நம்பிக்கைப் பெண்கள் (புதிய தொடர்)

பிரியா கண்ணையாவை (36) உங்களுக்குத் தெரியுமா? சிலருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் சென்னையில் தரமான பட்டுச்சேலை வாங்க விரும்புவோர் பலருக்கும் இவரை நன்றாகத் தெரியும். பல மாடிகளுடன் கூடிய கடைகளை விட்டுவிட்டு இவரிடம் பட்டாடைகள்  வாங்கித்தான் திருமணம் உள்ளிட்ட  தங்கள் இல்ல விழாக்களைக் கொண்டாட வேண்டும் என்று நாடிச்செல்லும் ரசிகர்கள் கணிசமாக இருக்கின்றனர்.

3F9A4858
பிரியா கண்ணையா

பிரியா, துணி வணிகத்துக்குப் புதியவர் அல்லர்.   தாத்தா காலத்தில் இருந்து பட்டுத்தறியில் நெசவு செய்த குடும்பம் இவர்களுடையது. அந்தப்பாரம்பரியத்திலிருந்து வந்ததால்தான் அடுக்குமாடிக் கட்டடக்கடைகளையும் விளம்பரங்களையும் நம்பாமல்.கோடம்பக்கத்தில் தனது இல்லத்தில் வைத்தே இத்தொழிலைச் செய்துவருகிறார்.  லட்சங்களில் சம்பாதிக்கிறார்.

அவர் நமது முனைவு வாசகர்களுக்காகப் பகிர்ந்துகொண்டவற்றிலிருந்து..

 

”பெண்கள் எப்போதும் சொந்தக்காலில் நிற்க வேண்டும். பொருளாதாரத் தேவைகளுக்காக ஆணை எதிர்பார்த்து இருப்பது என்ற நிலை, பெண்ணை பலவீனப்படுத்திவிடும். என்னைப்பொறுத்தவரை பெண்கள் தங்களது ஆற்றலை உணர ஒரே வழி சொந்தக்காலில் நிற்பதே. ’எங்கோ ஒரு நிறுவனத்தில் வேலைக்குப்போவது’ என்று இதனைப் புரிந்துகொள்ளக்கூடாது. அது, இன்னும் குறுகிய வட்டத்துக்குள் பெண்ணை அடைப்பதாகவே ஆகிவிடும். சொந்தக்காலில் நிற்பது என்றால் அது சொந்தத்தொழில் செய்வதுதான்.

 

எல்லாப் பெண்களாலும் தனியாக, சொந்தமாகத் தொழில் செய்ய இயலும். ‘முடியும்’ என்ற நம்பிக்கைதான் சொந்தத்தொழிலுக்கு மூலதனம். என் விஷயத்திலும் அதுவே எனக்கு மூலதனமாக இருந்தது. அந்த நம்பிக்கையை வைத்துக்கொண்டு எங்கள் குடும்பத் தொழிலான பட்டு விற்பனையைக் கையில் எடுத்தேன். நான் படித்த வணிகமும் ஃபேஷன் டெக்னாலஜியும் பெரிய அளவில் எனக்கு உதவின. யார் உழைப்பையும் நம்பி வாழாமல் நம் காலில் நிற்கிறோம் என்ற உணர்வு பெண்கள் தங்களின் அடுத்த நிலையை எட்ட உதவும் கருவி” என்கிறார் பிரியா.

 

பட்டு வாங்குபவர்களின் ஒரே குழப்பம் அது சுத்தமான பட்டா என்பதுதான். அடுத்த  கவலை பட்டின் விலை. அந்த இரண்டும் இங்கு வேண்டாம் என்கிறார் பிரியா. ”நல்ல பட்டு இல்லையென்றால் அதை நான் வாங்குவதே இல்லை . நான் வாங்கும் பட்டாடைகள்  அனைத்தும் என் உறவினர்கள் தறியில் இருந்து வாங்குபவையே. அவர்களும் பெருநிறுவனங்களுக்குப் பட்டை வழங்குபவர்கள்தாம். அதனால் அவர்கள் பெறும் அதே  மொத்த விலைக்கு எனக்கும்  சரக்கு கிடைத்துவிடும்.

 

சிறு வயதில் இருந்து பட்டு துணிகளை பார்த்து வளர்ந்ததால் சுலபமாக நல்ல பட்டு , வேலைப்பாடு எப்படி என்றெல்லாம் பார்த்துப் பழகிவிட்டேன் .என்னிடம் விற்பனைக்கு உள்ள பட்டாடைகள் அனைத்தும் நானே கைப்பட தேர்ந்தெடுத்து வைப்பவைதாம். பெரிய கடைகளில் இட வாடகை, வேலையாட்கள் ஊதியம், விளம்பரம் போன்றவற்றால் ஏற்படும் செலவை பட்டின்மீது ஏற்றிவிடுவர். எனவே அங்கெல்லாம் விலை அதிகமாகவே இருக்கும். எங்களைப்போன்றவர்களுக்கு அதுபோன்ற செலவுகள் இல்லை என்பதால் குறைவான விலையில் தரமான பட்டை எங்களிடம் நீங்கள் பெறமுடியும்”  என்கிறார் உறுதியான குரலில்.

3F9A4868

”பெரும்பாலும் திருமணம் போன்ற விழாக்களுக்குத்தான் நான் புடவைகளை விற்பனை செய்வது வழக்கம். அதனால் மொத்தமாக விற்பனை செய்ய முடிகிறது. அவ்வாறு விற்பனை செய்யும்போது உடனடியாக பணம் கிடைப்பதால் லாபத்தை மேலும் குறைத்துக் கொடுத்துவிடுவேன்.

நான் பட்டுப் புடவை விற்பதாக என்றும் நினைத்ததில்லை நல்ல உணர்வுகளைக் கொடுப்பதாகவே உணர்கிறேன். திருப்தியடைந்த வாடிக்கையாளர்கள் தொடர் வாடிக்கையாளர்களாக மாறுவதே எங்களது வெற்றி” என்று சொல்லும் பிரியா,  ஒரே நேரத்தில் குறைந்தது 400 புடவைகளை வீட்டில் இருப்பு வைத்திருக்கிறார். ஆண்டுக்கு சில பல லட்சம் ரூபாய் பட்டுப்புடவைகளை விற்பனை செய்வதாகக்கூறுகிறார்.

 

தனது தொழிலுக்கு சமூக ஊடகங்கள் பெரிதும் துணைபுரிவதாகச் சொல்லும் பிரியாவின் முகநூல்  (facebook ) வணிகப்பக்கத்துக்கு இதுவரை 25000 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இணையத்திலேயே புடவைகளின் படங்களைப்பார்த்து,  உங்களுக்கு பிடித்த ஆடைக்கான பணத்தைச் செலுத்திவிட்ல்டால் உங்கள் வீட்டுக்கே புடவை வந்து விடும். இதுதான் இவரது வணிக மாதிரி. திரையுலகப் பிரபலங்களான S.Ve. சேகர், ராதாரவி, கோவை சரளா, நளினி முதலிய பலரும் இவரது வாடிக்கையாளர்கள்.

தொடர்புக்கு அவரின் முகநூல் பக்கம் : https://www.facebook.com/sriaryasilks/

இந்த நம்பிக்கைப் பெண், தொழிலில் மென்மேலும் வெற்றிபெற முனைவின் வாழ்த்துக்கள்!

 

-ஐயன் கார்த்திகேயன் 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *