கவிதா நரசிம்மனுக்கு விருது!

கவிதா நரசிம்மனுக்கு விருது!

வீட்டிலிருந்தபடியே தொழில் செய்யும் பெண் சமூகத் தொழில்முனைவோருக்கான சுயசக்தி விருதுகள் (HOMEPRENEUR AWARDS) நேச்சுரல்ஸ் அழகுக்கலை நிறுவனத்தின் சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட விழா ஒன்றில் அண்மையில் வழங்கப்பட்டன.

தாங்கள் செய்கின்ற பணிகள் மூலமாக இந்த சமுதாயத்தில் பல நல்மாற்றங்களை விதைத்துவரும் பெண்கள் இந்த விருதின் மூலமாக அங்கீகரிக்கப்பட்டனர்.

தான் செய்துவந்த மென்பொருள் சார்ந்த பணியை உதறிவிட்டு கர்ப்பிணிப் பெண்களுக்கான கர்ப்பகால வழிமுறைகள், ஆலோசனைகளை தந்துவரும் அனுபமா, மனநலம் குன்றியவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் வேலையை செய்துவரும் மல்லிகா கோபால், அறிவியலை கிராமப்புற மாணவர்களிடத்தில் கொண்டுபோய் சேர்க்கும் இளம்பெண் சூர்யபிரபா,

பிரியாணி உணவு தயாரிப்பில் இறங்கி உணவுத் தொழில் முனைவோராக வலம் வரும் திருநங்கை தஸ்லிமா நஸ்ரின், அரசு வேலையை விட்டுவிட்டு இந்த சமூகத்துக்காக,ம் விவசாயிகளுக்காக பல நற்பணிகளை செய்துவரும் ரேவதி என்று பல சாதனைப் பெண்கள் இந்த சுயசக்தி விருதுகளைப் பெற்றனர்.

நம்முடைய “முனைவு” இணையதளத்தில் அண்மையில் “ஆன்லைனைக் கலக்கும் பெண் சிங்கம்” என்கிற தலைப்பில் கவிதா நரசிம்மன் என்ற பெண் சமூகத் தொழில் முனைவோர் குறித்த கட்டுரை ஒன்று வெளியானது நினைவிருக்கலாம்.

விருது வழங்கும் நிகழ்ச்சியில்…

கல்வியறிவு அதிகம் பெறாத பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மனநலம் குன்றியவர்கள், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோரை இணைத்துக்கொண்டு கவிதா நரசிம்மன் பிளாஸ்டிக் கலப்பு முற்றிலும் இல்லாத பல்வேறு பொருட்களைத் தயாரித்து விற்பது குறித்து அந்தக் கட்டுரையில் நாம் மிக விரிவாகப் பதிவு செய்திருந்தோம். இந்தக் கட்டுரை வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பையும் பெற்றது.

கட்டுரையின் நாயகியான கவிதா நரசிம்மனும் மேற்சொன்ன விழாவில் சிறந்த சமூகத் தொழில்முனைவோருக்கான சுயசக்தி விருதைப் பெற்றார். கவிதாவின் இந்த வெற்றியை முனைவு உச்சி முகர்ந்து மகிழ்கிறது.

வாழ்த்துக்கள்  கவிதா! மனித நேயத்துடன் கூடிய உங்கள் தொழில் உச்சம் தொடட்டும்!

சு.கவிதா.      

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

2 thoughts on “கவிதா நரசிம்மனுக்கு விருது!”

  1. Kavithaa Narasimhan

    Thank you so much! Article in Munaivu has helped me reach out to more people and network with like minded people.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *