கோடீஸ்வரரை அசைத்துப்பார்த்த  சாமானியர்கள்

கோடீஸ்வரரை அசைத்துப்பார்த்த  சாமானியர்கள்

உங்களுக்கு “டெஸ்லா”(TESLA) நிறுவனம் பற்றித் தெரியும் தானே? தெரியாதவர்களுக்காக இந்தத் தகவல். டெஸ்லா என்பது ஒரு எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனம்.

எலக்ட்ரிக் கார்களை தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் அதை விற்பதிலும் முன்னணி நிறுவனமாக டெஸ்லா திகழ்ந்து வருகிறது.

இந்த டெஸ்லாவுக்கு மற்றுமொரு சிறப்பம்சம் இருக்கிறது. அதாவது இந்த நிறுவனம் பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்களின் பங்களிப்போடு செயல்பட்டு வருகிறது.

அதாவது எப்படி நம் ஊரில் L&T என்று அழைக்கப்படும் லான்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் தனி நபர் ஒருவரது கட்டுப்பாட்டில் இயங்காமல் பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்களின் பங்களிப்பில் இயங்கி வருகிறதோ அப்படித்தான் இந்த டெஸ்லா நிறுவனமும் இயங்கி வருகிறது.

இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் எலன் மஸ்க். இந்த ஆசாமியை சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். இவர் ஒரு பெரும்பெரும் கோடீஸ்வரர். இன்றைய தேதிக்கு 2010 கோடி அமெரிக்க டாலர்கள் இவரிடம் இருக்கின்றன.

அடிப்படையில் எலன் ஒரு பொறியியலாளர். இதன் காரணமாக ஸ்பேஸ்எக்ஸ் (SPACE X) என்கிற விண்வெளி நிறுவனத்தையும் இவர் நடத்தி வருகிறார். விண்கலங்களை தயாரித்து இவரது நிறுவனம் அவற்றை விண்வெளிக்கு அனுப்புகிறது.

இதுதவிர செவ்வாயில் மனிதர்களை குடியேற வைக்கும் திட்டங்களையும் இவரது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் முன்னெடுத்திருக்கிறது. இதுதவிர பல்வேறு தொழில்கள் மூலமாகவும்  பணம் இவரது கதவைத் தட்டோ தட்டு என்று தட்டுகிறது.

நிலைமை இப்படி இருக்க, தான் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் டெஸ்லா நிறுவனத்தையும்  முற்றிலும் தன்னுடையதாக மாற்றிக்கொள்ள எலன் முடிவெடுத்தார்.

இதன்படி முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது பங்குகளை 420 டாலர்கள் பெற்றுக்கொண்டு விற்றுவிடலாம் என்றும் அறிவிப்பு ஒன்றை இவர் வெளியிட்டார்.  இந்த அறிவிப்பு பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.

இதன் அடுத்தகட்டமாக பொதுநிறுவனம் ஒன்று தனிநபர் ஒருவரது கைக்குப் போவதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று பொதுமக்கள் தங்களுடைய எதிர்ப்பை தைரியமாகப் பதிவு செய்ய ஆரம்பித்தார்கள்.

மக்களின்,மற்ற முதலீட்டாளர்களின் இந்தக் கடும் எதிர்ப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்த எலன்மஸ்க் டெஸ்லா நிறுவனத்தை தனது வசப்படுத்த இருந்த முடிவைக் கைவிடுவதாக அறிவித்திருக்கிறார்.

சாமானியர்கள் ஒன்று சேர்ந்தால் என்ன நடக்கும் என்பதை தொழில் உலகுக்கு உரக்கச் சொல்லியிருக்கிறது இந்த நிகழ்வு!

-திருமாமகள்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *