’ என்று கூகிளில் உள்ளீடு செய்தால், உடனே தக்காளி தொடர்பாக எந்தெந்த இணையதளங்களில் தகவல்கள் உள்ளனவோ, அவற்றின் பட்டியலை வரிசைக்கிரமாகக் காட்டும்.

ஆனால் சாட் ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவுத்தளங்கள், உங்களுக்கு தனிப்பட்ட தகவலைத்தர முயலும். ‘தக்காளி விலை’ என்று சொன்னவுடன் அது, ‘தக்காளியின் விலை வேண்டுமா?’ அல்லது ‘தக்காளி குறித்த தகவலா?’ அல்லது ‘தக்காளி சமையல் குறிப்பா?’ என்று ’குறிப்பிட்டுக்’ கேட்கச்சொல்லும்.

நீங்கள் கேட்டவுடன் உரையாடல் தொடங்கும். எவ்வளவு பெரிய உரையாடல் என்பது உங்களைப்பொறுத்தது. பேசுபொருளைப் பொறுத்தது. செயற்கை நுண்ணறிவு தளங்கள் கேள்விகளுக்கு விடை சொல்லுதல், கதை சொல்லுதல், கவிதை எழுதுதல், இலக்கணப் பிழைகளைத் திருத்துதல், கட்டுரைகளை எழுதித்தருதல் என்று தங்களின் சிறகுகளை விரித்துக்கொண்டே செல்கின்றன. இத்துறையில் புயல் வேகப் பாய்ச்சலாக ஓப்பன் ஏஐ -நிறுவனத்தின் தயாரிப்பான சாட் ஜிபிடி வந்தவுடன், கூகிளின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்தது.

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத கூகுள், பார்ட் (bard) என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவுத்தளத்தைக் களமிறக்கியிருக்கிறது. அதற்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகிவிட்டனர்.

 

Can Google Bard Generate Images?

இவ்வளவு நாட்களாக இணையதளமாக மட்டுமே இருந்த சாட் ஜிபிடி, தற்போது ஆண்டிராய்டு செயலியை (mobile app) அறிமுகம் செய்துவிட்டது. எனவே, நீங்கள் செல்லுமிடமெல்லாம் செயற்கை நுண்ணறிவு நண்பன் உங்களுடனேயே பயணித்து உதவி செய்யப்போகிறான்.  இணையதளத்தைப்போலவே செயலியும் எளிமையாக அமைக்கப்பட்டுள்ளது அனைவரையும் கவர்ந்திருக்கிறது. அடுத்து, கூகிளின் ஆட்டத்தைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

சாட் ஜிபிடி செயலியை பதிவிறக்கம் செய்ய: https://shorturl.at/bJLN0

-தமிழணங்கு

 

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *