சென்னை புத்தகக் கண்காட்சியில் அமேஸான் கிண்ட்ல்!

புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ள எல்லோருக்கும்  உள்ள ஒரே பிரச்சனை, தடி தடியான புத்தகங்களைத்தூக்கிக்கொண்டு பயணம் செய்வதுதான். அவற்றைப் பாதுகாப்பது அதைவிடப்பெரிய வேலை. வீடு நிறைய புத்தகங்களை வாங்கிவைத்துவிட்டால் அவற்றுக்குத் தனியாக அலமாரிகள் வேண்டும். அவamazon-kindle-paperwhite-2015ற்றைத்தூசு படியாமல் பாதுகாக்க வேண்டும்…இப்படி ஏகப்பட்ட நடைமுறைச்சிக்கல்கள்.

 

இவற்றுக்கெல்லாம் ஒரு தீர்வு இருக்காதா என்று யோசித்தவர்கள் ஒரு கருவியைக் கண்டுபிடித்தனர். அது வாசிப்பு விரும்பிகளின் உள்ளம் கவர் கள்வனாக இருக்கிறது. அதுதான் ‘கின்ட்ல்’ (கிண்ட்லே என்றும் சொல்கிறார்கள்) எனும் இ-புக் ரீடர். மின்னணு வடிவில் ஆயிரக்கணக்கான நூல்களைப் படிக்கத்தரும் இந்தக்கருவியை உருவாக்கியது அமேஸான் நிறுவனம்.

 

எவ்வளவோ நிறுவனங்கள் இ-புக் ரீடர்களை உருவாக்கினாலும் அமேஸானின் கிண்ட்லை அடித்துக்கொள்ள ஆளில்லை. காரணம், அது படிப்பதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது என்பதுதான். இந்த மின்னணு வாசிப்பு சாதனம், புத்தக விரும்பிகளின் எண்ணவோட்டத்தைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

kindle-paperwhite

 

வழக்கமாக புத்தகங்கள் ஒரு பழுப்பு நிறக் காகிதத்தில்தான் இருக்குமில்லையா! அதே வண்ணத்தில்தான் இதன் திரை இருக்கும். (கலர் ரீடரெல்லாம் கிடையாது. கருப்பு-வெள்ளைதான்!).

 

புத்தகத்தின் பக்கங்களைத்தள்ளுவதுபோல தள்ளித் தள்ளிப் படிக்கலாம். (தொடுதிரை இப்போது வந்துவிட்டது. அந்த வசதி இல்லாத கிண்ட்ல் சாதனங்கள் முதலில் வந்தன). எழுத்துக்களை சிறிதாக்கியோ, பெரிதாக்கியோ படித்துக்கொள்ளலாம்.  வை-ஃபை உதவியுடன் மின் – நூல்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். எங்கும் எடுத்துச்செல்லமுடியும். எடை குறைவு.  இவ்வளவு இருந்தால் போதாதா, மேலை நாடுகளில் கிண்ட்ல் சக்கைப்போடு போடுகிறது.

 

அப்படியே மெல்ல இந்தியாவின் பக்கம் கண் வைத்தது அமேஸான். துவக்கத்தில் பெரிதாக வரவேற்பு இல்லை. இப்போது கிண்ட்ல் ரீடருக்கு ரசிகர் மன்றம்தான் வைக்கவில்லை. அந்த அளவுக்கு புத்தக விரும்பிகள் இதனைக்கொண்டாடத் தொடங்கிவிட்டனர். இதுவரை அமேஸான் நிறுவன இணையதளம் மூலமாகவே  இந்த கிண்ட்ல் ரீடரை வாங்க முடியும். இப்போது நேரடியாகவே பொதுமக்களுக்கு விற்பனை செய்ய அமேஸான் இறங்கிவந்திருக்கிறது.IMG_20160601_205541

 

தற்போது சென்னை தீவுத்திடலில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் கிண்ட்ல் அரங்கை அமைத்திருக்கிறது. ரூ.2000 வரை விலையில் தள்ளுபடியும் தருகிறது. 25,000க்கும் மேற்பட்ட மின் புத்தகங்கள் இலவசம் என்றும் அறிவித்திருக்கிறது.  புத்தக வாசிப்பு, தொழில் நுட்பத்தில் அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிக்கும்போது வாசகர்களைத்தேடி புத்தகக் கடைகளுக்கு நடுவே கடைவிரிக்கும் முடிவு யாரும் எதிர்பாராதது.

 

IMG_20160601_205243

 

ஆக, வித்தியாசமான, அதேநேரத்தில் பயனுள்ள ஒரு பொருளை சந்தையில் அறிமுகப்படுத்துவது; அதனை மக்கள் ஏற்கும்வரை பொறுமையாகக் காத்திருப்பது; மாற்று வழிகளிலும் சந்தைப்படுத்துவது என்று தொழில்முனைவோருக்குத்தேவையான அடிப்படை தத்துவங்களைச் சொல்லித்தருகிறது அமேஸான், தனது கிண்ட்ல் மூலமாக!

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *