உங்கள் தொழிலுக்கு இலவச இணையதளம் வேண்டுமா?

நீங்கள் எந்தப் பொருளை வாங்கினாலும், விற்றாலும் எந்த சேவையை வழங்கினாலும் உங்களுக்கு ஒரு இணையதளம் இருப்பது இன்றைய நிலையில் அவசியம். உங்கள் நிறுவனத்தைப்பற்றி நீங்கள் ஒரு மணிநேரம் பேசுவதைக் காட்டிலும் உங்களது இணையதளம் பத்து நிமிடங்களில் நிறையவே பேசிவிடும்.

 

இணையதளம் இல்லாத நிறுவனங்களை தொழில் உலகில் யாரும் அவ்வளவாக மதிப்பது இல்லை. மேலும் உங்களைப் பற்றி அடிப்படைத் தகவல்களை உங்கள் இணையதளம் சொல்லி விடும் என்பதால் மிக அடிப்படையான தகவல்களுக்காக தொழில்முனைவோரை வாடிக்கையாளர்களோ, மற்றவர்களோ தொந்தரவு செய்ய வேண்டிய அவசியமில்லை.  மேலும் சொந்த இணையதளம் இல்லாத நிறுவனங்களைப் ‘பழைமைவாதிகள்’ என்று வணிக உலகம் என்றோ முத்திரை குத்திவிட்டது.

 

எல்லாம் சரிதான். ஆனால் இணையதளத்தை சொந்தமாக்கிக்கொள்வது எப்படி?

 

முதலில் நீங்கள் உங்கள் இணையதளத்துக்கு ஒரு பெயரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.       இதற்கு ஆண்டுக்கு ரூ.300 முதல் 600 வரை செலவாகலாம். அதன்பின்  இணையதளத்தை வடிவமைக்க வேண்டும். இதற்கு சர்வர் வாடகைக்கட்டணம், வடிவமைப்புக்கட்டணம் என்று பல்வேறு கட்டங்களில் செலவுகள் இருக்கின்றன.

 

எனக்கு தனித்தனியாக ஒவ்வொன்றுக்கும் அலைய முடியாது. அதேநேரத்தில் நான் ஒரு சிறுதொழில்முனைவோர். குறுகிய காலத்திற் காவது, குறைந்த கட்டணத்திற்கோ அல்லது இலவசமாகவோ யாராவது இணையதள வசதியை செய்துகொடுத்தால் நன்றாக இருக்கும்’ என்று நினைக்கிறீர்களா?

 

உங்களைப் போன்றவர்களுக்காகத்தான் இருக்கிறது இந்தியா கெட் ஆன்லைன் என்ற இணையதளம். சிறுதொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக கூகுள், ஹோஸ்ட் கேட்டர்  ஆகிய நிறுவனங்கள் கூட்டாக இந்த தளத்தை நடத்துகின்றன.

 

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இந்த தளத்துக்கு சென்று உங்களுக்குப் பிடித்தமான இணையதள பெயரை தேர்ந்தெடுக்க வேண்டியது தான். எடுத்துக்காட்டாக, நீங்கள் உடல்நலனை பாதுகாக்கும் சிறுதானிய விற்பனை நிறுவனத்தை தொடங்குவதாக வைத்துக்கொள்வோம். உங்களுக்கு நலம் என்ற பெயரில் நிறுவனம் இருக்கிறது. அதே பெயரில் இணையதளம் வேண்டுமென்று நினைக்கிறீர்கள்.

 

இந்த தளத்தின் முகப்பில் இதுகுறித்த விவரங்களை Get Started என்ற இடத்தில் கேட்டிருப்பார்கள். அதில் நீங்கள் Create my free website now  என்ற வாக்கியத்தை கிளிக் செய்தால் அடுத்த பக்கத்திற்கு   இத்தளம் உங்களை கொண்டுசெல்லும்.

 

அப்பக்கத்தில் Step 1 Enter Domain name you want to register  என்று இருக்கும்.  அதில் உங்களுக்கு தேவையான இணையதள பெயரை குறிப்பிடுங்கள். அதன்கீழ்  Check availbility   என்றிருக்கும். அதையும் நீங்கள் கிளிக் செய்ய வேண்டும். நலம் என்ற பெயர் வேறு எவராலும் சொந்தம் கொண்டாடப்படாமல் இருக்குமேயானால் www.nalam.in  என்ற இணையதளப்பெயரை இந்த தளம் இலவசமாகவே உங்களுக்காக வாங்கிக் கொடுக்கும். இதற்கான கட்டணத்தை இத்தளமே செலுத்திவிடுகிறது.

 

இணையதள பெயர் உறுதியான பிறகு இரண்டாவது கட்டத்திற்கு இத்தளம் உங்களை அழைத்துச்செல்லும். அதில் உங்களைப் பற்றிய விவரங்கள் (Pan  எண் உள்பட) கேட்கப்பட்டு இருக்கும். உங்களது வணிகம் தொடர்பான கேள்விகளையும் கேட்டிருப்பார்கள். இவற்றை எல்லாம் நீங்கள் இணையதளத்திலேயே தட்டச்சு செய்து பூர்த்தி செய்துவிடவேண்டும்.

 

அதன்பின்னர் 2 நாட்களுக்குள் நிறுவனத்தின் மங்களூர் அலுவலகத்தில் இருந்து உங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வரும். அதில் உங்களது விவரங்களை உரையாடல்வாயிலாக உறுதிசெய்துகொள்வார்கள். இது நடந்த உடனேயே உங்களுக்கு இணையதளப்பெயரும், இணையதளமும் சொந்தமாகிவிடும். இணைய தளத்தை நீங்கள் உங்களுடைய ரசனைக்கு ஏற்றாற்போல் வடிவமைத்துக்கொள்ளலாம்.

 

ஒருவேளை உங்களுக்கு இணையதள வடிவமைப்பு வம்பே வேண்டாமென்று நினைத்தால் அதற்கும் மாற்று வழி இருக்கிறது. இணையதளத்தில் என்னென்ன இருக்க வேண்டும்    என்று நினைக்கிறீர்களோ அவற்றையும், அவற்றுக்கான புகைப்படங்களையும் இவர்களுக்கு மின்னஞ்சல் செய்துவிட்டால் இணையதளத்தின் முதல் 6 பக்கங்களை இவர்களே வடிவமைத்து பதிவேற்றம் செய்துவிடுவார்கள்.

 

மீதப்பக்கங்களை  நீங்கள் வடிவமைத்துக் கொள்ள வேண்டும். மாறுதல்களை நீங்களே செய்யலாம். அதற்கான விவரங்களையும், தொழில் நுட்பத்தையும் உங்களுக்கு கொடுத்துவிடுவார்கள்.

 

இந்த வசதி ஓராண்டுக்கு முற்றிலும் இலவசம். இதையே நீங்கள் தனியார் நிறுவனங்களிடம் கொடுத்தால் ரூ.5000 முதல் ரூ50,000 வரை கட்டணம் வசூலித்துவிடுவார்கள்.

 

ஓராண்டு முடிந்தபிறகு கூட இவர்கள் அதிக கட்டணம் பெறுவதில்லை. ஆண்டுக்கு ரூ.1,800 தான் கட்டணமாக வசூலிக்கிறார்கள். இது தவிர, கூகிள்  ம்பை சினஸ் பேஜ் சேவையும் உங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.  நிறுவனங்களுக்கு பேருதவியாக இருக்கும் இதுபோன்ற இணையதள சேவைகளை நம்மவர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

 

-ம.விஜயலட்சுமி

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *