புது ரூட்டு….கையில துட்டு! -அசத்தும் தொழில்முனைவோர்!

 

வென்றவர்கள் போட்டு வைத்த பாதையில் பயணம் செய்வது பழைய தொழில் பாணி. புதிய கோணத்தில் சிந்தித்து இன்றைய தொழில்முனைவோர் தாங்கள் சார்ந்த தொழிலை வெற்றிகரமாகக் கொண்டு செல்கிறார்கள். இந்தப்போக்கு தொழில் தொடங்கவேண்டும் என்கிற ஆர்வத்தில் இருக்கும் பலருக்கும் மிகப் பெரிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்து வருகிறது.

 

உணவுத் தொழிலில் வந்துவிட்டன புதுப்புது மாற்றங்கள்!

முன்பெல்லாம் உணவகங்களுக்கு சென்று உணவு சாப்பிடும் சூழ்நிலை இருந்தது. ஆனால் இப்போதோ, ‘ஹோம் டெலிவரி’ என்கிற புதிய சிந்தனை புழக்கத்திற்கு வந்தவுடன் வெளி உணவுகளை வீட்டில் இருந்தபடியே சுவைக்கும் சூழ்நிலை வந்துவிட்டது.

 

அதிலும் குறிப்பாக வீட்டிலேயே தயாரிக்கப்படும் உணவுகளை முகநூல்,வாட்ஸ்-அப் போன்ற சமூக ஊடகங்களின் வழியாக விளம்பரப்படுத்தி தேவைப்படுபவர்களின் வீட்டிற்கே அந்த உணவுகளை கொண்டுபோய் சேர்க்கும் உணவு சார்ந்த தொழில்கள் தற்போது அதிகம் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றன.

 

fried-rice-762362_640

அதிக முதலீடு தேவைப்படாத இதுபோன்ற உணவுசார் தொழில்கள் நல்ல லாபத்தையும் தொழில் முனைவோருக்குக் கொடுத்து வருகின்றன.

இதன் நீட்சியாக “உங்களுக்கு எந்த உணவகத்திலிருந்து என்ன உணவு வேண்டுமென்று சொல்லுங்கள் நாங்கள் அதை வாங்கி உங்கள் வீட்டிற்கே வந்து உங்களிடம் தருகிறோம்” என்று சொல்லும் ஸ்விக்கி (SWIGGY) மாதிரியான ஆன்லைன்  நிறுவனங்கள் வெற்றிநடை போடுகின்றன.

 

திருமண பர்ச்சேஸ் ஆன்லைனில்!                               

முன்பெல்லாம் வீட்டில் திருமணம் வைத்தால் பத்திரிக்கை அச்சடிப்பது, பட்டுப்புடவை வாங்குவது, தாம்பூலப்பை கொடுப்பது, மறு பரிசு (RETURN GIFTS) என்று சொல்லப்படும் பரிசுப்பொருட்கள் போன்றவற்றுக்காக ஒவ்வொரு இடமாக அலைய வேண்டியிருக்கும்.

present-1417611_640

ஆனால் இப்போதெல்லாம் ஆன்லைன் நிறுவனங்கள் பலவும் திருமணம் சார்ந்த இதுபோன்ற அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்து விடுகின்றன.

 

இருந்த இடத்தில் இருந்துகொண்டு திருமண நிகழ்வுக்கான அனைத்தையும் வாங்குவது வாடிக்கையாளர்களின் நேரத்தை, அலைச்சலை பெரிய அளவிற்கு மிச்சப்படுத்துகின்றன.  தொழில் முனைவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

 

ஆரோக்கியம்,அழகு-எல்லாமே மாறும்

முன்பெல்லாம் ரத்தப் பரிசோதனைக்காக  ஆய்வகங்களுக்குச் செல்லவேண்டிய கட்டாயம் இருந்தது. குறிப்பாக வயதான சர்க்கரை நோயாளிகள் காலையில் சாப்பிடாமல் வெறும் வயிற்றோடு ஆய்வகங்களுக்குச் சென்று ரத்தப் பரிசோதனை செய்துகொள்வதில் பெறும் சிரமங்களைச் சந்தித்தார்கள்.

 

diabetes-1724617_640

ஆனால் இப்போதோ வீட்டுக்கே வந்த ரத்த மாதிரியை எடுத்துக்கொண்டு செல்லும் வேலையை ஆய்வகங்கள் செய்யத் தொடங்கிவிட்டன.

குறிப்பாக பெருநகரங்களில் மருத்துவர்கள் வீட்டிற்கே வந்து மருத்துவம் பார்க்கும் வசதியும் வந்துவிட்டது.

 

உடல் நலனைப் பேணுவதில் காட்டும் அதே ஆர்வத்தை மக்கள், குறிப்பாக பெண்கள் அழகைப் பேணுவதிலும் காட்டுகின்றனர்.

ஊருக்கு ஊர் பெருகிவரும் அழகுநிலையங்களே இதற்கு சாட்சி. ஆனால் வேலைக்குச் செல்லும் பெண்கள் நேரமின்மையால் அழகு நிலையங்களுக்கு செல்வதில் சிரமத்தை சந்திக்கின்றனர்.

 

haircut-834280_640

இதை ஒரு  நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்ட அழகுநிலையங்கள் பலவும்  வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே வந்து அழகுசிகிச்சைகளைத் தர ஆரம்பித்துவிட்டன.

என்ன, அதற்கு கொஞ்சம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்…அவ்வளவுதான்!

 

ஒருவரின் தேவை, மற்றவருக்குத் தொழில்! அதனால் உலகின் தேவைகளை உற்றுநோக்கினால் அது சார்ந்து சற்று புதிதாக சிந்தித்தால் நமக்கான தொழிலை நாம் கண்டடையலாம்.சரிதானே!

-சு.கவிதா.   

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *