புத்தகக் கண்காட்சியில் என்ன வாங்கலாம் ?

 

சென்னையில்  நடைபெற்றுவரும் 39 ஆவது புத்தகக் காட்சியில் தங்களைக் கவர்ந்த நூல்கள் குறித்து எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், படைப்பாளிகள் ‘முனைவு’ இதழுடன் பகிர்ந்துகொண்ட கருத்துக்கள் இவை.  கண்காட்சி நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சில நல்ல நூல்களை அடையாளம் காட்ட இது ஒரு சிறிய முயற்சி.

பொதுவான நூல்கள் இதில் இடம்பெறுகின்றன. பொருளாதாரம், தொழில் முனைவு குறித்த நூல்கள் பற்றிய அறிமுகம் அடுத்தடுத்து வரும்.

 

வித்யா விஜயராகவன், முகநூல் எழுத்தாளர்: fb gal

 

நீங்கள் இறந்தால் யார் அழுவார்?-இதுதான் எனக்குப் பிடித்த புத்தகம்.  நாம் எல்லோருமே நிம்மதியாக வாழத்தான் செல்வம் தேடி ஓடிக்கொண்டே இருக்கின்றோம். ஆனால் தேடலில் நிம்மதியைத் தொலைத்து விடுகிறோம். வாழ்க்கையில் சேர்த்த பணத்தை விடவும், கட்டிய வீடுகளை விடவும், வாங்கிய கார்களை விடவும் அதிக மதிப்பு கொண்டவர்கள் நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்கள்.

 

அவர்களைத் தக்கவைத்துக் கொள்ள என்ன செய்கிறோம்? சிறந்த மனிதனாக, நண்பனாக, கணவன்/மனைவியாக, மகன்/மகளாக, அப்பா/அம்மாவாக, முதலாளியாக இருப்பது எப்படி? இந்த கேள்விகளுக்கான பதில்களைத்தான் ராபின் ஷர்மா சொல்லியிருக்கிறார்.

 

மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதில் தொடங்கி, நேர மேலாண்மை, பிறர் நன்மதிப்பை சம்பாதிப்பது வரையில் 101 தலைப்புகளில் வாழ்க்கையின் அன்றாட பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறார். இவற்றை வாசித்து வாழ்வில் செயல்படுத்தி மாற்றம் கண்டோர் அனேகம் பேர். இலக்கின்றி பயணிப்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது”.

 

அருண் பால், முகநூல் எழுத்தாளர்:

தமிழ் மேல் பெரும் ஆர்வம் கொண்ட அனைவரும் கட்டாயம் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் படித்திருப்பீர்கள், சிலருக்கு ’பொன்னியின் செல்வன்’ படித்ததன் காரணமாகவே தமிழ் மேல் ஆர்வம் வந்திருக்கும்.  13401444_10154209596964929_1508677982_n

 

’பொன்னியின் செல்வ’னுக்கு நிகரான இன்னொரு வரலாற்று நாவல் உண்டு. அதுதான் ’வீரபாண்டியன் மனைவி’, ஆசிரியர் அரு.ராமநாதன்.

 

மூன்று பாகங்கள் கொண்ட பாண்டிய நாடு பற்றிய வரலாற்று நாவல். சமீப காலங்களாக சினிமாக்களில் veerapandian-manaivi-400x400-imadgzryxqg2g99nகதாநாயகர்கள் நெகடிவ் ரோல் செய்யும் படங்கள் வந்து ஹிட் அடித்து கொண்டு இருக்கிறது. அதற்கெல்லாம் ஆரம்பப்புள்ளி தான் இந்த நாவல். ஜனநாதன் என்ற சாதாரண இளைஞன் ஒரு மன்னனையும் அவன் வம்சத்தையும் அழிக்க நினைக்கிறான். இது தான் கதையின் கரு.

 

 

ஜனநாதன் யார், அவன் எதற்கு ஒரு மன்னனை பலி வாங்க துடிக்க வேண்டும், ஒரு சாதாரண இளைஞனால் அது எப்படி சாத்தியம் ஆகிற்று என்பதை அட்டகாசமான நடையில் சொல்லிருக்கிறார் ஆசிரியர். நகைச்சுவைத் திறன், பேச்சாற்றல், எவரையும் எளிதில் பேசி வசியப்படுத்தும் ஆற்றல் இதை மட்டும் வைத்தே இந்த இளைஞன் அனைத்தையும் சாதிக்கிறான். இது நாள் வரை என்னை கவர்ந்த நாவலில் வந்த கதாபாத்திரங்கள் வந்தியத்தேவனும் ஜனநாதனுமே. சோழ நாட்டு வீரத்தை சொல்ல ஒரு ’பொன்னியின் செல்வன்’ என்றால் பாண்டிய நாட்டு வீரத்தை சொல்ல ஒரு வீரபாண்டியன் மனைவி. வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் வாங்கிப் படியுங்கள்.

 

நகைச்சுவை விரும்பியா நீங்கள். அப்படி என்றால் உங்களுக்கு என்று ஒரு நகைச்சுவை வரலாற்று நாவல் உண்டு. அது கிரேஸி மோகன் எழுதிய் ’கே.பி.டி.சிரிப்பு ராஜசோழன்’. இம்சை அரசன் படத்தில் வரும் மன்னர் போல ஒரு மன்னர் நாட்டை ஆட்சி செய்கிறார், அவர் செய்யும் குறும்புகள், அவர் செய்யும் நகைச்சுவை கலாட்டாக்கள், இதை மையப்படுத்தியே கதை நகரும்.

 

நகைச்சுவை நாடகங்களில் மோகன் கலக்கி கொண்டு இருந்த நேரம். அவரைச் சந்தித்த ஒருவர், “நீங்கள் ஒரு வரலாற்றுக் கதை எழுத வேண்டும், அது உங்கள் ஸ்டைலில் அமைய வேண்டும், அது கற்பனையாக இருக்க வேண்டும்” என்று கூறினார். அதற்கு அடுத்தே இந்த கதையை மோகன் எழுதினார். வாய்ப்பு கிடைத்தால் வாங்கி படிங்கள். பக்கத்துக்கு பக்கம் 100% சிரிப்புக்கு உத்தரவாதம்.

 

கா.சு.துரையரசு, பத்திரிகையாளர்:13221143_10206453072630528_8235102436709909378_o (1)

”தமிழ்த் தொலைக்காட்சி உலக வரலாற்றில் ’வெண்ணிற ஆடை’ புத்தகம் முக்கியமானது.

அதிலும் ரியாலிட்டி ஷோக்களில் குவியும் மக்களின் சொல்லப்படாத கதைகள். திரையில் வராத, காட்ட முடியாத கதைகள். சமூகத்தை அச்சமூட்டும் கதைகள். சமூகத்தின் பொய் முகமூடிகளைக் கிழித்தெறியும் கதைகள் இவை.

 

இதன் ஆசிரியர் சரவணன் சந்திரன், எனது நண்பர். ஊருக்குத்தான் அவர் சரவணனும் சந்திரனும். எனக்கு அவர் ‘இந்தியா டுடே’ சரவணன்தான். ஐந்து முதலைகளின் கதை, ரோலக்ஸ் வாட்ச் ஆகிய அவரது இதர படைப்புகளும் முக்கிய நூல்கள்.saravanan chandiran

 

’சாம்பலாகக்கூட மிஞ்சாதவர்கள்’ என்ற கவின்மலரின் நூலை நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். பத்திரிகையாளரான (இவரும் எனது இந்தியா டுடே சகாதான்) கவின்மலர், இதுவரை சாதியக் கொடுமைகள், ஆணவக்கொலைகள் குறித்து சாடி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வந்திருக்கிறது. இதற்காக பல்வேறு அச்சுறுத்தல்கள் அவருக்கு வந்தது உண்மை.

 

saambalaagavum

அதனைப்புறந்தள்ளிவிட்டு கவின்மலர் போராடுவதும் உண்மை. தமிழக பண்பாட்டு வரலாற்றில் கவின்மலரின் இந்த நூல் முக்கியமானது. ’இப்பவெல்லாம் யார் சார் சாதி பார்க்குறாங்க?’ என்று கேட்கும் அனைவரும் நிச்சயம் இதைப் படிக்க வேண்டும்.

 

சில மாதங்களுக்கு முன்பே வந்துவிட்டது என்றாலும்கூட ‘நமக்கு எதுக்கு வம்பு?’ என்றா கார்ட்டூனிஸ்ட் பாலாவின் புத்தகம் என்னை இப்போதும் கவர்கிறது. கலகக்காரரான பாலா, எவ்வித அச்சமும் இல்லாமல் முகநூலில் நியாயத்துக்காக சண்டை போட்டுக்கொண்டிருப்பவர். அதில் அவருக்கு பின்னிறக்கமோ, கழிவிரக்கமோ, தயக்கமோ இருந்ததில்லை. இதனால் ஏகப்பட்ட விமர்சகர்கள், பகைவர்களை அவர் சம்பாதித்து வைத்திருbala namakku ethuku vambuக்கிறார்.

735865_4156476636554_1750839160_o

ஒரு நேர்மையான படைப்பாளியின் தரத்தை உரசிப்பார்க்கும் உரைகல்லே, அவனுக்கு வரும் எதிர்ப்பும் விமர்சனமும்தான். அந்த வகையில் வரைவிலக்கணத்துக்கு வசமாகப் பொருந்திவருகிறவர் அவர்.

 

 

சாதிகள், மதவாதம் ஆகியவற்றுக்கு எதிரான மனநிலை அவரது இந்நூலில் விரவிக்கிடக்கிறது. படைப்பாளிகள், சமூகத்தில் நிலவும் தீமைகளுக்கு எதிராக வாள் பிடிக்க வேண்டியதில்லை. தூரிகை பிடித்தால் போதும்.அந்தப்பணிதான் இந்நூல்”

இந்தியா டுடே நாணா (எ) நாராயணன்:

கர்ணனின் கவசம் நூல் என்னைக் கவர்ந்தது. ஆதித்த கரிகால13396923_10154209590874929_149752153_oன்… சகுனி…மணல் மனிதன் என…கடந்த காலம் …நிகழ்காலம்…எதிர்காலம் …என புதினம் கலந்த…சுகம்…கே.என்.சிவராமன் எழுத்து நடை வித்யாசம்.

 

வெண்ணிற ஆடை மூர்த்தி …சிரிக்க வைப்பவர் மட்டுமல்ல.  சிந்திக்கவும் வைப்பவர் என்பது பலருக்கும் தெரியாது.

karnanin kavasam

அவர் எழுதிய ’நமக்கு அல்வா கொடுத்தது யார்? என்ற நூலில் உள்ள 58 கட்டுரை
களில்…. ஒவ்வொன்றிலும்… நமக்குத் தெரியாத விஷயம் ஒன்றை தெரிந்துகொள்ளவைக்கும்…ஜாலியான பொது அறிவு நூல்…இந்த புத்தகத்தைப் படித்தவுடன்…அவர் மீது அன்பு மரியாதையாக மாறிவிடும்….உண்மை…!

 

யாருடைய எலிகள் நாம்? என்ற நூலை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.அரசாங்கமும்…விவசாயமும்… சமஸ்…வெளிப்படுத்தும் நியாயமான கோபம்….நம் எல்லோருக்குள்ளும் இருந்தாலும்…அவரது எழுத்துகளில்…அபாரம்!

 

 

 

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *