தி.மு.க. தேர்தல் அறிக்கை: ஒரு அலசல்

புதிய தொழில்முனைவோருக்கும் சிறுதொழில் துறையினருக்கும் தி.மு.க. தேர்தல் அறிக்கை எந்த அளவுக்கு சாதகம்? இதோ, சிறு அலசல்!

 

தி.மு.க.வின் வாக்குறுதிகள்:146948544_ff1ea5dff2

 

*நடுத்தர, பெருந்தொழில் நிறுவனங்கள் தொடங்க முன்வருவோருக்கு 5 ஆண்டுகளுக்கு வரி கிடையாது.

*அதுபோன்ற நிறுவனங்கள் தங்கள் ஊழியர் எண்ணிக்கையில் 75% ஐ தமிழக இளைஞர்களாக இருக்கும் வகையில் வேலை அளித்தால், 8 மாத சம்பளத்தில் குறிப்பிட்ட பகுதியை அரசே வழங்கும் (ஒரு முறை மட்டும்).

*நலிவடைந்த சிறு தொழில்களைப் புனரமைக்க ஆட்சி அமைந்த 100 நாட்களுக்குள் வல்லுநர் குழு உருவாக்கப்படும்.

*மூலப்பொருட்களை குறைந்த விலையில் வெளி மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்ய சிறுதொழில் நிறுவனங்களுக்கு உதவி.

*அனைத்து தொழிற்சாலைகளுக்கும் தடையற்ற மின்சாரம்

*தமிழகத்தில் தொழில் தொடங்குவோருக்கு 100 நாட்களுக்குள் ஒற்றை7ச் சாளர முறையில் அனுமதி. அவ்வாறு அனுமதி கிடைக்க தாமதமானாலும் தொழிலைத்தொடங்கிக்கொள்ளலாம். அனுமதி அளிக்கப்பட்டதாகவே பொருள்.

*கொங்கு மண்டலத்தில் பிளாட்டினம் அகழ்ந்தெடுக்கும் பணி தொடங்கப்படும்.

*சர்க்கரை ஆலைகளுக்கு 10% வரை எத்தனால் உற்பத்திக்கு அனுமதி

*கன்னியாகுமரியில் ரப்பர் தொழிற்சாலை தொடங்கப்படும்.

*அரசு, பொதுத்துறை கொள்முதலில் 15% சிறு ,குறு தொழிற்சாலைகளிடமிருந்தே வாங்க நடவடிக்கை. விலைப்புள்ளியில் 10% விலைச்சலுகை.

*மதுரை-தூத்துக்குடி வரையிலான பகுதிகளில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படும்.

*மதிப்புக்கூட்டும் பயிற்சி அளிக்கப்பட்டு, அதன்மூலம் தொழில்முனைவோர் உருவாக்கப்படுவர்.

*புதிய தொழில் தொடங்க முன்வரும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் தரப்படும்.

*குறுந்தொழில்களுக்கு குறைந்த வட்டியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் கடனுதவி (ரூ.25 லட்சம்வரை) வழங்கப்படும்.

*கோவையில் வார்ப்பட நிறுவனம், திண்டுக்கல், வேலூர், சென்னையில் தோல்பொருள் பூங்கா தொடங்கப்படும்.

download (3)

*கிருஷ்ணகிரி, நத்தம், திண்டுக்கல் பகுதிகளில் மாம்பழக்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகள்.

*கோழிப்பண்ணை அமைக்க ஊராட்சி ஒன்றிய அளவில் அனுமதி

*தமிழகத்தில் விமான உதிரிபாக தொழிற்சாலை தொடங்கப்படும்.

*மாற்றுத்திறனாளிகளுக்கு ஐ.டி.ஐ.களில் பயிற்சி அளித்து மானியத்துடன் கடன் வசதி தரப்படும்.

*சிறு வியாபாரிகளுக்கு ’வணிகர் சுய உதவிக்குழுக்கள்’ அமைக்கப்படும்.

*ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்த ஆட்டோ வாங்க ரூ.10000 மானியம்.

*இருபத்தைந்து லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி.

*புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு உறையுள் மையங்கள் (incubation centres) தொடங்கப்படும். முதலீட்டாளர் சந்திப்பு, கடனுதவி வழங்கப்படும்.

*1 லட்சம் பட்டதாரிகளுக்கு ரூ.1 லட்சம் கடனுதவி தந்து சுய தொழில் தொடங்க உதவி செய்யப்படும்.

 

முனைவின் பார்வையில்:

 

சாதகம்:

*புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு அடைகாப்பகங்கள் (incubation centres) உருவாக்கப்படும் என்று அறிவித்திருப்பது நல்ல அறிவிப்பு. பாராட்டத்தக்க அறிவிப்பு.

*ரூ.1 லட்சம் வீதம் 1 லட்சம் பேருக்கு தொழில் தொடங்க கடனுதவி என்பது குறுந்தொழில் முனைவோருக்கு பயனளிக்கும்.

* குறுந்தொழில்களுக்கு குறைந்த வட்டியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் கடனுதவி (ரூ.25 லட்சம்வரை) வழங்கப்படும் என்பது சிறப்பான அறிவிப்பு.

*மதிப்புக்கூட்டி விற்பனை செய்வது என்பது இன்றைய காலத்தின் கட்டாயம். அதை உணர்ந்து இளைஞர்களுக்கு மதிப்புக்கூட்டும் பயிற்சி அளிக்கப்பட்டு, அதன்மூலம் தொழில்முனைவோர் உருவாக்கப்படுவர் என்ற அறிவிப்பை முனைவு மகிழ்ச்சியோடு வரவேற்கிறது.

* முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் தரப்படும் என்பது மிகச்சிறப்பான அறிவிப்பு.

 

விமர்சனம்:

*புதிய தொழில்முனைவோருக்கு வழிகாட்ட தொழில்முனைவோர் மையம் போன்ற அமைப்புகள் உருவாக்குவது பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை.

*தொழில்முனைவோரைத் துன்புறுத்து15ம்

சிவப்பு நாடா நடைமுறைகள், கையூட்டு ஆகியவற்றை ஒழிப்பது குறித்து வாக்குறுதிகள் இடம்பெற்றிருக்கலாம்.

 

*சிறுதொழில், பெருந்தொழில்களுக்கு அளித்துள்ள முக்கியத்துவத்தை புதிய தொழில் முனைவோருக்கும் (காப்புரிமை செய்ய உதவி, தொழிற்சாலை, அலுவலக மனை ஒதுக்கீடு, ஏற்றுமதி தொழில் முனைவோர் ஆகியவை) கொடுத்திருக்கலாம்.

 

மொத்தத்தில் சிறுதொழில் துறைமீதும் முதலீட்டாளர்கள்மீதும் கவனம் கொண்டதாக தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இருக்கிறது.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *