கேரள மொழி நிறுவனத்துக்கு புதிய கட்டடம்

கேரள மொழி நிறுவனத்துக்கு புதிய கட்டடம்

கேரள மொழி நிறுவனத்தின் புதிய தலைமையகத் திறப்பு விழா, அறிஞர் விருதுகள் வழங்கல் மற்றும் 55வது ஆண்டு விழா ஆகியவை கூட்டாக  கடந்த செப். 20 ஆம் நாள் மாலை திருவனந்தபுரம் கூத்தம்பலம் வைலோப்பிள்ளி சமஸ்கிருதி பவனில் நடைபெற்றது. 

இவ்விழாவில் கேரள முதல்வர் திரு. பினராயி விஜயன் புதிய தலைமையகத்தை திறந்து வைத்தார்.  கலாச்சார, மீன்வளத்துறை மற்றும்  இளைஞர் விவகாரம் அமைச்சர் திரு. சஜி செறியான் தலைமை வகிக்க,  அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 

கேரளா மொழி  நிறுவனமானது நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவுக்கான பயனுள்ள தகவல் தொடர்பு மொழியாக மலையாளத்தை உருவாக்குதல் மற்றும் உயர்கல்விக்காகவும், காலத்தின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்றவாறு மொழியைப் புதுப்பித்தல், மலையாளப் பாடப் புத்தகங்களைத் தயாரித்தல் ஆகிய  நோக்கங்களுடன்  உருவாக்கப்பட்ட  அமைப்பாகும் . இது கேரள அரசின் கலாச்சாரத் துறையின் கீழ் செயல்படுகிறது.

இந்த நிறுவனம், அறிவியல் கலைச்சொற்கள் உள்ளிட்ட பல்வேறு  தொழில்நுட்ப கலைச்சொற்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ம் 1967-69 காலகட்டத்தில் கேரள சாஸ்த்ர சாகித்ய பரிஷத் செய்த பணியின் நீட்சியாக இது தொடர்கிறது.. 

அப்போதைய கல்வி அமைச்சர் ஸ்ரீ திரிகுண சென் 16 செப்டம்பர் 1968 அன்று திருவனந்தபுரத்தில் உள்ள கனகக்குன்னு அரண்மனையில் கேரள மொழி  நிறுவனத்தின் செயல்பாடுகளைத் தொடங்கி வைத்தார்.

 1968 -ல் தொடங்கப்பட்டதிலிருந்து, அறிவியல், தொழில்நுட்பம், மனிதநேயம் குறித்த , மொழி மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சுமார் 5000 புத்தகங்களை இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது . கேரளாவின் கல்வி மற்றும் அறிவுசார் துறைகளில் உயர்கல்வி மற்றும் பொது வாசிப்புக்கான சிறந்த நூல்களை இவ்வமைப்பு உருவாக்கியிருக்கிறது. 

இந்த நிறுவனம் அறிவியல் கலைச்சொற்கள் அடங்கும் சுமார் 20 க்கும் மேற்பட்ட அகராதிகளை வெளியிட்டுள்ளது.  மேலும் பிரபல எழுத்தாளர்களின் முழுமையான படைப்புகள் மற்றும் விரிவான ஆய்வு  நூல்களை வெளியிடும் பணியிலும் இந்நிறுவனம் ஈடுபட்டுவருகிறது.

ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *