நமக்கு ஏன் கபாலியைப் பிடிக்கிறது?

ChljfoHXEAAthPCகபாலி  பட  டீஸர் வெளியானதில் இருந்து இப்போதுவரை உலகமெங்கும் கபாலி ஜூரம் பற்றிக்கொண்டுவிட்டது. இதுவரை இல்லாத வகையில் டீஸர் வெளியான நான்கு நாட்களுக்குள் 1 கோடியே 8 லட்சம் பேரால் பார்க்கப்பட்டிருக்கிறது.

இந்திய அளவு என்பதைத் தாண்டி உலக அளவில் இதுபோன்ற சாதனையை வேறெந்த டீஸரும் ஏற்படுத்தியதில்லை என்கிறார்கள். இன்னும் பல லட்சம் பார்வைகளைத் தாண்டும் என்று தோன்றுகிறது.

சரி, இதற்கும் ‘முனைவு’க்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இருக்கிறது.

கபாலி’ டீஸர் தொழில்முனைவோருக்கு சொல்லும் பாடங்கள் இவை:

1. கபாலி  யில் ரஜினி, தற்போதைய தோற்றத்துடன் காணப்படுகிறார். வெள்ளைமுடி இன்னும் அவரது கம்பீரத்துக்கு அழகு சேர்க்கிறது. ”அமிதாப் பச்சனுக்கு இங்கே போட்டியாளர் தயார்!” என்றெல்லாம் கோஷங்கள் கிளம்பிவிட்டன. அதிகப்படியான மேக் அப்-ஐ விட எளிமையான தோற்றம் ரசிகரைத் துள்ள வைக்கிறது.

நீதி:

ஒரு தொழில்முனைவோர், எந்த சூழ்நிலையிலும் இயல்பாக இருக்க வேண்டும். நிறுவனத்தைப்பற்றிய, தயாரிப்பைப் பற்றிய எந்தவிதமான பொய்க்கும், ஏமாற்றுக்கும் இடம் தரக்கூடாது. உண்மையான தயாரிப்புதான் வெல்லும்.

2. கபாலி, இயக்குநர் ரஞ்சித்தின் மூன்றாவது படம். ஒரு படத்தை மட்டுமே இயக்கிய ரஞ்சித்தின் திறமையை நம்பி களத்தில் குதிக்கிறார் 60 வயது சூப்பர் ஸ்டார்.13100894_1086904284704001_5860847310045185149_n

அதேபோல, ஒரு உச்ச நடிகர் அழைத்து படம் பண்ணச் சொல்கிறாரே என்று தயங்காமல், துணிந்து இறங்கி கலக்குகிறார் ரஞ்சித்.

நீதி:

ரிஸ்க் எடுத்தால்தான் வெற்றி. சந்தை எவ்வளவு பெரியதாக இருந்தாலும் சரி, நம்முடன் மோதும் போட்டியாளர்கள் எவ்வளவு பெரிய ஜாம்பவான்களாக இருந்தாலும் அதுகுறித்து நாம் அலட்டிக் கொள்ளவே கூடாது. முன் வைத்த காலைப் பின்வைக்காமல் விளையாடிவிட வேண்டியதுதான்.

3.மற்ற படங்களில் ரஜினி காட்டும் ஸ்டைல் எதையும் டீஸரில் பார்க்க முடியவில்லை. ஆனால் புதிதாக சில சரக்குகளை இறக்கி வைக்கிறார். ”தமிழ் சினிமாவில் நம்பியார் கூப்பிட்டவுடன் ஓடி வந்து ‘சொல்லுங்க எஜமான்’னு சொல்லும் அந்தக் கபாலின்னு நினைச்சியா?
கபாலிடா!” என்கிறார். அதாவது சினிமாவைப்பற்றிய சின்ன பகடி (கிண்டல் அல்லது சுய விமர்சனம்). இது ரஜினிக்குப் புதுசு. அதேமாதிரி டீஸரின் இறுதியில் ‘மகிழ்ச்சி!’ என்கிறார். கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.

நீதி:

காலம் முழுக்கவும் தொழில்முனைவோர் ஒரே மாதிரி இயங்க வேண்டியதில்லை. துருப்பிடித்துப் போய்விடுவோம். எனவே மாற்றங்களுக்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நம்மிடம் உள்ள பரீட்சித்துப் பார்க்காத திறமையை சோதித்துப் பார்க்க வேண்டும்.

-ம. விஜயலட்சுமி.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *