புத்தொழில் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை

புத்தொழில் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில்  முக்கிய அம்சமாகத் தொழில் முனைவோர் பார்ப்பது, புத்தொழில் நிறுவனங்களுக்கான (start up) சலுகைகளைத்தான். அந்த வகையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை விஷயத்தில் ஒரு சிறிய ஆசுவாசம் கிடைத்திருக்கிறது. இதனை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் தனது உரையில் வெளியிட்டிருக்கிறார்.

May be an image of 1 person (pic courtesy: FB of Nirmala Sitaraman)

 

பொதுவாக, புத்தொழில் நிறுவனங்களுக்கு வருமான வரி செலுத்துவதிலிருந்து குறித்த காலத்துக்கு சலுகை வழங்கப்படுவது வழக்கம். தற்போதைய நிலவரப்படி இவ்வாண்டு மார்ச் 31 வரை பதிவு செய்யப்படும் நிறுவனங்களுக்கு இந்த சலுகை பொருந்தும். தற்போதைய நிதிநிலை அறிக்கையின்படி, இது மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுகிறது. அதாவது, 31, மார்ச் 2024 வரை இணையும் நிறுவனங்களும் வருமான வரிச் சலுகைகளைப் பெறமுடியும்.

அதேபோல, கிராமப்புறங்களில் உள்ள வேளாண் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக தனி நிதியம் ஒன்றும் தொடங்கப்பட உள்ளது. விவசாயிகள் அன்றாடம் சந்திக்கும் சவால்களைக் களைவதற்கான தீர்வுகளை இத்தொழில்முனைவோர் கண்டறிந்து, அதற்கான தொழில்களை மேம்படுத்தவேண்டும் என்பதுதான் விதிமுறை.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *