பிக் பாஸ்-சொல்லும் பாடம் என்ன?

இன்றைய தமிழ்ச்சூழலில் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்காதவன்/வள் நான் என்று நீங்கள் சொன்னால் உங்களை தமிழர் பட்டியலிலிருந்தே ஒதுக்கிவைத்துவிடுவார்கள். அந்த அளவுக்கு தமிழர்களைப் பிடித்து ஆட்டுகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி.

 

அலுவலகப் பணியை முடித்துவிட்டு இரவு உணவையும் கடந்துவிட்டு கண்ணயர்வதற்கு கொஞ்சம் முன்னால் வருகிறது ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி. இரவில் பார்க்க முடியாதவர்கள் என்ன செய்யலாம்? அவர்களுக்காகத்தான் இருக்கிறது பகல் ஒளிபரப்பு. பணிபுரிந்துவிட்டு வீட்டுக்கு மாலை /இரவு திரும்புவோரைக் குறிவைத்து இரவு ஒளிபரப்பு நடக்கிறது என்றால் இல்லததரசியரையும் ஓய்வுபெற்றோரையும் இலக்காகக் கொண்டு மதிய (மறு) ஒளிபரப்பு நடக்கிறது.

22090199_387924174956539_4860201138809379102_n

 

பேருந்துகளில், மின்சார ரயில்களில்,செல்பேசி உரையாடல்களில், மதிய உணவு இடைவேளைகளில் எங்கு பார்த்தாலும் பிக் பாஸ் தொடர்பான உரையாடல்கள், விவாதங்களைக் கேட்கலாம். யார் கண்டார்கள், பெரிய நிறுவனத்தலைவர்கள்கூட ஸ்கைப்பிலும் வீடியோ சாட்டிலும் இதே கதையைப் பேசி தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டிருக்கக்கூடும்.

“என்னங்க கமலுக்கு இந்த வேலை தேவையா? அவருக்குன்னு ஒரு மரியாதை இருக்கு. அவரைவிட ரொம்ப சின்னப் பசங்க ஒரு வீட்ல 100 நாள் தங்குவாங்களாம். .அதைப்பத்தி இவர் நமக்கு விளக்கம் சொல்வாராம். எனக்கு சுத்தமாப் பிடிக்கல”

 

“நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கலைங்க. இந்த ஜூலி பொண்ணு ஜல்லிக்காட்டு போராட்டத்துல எல்லாம் எப்படி கோஷம் போட்டுச்சு. கடைசியில காசுக்காக இங்க வந்து சினிமாக் காரங்ககூட மல்லுக்கட்டிக்கிட்டு நிக்கிது.. போராட்டமெல்லாம் ஒரே ஏமாத்துவேலை”

20023882_356898558059101_7652913783843872527_o

“என்ன இருந்தாலும் இந்த காயத்ரி பொண்ணுக்கு இவ்வளவு ஆகாது. அது என்னமோ பிக் பாஸ் மாதிரி ஆக்ட் பண்ணுது. அது வெச்சதுதான் சட்டம். காயத்ரியோட அப்பா ரகுராம் மாஸ்டர் கமலுக்கு நண்பர். அதனால அந்தப்பொண்ணு என்ன பண்ணினாலும் கமல் கண்டுக்கறதே இல்லை”

 

“என்னங்க இது, கஞ்சா கருப்பு மாதிரி ஆளுங்கள எல்லாம் இந்த நிகழ்ச்சிக்குள்ள விடலாமா? அந்த ஆள் வெட்டுவேன், குத்துவேன்னு ஓடறாரு”

 

 

“இந்த பரணிய  குறி வெச்சுத்தாங்க எல்லோருமே அட்டாக் பண்றாங்க. எதுக்கு வம்புன்னு அவர்  வாக்கிங் போய்க்கிட்டே இருக்காரு.. அவர வம்பு இழுக்கறாங்க. கடைசியில விட்டாப்போதும்னு ஓடிப்போயிட்டாரு”

 

“என்ன இருந்தாலும் காயத்ரி, சேரி பிஹேவியர்னு சொல்லியிருக்கக்கூடாது. அதே மாதிரி அவங்க ஜாதிக்காரங்கள மத்தவங்க திட்ட்டியிருந்தா காட்டியிருப்பானா விஜய் டிவிக்காரன்?”

 

“என்னைக்கேட்டா வையாபுரியும் ஓவியாவும்தான் கொஞ்சம் சரியா இருக்காங்க”

 

19467974_348896272192663_3424737805428619912_o

“தமிழ்த்தாய் வாழ்த்தை அசிங்கப்படுத்திட்டாங்க. நமீதாவுக்குப் பேசவே வரல. ஜூலி பொண்ணு,, ‘தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் தாயுமானவர்’ அப்படிங்குது. கவிஞர் சினேகன் ஒண்ணுமே சொல்லாம அமைதியா இருக்காரு.. காலக்கொடுமை”

 

”இந்த ஆர்த்தி பொண்ணைப் பார்த்தீங்களா, கடைசிவரைக்கும் எல்லோரையும் பத்தி வத்தி வெச்சுக்கிட்டே இருக்கு. வெளில போறப்பக்கூட ஜூலையைப் பார்த்து ‘இனியாவது நடிக்காம இரு’ன்னு சொல்லிட்டுப்போகுக்து”

 

”அட அதைக்கூட விடுங்க. எனக்கு என்ன ஆச்சரியம்னா, பொம்பளைக்கு சமமா கணேஷ் வெங்கட்ராமன், சினேகன், ஆரவ் அப்படின்னு ஆம்பளைங்க எல்லோரும் பொறணி  (புறம்) பேசறாங்க. என் வாழ்க்கையில முதல் தடவையா இதெல்லாம் பார்க்கறேன்”

 

20017464_356807414734882_3005309713204455384_o

நான் மேலே சொன்னவை எல்லாமே மிகச்சில எடுத்துக்காட்டுக்களதாம். இதைவிட எவ்வளவு விஷயங்களை நாம் பிக் பாஸ் நிகழ்ச்சியை மையப்படுத்திப் பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த நிகழ்ச்சி ஒரு  ஒழுக்கக்கேடு, வெட்டிபோழுதுபோக்கு என்று சொல்வோரும்கூட இதனைப் பார்க்கத் தவறியதில்லை.

 

இந்தவாரம் யார் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்பதுதான் தமிழகத்தின் கேள்வியாக இருந்துவந்திருக்கிறது. இன்றுடன் 100 நாட்களை நிறைவு செய்திருக்கிறது பிக் பாஸ் நிகழ்ச்சி. எல்லோரின் இதயத்துடிப்புகளையும் தன்னுள் வாங்கிக்கொண்டு, நிறைவாக ஆரவ்-பிக் பாஸ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

 

இது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்கிற அளவோடு வாசகர்கள் இதனைக் கடந்துவிடவேண்டியதில்லை. புதிய தொழில்முனைவோர் கற்றுக்கொள்ள ஆயிரம் ஆயிரம் விஷயங்கள் இதில் இருக்கின்றன. ஒவ்வொன்றாகப் பார்ப்போமா! (தொடரும்)

 

-அருண்மொழி

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

2 thoughts on “பிக் பாஸ்-சொல்லும் பாடம் என்ன?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *