அ.தி.மு.க. அரசு செய்ய வேண்டியது என்ன?

தமிழக அரசியலில் 32 ஆண்டுகளுக்குப்பிறகு ஆளுங்கட்சியான அ.இ.அ.தி.மு.க., ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது.

ஆட்சியைத் தொடர இருக்கும் முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு முனைவு, நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

புதிய அ.இ.அ.தி.மு.க அரசு தமிழக தொழில்முனைவோருக்கு செய்ய வேண்டிய விஷயங்கள் என்னவென்று  பார்ப்போம்!

 

1.தேர்தல் அறிக்கையில் சொன்ன புதுமைத்திட்டங்களை அமல்படுத்துங்கள்!

 

start-1063441_640

மற்ற கட்சிகளோடு ஒப்பிடுகையில் தொழில்முனைவோரின் மனநிலையைப் புரிந்துகொண்டு தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை அ.இ.அ.தி.மு.க.வுடையது. அதில் கீழ்க்காணும் அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.

*முதல் தலைமுறை தொழில்முனைவோர் தொழில் தொடங்க மானியம்

*ரூ.5 லட்சம் வரையிலான தொழில் தொடங்குவோருக்கு 25% மானியம் தொடரும்.

*புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் அடுக்குமாடி தொழில் வளாகங்கள் ஏற்பத்தப்படும்.

*தனியார் துறை அமைப்புகள், புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் தொழில் குழுமங்களை (cluster) அமைத்தால் 10 கோடி அளவுக்கு 50% மானியம் அளிக்கப்படும்.

*சிட்கோ எனப்படும் சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து தனியார் தொழிற்பேட்டைகளை நிறுவினால் 10% வரை மூலதனம் வழங்கப்படும்.

*அம்மா ஈடு உத்தரவாத நிதியம் (Amma Collateral Gurantee Fund) ரூ.100 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்படும். இதன்மூலம் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பிணையமின்றிக் கடன் பெற முடியும்.

*முதல் தலைமுறை தொழில்முனைவோர் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களைத் தொடங்குவோருக்கு உதவ ரூ.500 கோடியில் ’அம்மா துணிகர முதலீட்டு நிறுவனம்’ ஏற்படுத்தப்படும்.

*அரசு மற்றும் அரசுத்துறைகளுக்கு செய்யப்படும் கொள்முதல்களில் 20% சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களிடமிருந்துதான் வாங்கப்படும்.

*ஊரகப்பகுதி குறுந்தொழில் முனைவோருக்கு தனி நிதியம்( funding agency) உருவாக்கப்படும்.

*குறுந்தொழில் முனைவோருக்கு விலையின்றி தொழிற்கூடங்கள் வழங்கப்படும்.

 

-இந்த வாக்குறுதிகளுக்கு அ.இ.அ.தி.மு.க அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முனைவு கேட்டுக்கொள்கிறது. இவற்றுக்கு நிதி ஒதுக்கீடு, அரசாணை வெளியீடு, கண்காணிப்புக்குழுக்கள் உருவாக்கம் ஆகியவற்றை எவ்வளவு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று தமிழக தொழில்முனைவோர் சார்பாக முனைவு கேட்டுக்கொள்கிறது.

 

2.வெளிப்படையான டெண்டர்:

ரூ.1 கோடி வரையிலான அரசு கொள்முதல்களில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இவற்றுக்கான டெண்டர்கள் இணையதளம் மூலமாகவே நடத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் வெளிப்படைத்தன்மையும் கிடைக்கும். தகுதியான நிறுவனங்களுக்கு ஆதரவும் கிடைக்கும்.

 

3.ஏஞ்செல், துணிகர முதலீட்டாளர் மாநாடு:

இன்றைய நிலையில் ஏஞ்சல் முதலீட்டாளர்கள் (Angel Investors), துணிகர முதலீட்டாளர்கள் (venture capitalists) ஆகியோரை தனியார் அமைப்புகளே ஒருங்கிணைத்து தொழில்முனைவோருடன் சந்திப்பை ஏற்படுத்துகின்றன. இந்த சந்திப்புகளில் கலந்துகொள்ள கட்டணம் பெறப்படுகிறது. கிராமப்புற தொழில் முனைவோர் இவற்றில் கலந்துகொள்ள முடிவதில்லை. இவ்வகையான கூட்டங்களில் ஆங்கிலம்தான் பரிமாறப்படுகிறது. இவற்றுக்கு மாற்றாக, தமிழக அரசே இதுபோன்ற கூட்டங்களை முக்கிய நகரங்களில் நடத்தலாம். வெளி உலகுக்குத்தெரியாத கண்டுபிடிப்பாளர்கள், புதிய தொழில்முனைவோர் முதலீட்டைப்பெற்று தொழில் தொடங்குவர்.

refugees-1020274_1280

 

  1. கடனுதவி:

வணிக வங்கிகள் மட்டுமல்லாது, கூட்டுறவு வங்கிகளிலும் தொழில் முனைவோருக்கு சிறிய கடனுதவிகளை வழங்கி தொழில் தொடங்க ஊக்குவிக்க ஆவன செய்தால் அது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். மாவட்ட தொழில் மையங்கள், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகங்கள், நபார்டு வங்கி ஆகியவற்றின்மூலம் பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

 

5.தொழில்முனைவோருக்கு தனி  இணையதளம்:

வேலைவாய்ப்புத்துறைக்கு இணையதளம் இருப்பதுபோலவே தமிழக தொழில்முனைவோரை ஒருங்கிணைக்க தனியாக ஒரு இணையதளத்தை அரசு உருவாக்கலாம். அவர்களுக்கு உதவும் தகவல்கள், விண்ணப்பங்கள், வழிகாட்டுதல்களை அதில் இடம்பெறச் செய்யலாம். அரசு, தொழில்முனைவோர், வங்கிகள், முதலீட்டாளர்கள் –ஆகியோருக்கு இடையே ஒரு பாலமாக அந்த தளம் செயல்படலாம்.

 

6.கலைக்கல்லூரிகளில் தொழில்முனைவோர் மையங்கள்:

பி-ஸ்கூல்களில்தான் தொழில்முனைவோர் மையங்கள் இருக்க வேண்டும் என்பதில்லை. அரசு கலை-அறிவியல் கல்லூரிகளிலும் அவற்றை உருவாக்கி புதிய தொழில் முனைவோரை உருவாக்கலாம். அதற்கு அ.இ.அ.தி.மு.க. அரசு முயற்சி எடுக்க வேண்டும். இனம் கண்டறியப்பட்ட இளம் மூளைகளைத் தொழில் முனைவோராக ஆக்க எல்லா உதவிகளையும் அரசு செய்யலாம்.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *