சரித்திரம் பேசும் புகைப்படம் 

சரித்திரம் பேசும் புகைப்படம் 

மலையாளிகளுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே பெருமைக்குரிய இரண்டு நபர்கள் சந்தித்து புகைப்படம் எடுத்தது தற்போது வலைத்தளங்களில் வைரலாகிக் கொண்டு வருகிறது. அப்படி என்ன இருக்கிறது என்று கேட்டால், இந்த சந்திப்பை விட அந்த சந்திப்பு நடந்த இடம் தான் மிகவும் சிறப்பு வாய்ந்தது. கிழக்கிந்திய கம்பெனியின் தலைமையகத்துக்கு முன் நின்று எடுத்த புகைப்படம் அது.

சூரியன் மறையாத பேரரசு என்று அழைக்கப்படும் பிரிட்டனின் கிழக்கிந்திய நிறுவனம் ஒரு காலத்தில் நம்மை ஆண்டது.கிழக்கிந்திய கம்பெனி என்பது வரலாற்று வகுப்புகளில் நம் மனதில் பதிந்த  முதல் வார்த்தை. அந்த கிழக்கிந்திய கம்பெனி இப்போது ஒரு இந்தியரால் ஆளப்படுகிறது . 

ஆமாம், கிழக்கிந்திய கம்பெனியின் ஃபைன் ஃபுட் லிமிடெட்டின் 40%  பங்குகளை இவர் கைவசம் வைத்திருக்கிறார். அவர் வேறு யாருமல்ல, எம் .ஏ  யூசுப் அலி , உலகப் புகழ்பெற்ற பிராண்டான லுலுவின் நிறுவனர். 

பள்ளி நாட்களில் வரலாற்று வகுப்புகளை நேசித்த எம்.ஏ .யூசுப் அலி, இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க பெயர் பெற்ற அந்த நிறுவனத்தின் தலைமையகத்தில் முன் நின்று தனக்கு பிடித்த நடிகர் மம்முட்டியுடனான நட்பை வரலாறால் பதிவு செய்திருக்கிறார். .

யூசுப் பாய் என்று மாநிலத் தலைவர்களாலும், வணிகத் தலைவர்களாலும் மற்றும் 40,000க்கும் மேற்பட்ட ஊழியர்களாலும் அன்போடு அழைக்கப்படுபவர், அபு தாபி அரச குடும்பத்தின் கண்ணாகவும் கருத்தாகவும் மாறியதும் ஒரு வரலாறு தான் .

திருச்சூர் நாத்திகா  முசலியர் இல்லத்தில் அப்துல் காதர் மற்றும் சஃபியா தம்பதியருக்கு 1955 நவம்பர் 15 அன்று பிறந்தார்யூசுப். தனது பள்ளிப்படிப்பை முடித்தவுடன் ரயில் ஏறினார் அஹமதாபாத் நகரத்துக்கு…

அங்கே தன் அப்பாவும் தாத்தாவும் நடத்தும் எம்.கே.பிரதர்ஸ் என்ற கடையில் சிறிது காலம் வேலை பார்த்துவிட்டு வெறும் 5 ரூபாயோடு தூம்ரா என்ற கப்பலில் துபாய்க்கு   தன் வாழ்க்கையை தேடி புறப்பட்டார் .

டிசம்பர் 31, 1973 அன்று, தும்ரா கப்பலில் துபாய் துறைமுகத்தில் இறங்கிய யூசபாலி கோச்சப்பா, எம்.கே.அப்துல்லாவின் கடையில் உதவியாளராகப் பணிபுரிந்தார். படிப்படியாக இறக்குமதி மற்றும் மொத்த விலை வியாபாரத்தை மேம்படுத்தினார்.

பின்னர் வணிகம் செய்யும் போது உண்டாகும்  நடைமுறை  நெருக்கடிகளை சமாளிக்க தெரிந்துகொண்ட அவர் சொந்தமாக அல் ரைஃப் கோட் ஸ்டோர்ஸ் தொடங்கினார். அபுதாபியில் இன்னும் இந்தக் கடை உள்ளது. 

அவர் தான் சொந்தமாக சம்பாதித்த பணத்தால்  பொருட்களை இறக்குமதி செய்து அருகிலுள்ள சிறிய கடைகளுக்கு விநியோகிக்கத் தொடங்கினார். இறக்குமதி, விநியோகம் மற்றும் விற்பனை அதிகரிப்புடன், சூப்பர் மார்க்கெட் என்ற கனவை நனவாக்க மும்முரமாக இறங்கிய காலகட்டம் அது 

சூப்பர் மார்க்கெட்டுக்காக  வளைகுடாவில் 1990ல் இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருந்த போது போர் வெடித்தது. யூசுப் அலி சிறிது பதட்ட நிலையில் இருந்தார் அதுவரை அவர் சேகரித்து வைத்திருந்த அனைத்தும் கடைக்காக முதலீடு செய்யப்பட்டுள்ளது.

எல்லோரும் இருப்பதை எடுத்துக்கொண்டு பெட்டி படுக்கையோடு சொந்த நாட்டுக்கு வெளியேறும் நேரம். ஆனால் யூசுப் அலி தன்னை வளர்த்த நாட்டை விட்டு வெளியேற தயாராக இல்லை. சூப்பர் மார்க்கெட் திறக்கப்படும் என உறுதி அளித்தார்.

படம்: நன்றி : ஆதில், விக்கிப்பீடியா

“இந்நாட்டின் மீது  எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்ற தலைப்பில் விளம்பரத்துடன் டிபார்ட்மென்ட் ஸ்டோரான லுலு மாலை தொடங்கினார். அதுவரை வசூலான தொகை முழுவதையும் வைத்து அதை மேலும்  விரிவுபடுத்த யூசுப் அலி முடிவு செய்தார்.அபுதாபி விமான நிலைய சாலையில் முதல் வெளிநாட்டினரின் சூப்பர் மார்க்கெட் வளர்ந்து உயர்ந்தது. 

 ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தேசத்தின் தந்தை இந்த சூப்பர் மார்க்கெட்டை கவனித்தபோது, எல்லாமே மாறியது. அதன் உரிமையாளர் யூசுப் அலி  என்பதை உணர்ந்து ராஜா அவரை அரண்மனைக்கு வரவழைத்தார். அப்படி உலகின் மிகப்பெரிய விநியோக நிறுவனம் உருவானது. பிறகு தொட்டதெல்லாம் பொன்னான கதை தான்.

 இன்று எம்.ஏ . யூசுப் அலி தான் அபுதாபி வர்த்தகம் மற்றும் தொழில் துறையின் இயக்குநர்கள் குழுவில் உறுப்பினரான முதல் வெளிநாட்டவர். சவுதி அரேபியாவின் பிரீமியம் ரெசிடென்சியை பெற்ற முதல் இந்தியர் . 

அதுமட்டுமா , நோர்கா ரூட்ஸ் துணைத் தலைவர். இன்று அவர் கொச்சி கண்ணூர் விமான நிலைய நிறுவனங்களின் இயக்குநர் குழு உறுப்பினராக உள்ளார். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் …

இப்படி பல வெற்றி கனிகள் அவர் கைவசம் , வக்கீல் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்ட யூசுப் அலி, வக்கீலுக்குப் படித்தும் தன் நடிப்பு திறமையால் உலகையே ஈர்த்த மம்முட்டியுடன் ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் முன் பெருமையுடன் சிரித்தபடி எடுத்த புகைப்படம் சரித்திரம் அல்லாமல் வேறென்ன!?

ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.

(முகப்புப்படம்:anuramathai )

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *