பட்டியலினத்தவருக்கான புத்தொழில் நிதி

பட்டியலினத்தவருக்கான புத்தொழில் நிதி

சென்னை, டிச.22: ஸ்டார்ட் அப் தமிழ்நாடு- நிறுவனம், தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினருக்கான் புத்தொழில் நிதி குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இதுவரை, ரூ.60.80 கோடி நிதியை பல்வேறு தொழில்முனைவோர் இத்திட்டத்தின்கீழ் பெற்றுள்ளனர்.

இந்நிதியைப் பெற சில விதிமுறைகளை குறிப்பிட்டுள்ளது. அவையாவன:

*விண்ணப்பிக்க விரும்பும் நிறுவனத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட  தாழ்த்தப்பட்ட/பழங்குடி வகுப்பைச் சேர்ந்த பங்குதாரர்களின் பங்கு 50 விழுக்காட்டுக்கு மேல் இருக்க வேண்டும்.

*நிறுவனத்தின் கட்டுப்பாடு முழுவதும் தாழ்த்தப்பட்ட/பழங்குடி பங்குதாரரின் வசம் இருக்க வேண்டும்.

*தொடங்கியுள்ள நிறுவனம்,  இந்தியாவைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும். இந்தியாவுக்குள் இயங்க வேண்டும்.

*தாழ்த்தப்பட்ட/பழங்குடி வகுப்பைச் சேர்ந்த பங்குதாரர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அல்லது தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும்.

*நிறுவனத்தின் முதன்மை செயல்பாடுகள் தமிழகத்தை மையப்படுத்தியதாக இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும்.

கூடுதல் தகவல்களை scstfund@startuptn.in என்ற மின்னஞ்சலில் தொடர்புகொண்டு பெறலாம்.

-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *