பிள்ளைகளுக்கு நிதியறிவை சொல்லிக்கொடுக்க…

பிள்ளைகளுக்கு நிதியறிவை சொல்லிக்கொடுக்க…

“பிள்ளைகளுக்கு தனிப்பட்ட நிதி அறிவு சொல்லிக்கொடுப்பது தேவையா?” என்ற கேள்வி அடிக்கடி கேட்கப்படுகிறது.

இதற்கு எனது விடை , “நிச்சயம் தேவை…” என்பதுதான்.

எப்போதும் ‘இன்று செலவு செய், நாளை பார்த்துக்கொள்ளலாம்’ என்று சொல்லிக்கொண்டே இருந்தால் — வாழ்க்கை நிலையாக இருக்காது.
சேமிப்பு இல்லாமல், எதையும் செய்ய முடியாது. எனவே, குழந்தைகளுக்கு எளிதில் புரியும் வகையில் சேமிப்பு, சிக்கனம் ஆகியவற்றை சொல்லித்தரலாம்.

குழந்தைகளுக்கு புரியும் வகையில் குட்டிக்குட்டி கதைகளாகச் சொல்லுங்கள். எடுத்துக்காட்டாக இது:

“ஒரு அணில் ஒவ்வொரு நாளும் ஒரு காய் சேமித்தது. குளிர்காலம் வந்தபோது, அதற்கு உணவு இருந்தது.
ஆனால், மற்றொரு அணில் ‘இன்று சாப்பிடுவேன், நாளை பார்த்துக்கொள்ளலாம்’ என்று சேமிக்கவில்லை — பசியால் தவித்தது!”.

இது ஒன்றும் யாருக்கும் தெரியாத, புதுமையான கதையன்று. ஆனால், உங்கள் கதை சொல்லும் திறனால் இக்கதையை ரத்தமும் தசையும் உள்ள அற்புதமான நாடகம்போல சொல்ல முடியும். இதுபோல சின்னஞ்சிறு சம்பங்களைக் கதை வடிவில் சொல்லுங்கள்.

சிறு வயதிலேயே பணம் என்றால் என்ன என்று கேளுங்கள்.

நாம் ஒன்றை முயற்சி செய்து அதை பரிமாற்றம் செய்யப்படும் பொழுது கிடைக்கப் பெறுவதே பணம் ஆகும் என்று சொல்லுங்கள். அதேபோல, பணத்தைக் கையாளும் விதத்தையும் கற்றுக்கொடுக்கலாம்.

 

பிள்ளைகளுக்கு நாம் கை செலவுக்காக ஒரு தொகையை கொடுக்க வேண்டும். அதனை அவர்கள் எவ்வாறு சேமிப்புக்கு சிறு தொகை ஒதுக்கி வைத்து விட்டு மீதமுள்ள தொகையில் தங்களது  தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவும் மற்றும் பிறருக்கு உதவுவதற்கும் நிதி திட்டமிடலை கற்றுத் தர வேண்டும்.

கை செலவுக்கு நாம் கொடுக்கும் பணம் அவர்கள் சம்பாதித்த பணமாக இருத்தல் வேண்டும். எடுத்துக்காட்டாக,  வீட்டு வேலைக்கு உதவி செய்தல், அறையை சுத்தமாக வைத்தல், பள்ளி வீட்டு பாடங்களை சரியான நேரத்தில் முடித்தல் போன்ற வேலைகளுக்கு ஒரு சிறு தொகையை அதற்கு சம்பளமாக கொடுக்கலாம்.

சிறு வயது முதலே சேமிப்பின் மகத்துவம் மற்றும் தேவையான செலவு, தேவை அற்ற செலவின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வதோடு,பிறருக்கு கொடுத்து உதவும் மன பாங்கும் வளரும். இதனால் குழந்தைகளுக்கு சிறு வயது முதலே பணம் மட்டுமே முக்கியம் இல்லை என்பதனை புரிந்து தனது தேவைகளுக்கும் எதிர்காலத்திற்கு எவை முதன்மையானவை என்பதனை சிந்தித்து முடிவெடுக்கும் தன்மை வளரும்.

எவ்வாறு எல்லாம் நிதி திட்டமிடலை வகுக்கலாம்?

வேலை செய்தால் தான் சம்பாதிக்க முடியும் என்று புரிதலை ஏற்படுத்துதல்,உழைப்பின் மகத்துவத்தை உணர்வார்கள்.

சம்பாதித்த பணத்தை பிரித்து செலவு செய்யும் பழக்கத்தை ஏற்படுத்துதல், சம்பாதித்த பணத்தை ஒரே நாளில் செலவு செய்தல் கூடாது என்று பழக்கப்படும். ஓர் இலக்கை நிர்ணயித்து அதனை அடைவதற்கு சிறிது சிறிது சேமித்தல், இதனால் பிள்ளைகளுக்கு பொறுமை குணம் சிறு வயது முதலே ஆரம்பமாகும்.

ஒரு பொருள் மீது ஆசை வரும் பொழுது அதனை உடனடியாக வாங்க வேண்டும் என்ற மனோபாவம் தள்ளிப் போகும். இதனால் அவர்கள் சிந்தனை வளம் அதிகரிக்கும். பெரியவர்களின் பணத்தை அவர்கள் அனுமதி இல்லாமல் எடுத்தல் கூடாது மற்றும் ’பணம்தான் எல்லாம்’ …. ‘ என்னிடம்தான் பணம் உள்ளதே!’ என்ற சிந்தனை கூடாது.

குழந்தைகளுக்கான நிதி திட்டமிடல் சொல்லிக்கொடுக்க உதவும் சில  – யூடியூப் சேனல்கள்:

1. “Money Smart Kids” (இந்தி/எங்கிலிஷ்)*
“குழந்தைகளுக்கு பணம் பற்றி எளிமையாக சொல்லும்

– பாக்கெட் மணி மேனேஜ்மெண்ட்
– சேமிப்பு vs செலவு
– சிறு வேலை → சம்பாதிப்பது
– பணத்தின் மதிப்பு & பொறுப்பு

2. “Finance for Kids” (இந்தி/தமிழ்)*
குழந்தைகளுக்கான நிதி பாடங்கள் — கார்டூன் + எளிய உதாரணங்களுடன்

– “பணம் எப்படி வருகிறது?”
– “சேமிப்பு ஜார் மேஜிக்”
– “நீங்கள் ஒரு ஸ்டார்ட்அப் ஓனர்!” (குழந்தைகளுக்கான பிசினஸ் கேம்)

3. “KidZ Bizz” (இந்தி/எங்கிலிஷ்)*
குழந்தைகளுக்கான ஃபினான்ஷியல் லிட்டரசி சேனல்

– குழந்தைகளுக்கான “Money Diary” உருவாக்குதல்
– “Buy vs Rent” — குழந்தைகளுக்கு புரியும் வகையில்
– ஆண்/பெண் குழந்தைகளுக்கு சமமான நிதி உரிமை

4. “Fincash Kids Finance” (இந்தி)*
Fincash.com இன் யூடியூப் சேனல்

– குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டங்கள்
– மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன? (எளிமையாக)
– குழந்தைகளுக்கான ஆபத்து மேலாண்மை.

சிறுதுளி பெருவெள்ளம் என்பதை போல் குழந்தைகளுக்கு பணத்தின் அருமையை சிறுவயதிலேயே பசுமரத்தில் மரத்தில் அடுத்த ஆணியை போல் மனதில் பதிய வைத்து விட்டாள் அவர்கள் வாழ்வில் செல்வ செழிப்போடு வாழ்வார்கள்.

ம.விஜயலட்சுமி

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *