ரூ.7614 கோடியில் ஓலா மின்சார வாகனத் தொழிற்சாலை

ரூ.7614 கோடியில் ஓலா  மின்சார வாகனத் தொழிற்சாலை

பிரபல மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான ஓலா எலெக்ட்ரிக், ரூ.7614 கோடி செலவில் தமிழகத்தில் மின் வாகன தொழிற்சாலை விரிவாக்கத்தை செய்ய இருக்கிறது.

Image by Francis Ray from Pixabay

இதற்கான ஒப்பந்தத்தில் ஓலா நிறுவனமும் தமிழக அரசும் இணைந்து பிப்.18 ஆம் தேதி கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின்மூலம் 3000 பேருக்கும் அதிகமான ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

 

தனது விரிவாக்கப்பணிகளின்விளைவாக, ஆண்டுக்கு 1,14,000 எலெட்க்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யமுடியும்.

அடுத்த கட்டமாக லத்தீன் அமெரிக்க நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் தனது வணிக நடவடிக்கைகளை விரிவுபடுத்தத்திட்டமிட்டுள்ளதாக ஓலா தெரிவித்திருந்தது. தமிழக அரசு, புதுப்பிக்கத்தக்க எரியாற்றல் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்திவருகிறது.

அண்மையில் அது வெளியிட்டுள்ள மின் வாகன கொள்கைத்திட்டம்-2023ன்படி, அது ரூ.50 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்க்க உள்ளதாகவும், அதன்மூலம் 1.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கொள்கைத்திட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் ஓலாவின் முதலீடு அமைந்துள்ளது குறிப்பிட வேண்டிய விஷயம்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *