யூ டியூப்: டப்பிங் செய்யும் வசதியும் வந்தாச்சு!

யூ டியூப்: டப்பிங் செய்யும் வசதியும் வந்தாச்சு!

யூ டியூபர்களுக்கு ஒரு நல்ல சேதி!

இதுவரை, நாம் அறிந்த மொழியில் மட்டுமே யூ டியூப் காணொளிகளைப் பதிவேற்றம் செய்துவந்தோம் இல்லையா! இனி உங்கள் சொந்த  வீடியோக்களை நீங்கள் அறிந்திராத எந்தவொரு மொழிக்கும்  இலவசமாக டப்பிங் செய்யலாம்.

இதற்காக  விரைவில் ஒரு புதிய அம்சத்துடன் செயல்பட போகிறது யூடியூப் . இதற்காக  அலோவ்ட்  (ALOUD) என்ற தயாரிப்பை யூடியூபில் வீடியோ பதிவேற்றம் செய்வோர் பயன்படுத்துவதற்காக அறிமுகம் செய்திருக்கிறது .

Image by Gerd Altmann from Pixabay

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுடபத்தின்  உதவியுடன் இயங்கும் டப்பிங் தயாரிப்பான அலோவ்ட் (ALOUD) என்ற வசதியை கடந்த ஆண்ட்  கூகுள் அறிமுகப்படுத்தியது .

யூடியூபர்கள் பதிவேற்றம் செய்யும் வீடியோவை இந்த அலோவ்ட் தானாகவே ட்ரான்ஸ்கிரிப்ட் செய்துவிடும் . அதுமட்டுமில்லாமல், டப்பிங் செய்வதற்கு முன் ட்ரான்ஸ்கிரிப்ஷனை மறு ஆய்வு செய்து திருத்திக்கொள்ளவும் வசதியுண்டு.  

இதுவரை தாய்மொழி தவிர,  மற்ற மொழிகளில் வீடியோக்களை உருவாக்க விரும்பியவர்கள் ஏதாவது செயலியையோ, அல்லது  ட்ரான்ஸ்கிரிப்ஷன் சேவை வழங்கும் மூன்றாவது நபர்களை சார்ந்து இருக்க வேண்டிய நிலைமை இருந்தது . இனி அந்த தொல்லைகள் எதுவுமில்லாமல் , மிக எளிதாக இப்பணியைச் செய்துவிடலாம்  . 

வெறும் கியர் ஐக்கானை கிளிக் செய்து, ஆடியோ டிராக்கை தட்டி மொழியையும் தேர்ந்தெடுத்துவிட்டால்  பார்வையாளர்கள் தாங்கள் கேட்க விரும்பும் மொழியில் காணொளிகளைக் கண்டு மகிழலாம் . 

தற்போது அலோவ்ட் (ALOUD) -ல் ஆங்கிலம் , ஸ்பானிஷ் ,மற்றும் போர்ச்சுகீய மொழியில் டப் செய்ய வசதி உள்ளது . விரைவில் இந்தி , பஹாசா மற்றும் இந்தோனேஷிய மொழிகளை உட்படுத்த திட்டம் இருப்பதாக கூகுள் அறிவித்துள்ளது.

அதெல்லாம் இருக்கட்டும்….

தமிழ் காணொளிகளை பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்யும் வசதியும், பிற மொழிகளைத்தமிழில் டப் செய்யும் வசதியும் எப்போது வரும் அய்யா?

-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.

(Image by Gerd Altmann from Pixabay) 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *