இணையப் பயிற்சி மாணவர் சேர்க்கையில் 124% உயர்வு-ஆகாஷ் நிறுவனம் அதிரடி

இணையப் பயிற்சி மாணவர் சேர்க்கையில் 124% உயர்வு-ஆகாஷ் நிறுவனம் அதிரடி

  கொரொனா பெருதொற்று பொது முடக்கம் பல்வேறு துறைகளை முடக்கிப் போட்டிருப்பது உண்மை. அதே நேரத்தில் இணைய வழி சேவை நிறுவனங்கள் பலவற்றுக்கும் புதிய வாய்ப்புகளையும் திறந்துவிட்டிருக்கிறது.

முன்னணி தேர்வு தயாரிப்பு கல்வி நிறுவனமான ஆகாஷ் (ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீஸஸ் லிமிடட்) தனது இணைய வழி கற்றல் பிரிவை நன்றாகவே முடுக்கிவிட்டிருக்கிறது. தற்போதைய ஊரடங்கு காலகட்டத்தில் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் இதற்கு முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில், இந்தக் காலாண்டில் மாணவர்கள் சேர்க்கை 124% அதிகரித்திருக்கிறது.

ஆகாஷ் ஐடியூட்டர் செயலி (iTutor app) பயன்பாட்டாளர்கள் அத்துடன் ஆகாஷ் நேரடி வகுப்பு(Live Class) ஆகியவற்றின் வளர்ச்சியும் இதில் அடக்கம்.

இந்நிறுவனத்தின் இயக்குநர் ஆகாஷ் சௌத்ரி, “கோவிட்-19 வைரஸால் பாதிப்புக்கு உள்ளான  கல்வி செயல்பாடுகளை இந்த வழிகளில் நாம் மீட்டெடுக்க முடியும்” என்றிருக்கிறார்.

ஆகாஷ் லைவ், ஆகாஷ் ஐடியூட்டர் மற்றும் ஆகாஷ் பிராக்டெஸ்ட் போன்ற திட்டங்களை ஆகாஷ் டிஜிட்டல் வழங்குகிறது.

ஆகாஷ் லைவ்  ஆகாஷின்   ஆசிரியர் குழு மூலம் இணைய வழி வகுப்புகளை நடத்துகிறது.  பதிவு செய்த காணொலி காட்சி விரிவுரைகளை கண்டு மாணவர்கள் அவர்கள் கல்வி கற்கும் திறனுக்கேற்றவாறு கல்வி கற்க  ஆகாஷ் ஐடியூட்டர் வழிசெய்கிறது

மாணவர்கள் தங்களது கல்விப் பயிற்சி மையங்களுக்கு வெளியே உள்ள மாணவர்களுடன் தங்களை ஒப்பிட்டு சோதித்துக் கொள்ள ஆகாஷ் பிராக்டெஸ்ட்  உதவுவதாக அந்நிறுவனம் தெரிவிக்கிறது.

JEE, NEET மற்றும் 8-12 பள்ளி, வாரியம், மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்து கொள்ள இணைய வழிப்பயிற்சியை  மாணவர்களுக்கு  ஆகாஷ் டிஜிட்டல் வழங்குகிறது.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *