மும்பை விமானசேவைகள் ரத்து: பணத்தை திரும்பத்தரும் இண்டிகோ ஏர்லைன்ஸ்

செப்.20, மும்பை: மும்பையில் பொழிந்துவரும் கடும் மழை காரணமாக மும்பை விமான நிலையத்தின் ஓடுதளம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து ஓடுதளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. எனவே இன்று மும்பை விமானப்போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

indigo-airlines7

இண்டிகோ விமானசேவை நிறுவனம், இதுகுறித்து தனது பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ், தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள் வாயிலாக தகவல் தெரிவித்திருக்கிறது. விமான பயணச்சீட்டுகளுக்கான கட்டணத்தை முழுவதுமாக திரும்பத் தந்துவிடுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

 

 

மேலும் மாற்று தேதிகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்யும்போது அதற்கான சேவைக்கட்டணங்களிலிருந்து விலக்கு அளிப்பதாகவும் கூறியிருக்கிறது. இணையம் வாயிலாகவும் தங்கள் டிக்கெட்களை பயணிகள் ரத்து செய்துவிடலாம்.

 

இதுகுறித்த தேவைகளுக்கு  customer.relations@goindigo.in என்ற மின்னஞ்சலைத் தொடர்புகொள்ளவும் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *