சிகையலங்காரத் தொழிலாளர்களுக்கு கைகொடுக்கும் ஜில்லெட்

சிகையலங்காரத் தொழிலாளர்களுக்கு கைகொடுக்கும் ஜில்லெட்

கொரொனா ஊரடங்குக்குப் பிறகு கார்ப்பரேட் நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்கள்,  தொழில் கூட்டாளிகளின் பாதுகாப்பு மற்றும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான உதவிகளை செய்யத்தொடங்கியிருக்கின்றன.

அவ்வகையில் வில்கின்சன் சுவார்ட் ™, 365™, 7ஓ’க்ளாக் ™ பிளேடுகள் மற்றும் ஜில்லெட் ஃபோம்ஸ் & ஜெல்ஸ் போன்ற பொருட்கலை உற்பத்தி செய்யும் ஜில்லெட் நிறுவனம் அடுத்ததாகக் களமிறங்கியிருக்கிறது.

துவக்கத்தில், ஜில்லெட் நாடு முழுவதும் 50,000 முடிதிருத்துவோரைக் குறிவைத்து ஜில்லட் பார்பர் சுரக்ஷா திட்டத்தை அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஜில்லெட் முடிதிருத்தும் நபர்களுக்கு ரூ.1 லட்சம்வரை காப்பீடு வழங்கப்படும்.

அதேபோல  புகழ்பெற்ற ஒப்பனையாளர் ஆலிம் ஹக்கீமுடன் இணைந்து உருவாக்கிய வீடியோக்கள் மூலம் பாதுகாப்பான செயல்பாடுகளைப் பற்றி அவர்களுக்கு அறிவுறுத்தப்படும்.

அதேபோல  2 மாதங்களுக்கான தேவையை உள்ளடக்கிய சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தயாரிப்பு கருவிகள் (முக கவசம், சானிட்டைசர் மற்றும் ஜில்லெட் தயாரிப்புகள் அடங்கிய ஒரு சிறப்பு தொகுப்பு) வழியாக அவர்களின் வணிகத்துக்கு ஆதரவு அளிக்கும். .

ஜில்லெட்டின் வீடியோவை இங்கே காண்க:

https://www.youtube.com/watch?v=z7JRY496OMc&t=5s

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *