உலக வங்கியின் தலைவரானார் அஜய் பங்கா

உலக வங்கியின் தலைவரானார் அஜய் பங்கா

உலக வங்கியின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.  வரும் ஜூன் 3 ஆம் நாள் முதல் 5 ஆண்டுகள் அவர் இந்தப் பதவியில் இருப்பார்.

இதற்கு முன்பு ஜெனரல் அட்லாண்டிக், மாஸ்டர் கார்டு ஆகிய நிறுவனங்களின் தலைமைப்பொறுப்பை வகித்திருக்கிறார். சர்வதேச வணிகக்கூட்டமைப்பின் கெளரவ தலைவராக 2020-22 காலகட்டத்தில் பணியாற்றியிருக்கிறார்.

தி சைபர் ரெடினெஸ் இன்ஸ்டிடியூட்டின் இணை நிறுவனரான பங்கா, எகனாமிக் கிளப் ஆஃப் நியூயார்க் அமைப்பின் துணைத்தலைவராக செயல்பட்டிருக்கிறார். அமெரிக்க செஞ்சிலுவைச்சங்கம், க்ராஃப்ட் ஃபுட்ஸ், டவ் முதலிய அமைப்புகளின் இயக்குநரவையை அலங்கரித்திருக்கிறார்.  இந்தியாவின் உயர் விருதான பத்மஸ்ரீ விருதைப்பெற்றிருக்கிறார்.

அண்மையில் உலக வங்கியின் செயல் இயக்குநர்கள், 2011ல் பங்குதாரர்கள் அளித்த ஒப்புதலுக்கு இணங்க புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறையைத் தொடங்கின்ர். அவர்களால் வெளிப்படையான முறையில் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

 

இப்புதிய பதவியின்மூலமாக ஐ.பி.ஆர்.டி, ஐ.டி.ஏ,  ஐ.எஃப்.சி, எம்.ஐ.ஜி.ஏ, ஐ.சி.எஸ்.இ.டி ஆகிய அமைப்புகளிலும் அவற்றின் நிர்வாகக் குழுக்களிலும் அவ்ருக்கு இடம் கிடைத்திருக்கிறது.

உலகின் முக்கிய நிறுவனங்கள், பன்னாட்டு அமைப்புகளில் இந்திய வம்சாவளியினர் தலைமைப்பொறுப்புகளுக்கு உயர்வது அதிகரித்துவருகிறது. அந்த வரிசையில் தற்போது அஜய் பங்காவும் சேர்ந்திருக்கிறார்.

-பால முருகன்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *