2025 ஜனவரியில் ‘உலக புத்தொழில் மாநாடு’ நடத்தும் தமிழ்நாடு

2025 ஜனவரியில் ‘உலக புத்தொழில் மாநாடு’ நடத்தும் தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு நேற்று(19 பிப், 2024) தனது நிதிநிலை அறிக்கையை வெளியிட்டது. நிதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தங்கம் தென்னரசு, தனது முதல் அறிக்கையை 2 மணி நேரத்துக்கும் மேலாக வாசித்தார். அதில் புதிய தொழில் முனைவோருக்கான பல திட்டங்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றுள் சில:

*முதல் தலைமுறை தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வண்ணம் செயல்பட்டுவரும் நீட்ஸ் திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதனையடுத்து இதற்கான நிதி ஒதுக்கீடு எதிர்வரும் நிதியாண்டில் ரூ.101 கோடியாக அதிகரிக்கப்படும்.

*அண்மையில் முதலீட்டாளர்கள் மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தியுள்ள தமிழ்நாடு அரசு, அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சென்னையில் ‘உலகப் புத்தொழில் மாநாட்டை’ நடத்த இருக்கிறது. புதிய தொழில்முனைவோரும் தொழில்துறையில் கோலோச்சிவரும் தொழில் நிறுவனங்களும் இதில் பங்கெடுக்கும்.

*சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனத் துறைக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.1557 கோடி ஒதுக்கப்படுகிறது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *