தில்லி குண்டுவெடிப்பு: கடும் நடவடிக்கை தேவை

தில்லி குண்டுவெடிப்பு: கடும் நடவடிக்கை தேவை

இன்று (10.11.2025)  மாலை 7 மணிக்கு தில்லி செங்கோட்டை அருகில் சுபாஷ்மார்க் போக்குவரத்து சிக்னல் அருகில் கார் ஒன்று வெடித்து 10 பேர் பலியானதாக செய்தி வெளியாகி நாட்டையே அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியிருக்கிறது. இச்சம்பவத்தின்போது அருகே இருந்த வாகனங்களும் தீப்பிடித்து சேதம் ஏற்பட்டிருக்கிறது. நாட்டின் தலைநகரில் நிகழ்ந்துள்ள இந்த குண்டு வெடிப்பு ஒரு தீவிரமான செய்தியாகும். மனிதத்தில் ஆர்வமுள்ள, அமைதியை நாடும் ஓவ்வொருவரும் இந்த குண்டு வெடிப்பை வன்மையாகக் கண்டித்துள்ளனர். இதன் பின்னணியில் உள்ள குற்றவாளிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

சம்பவம் நடந்ததை நிகழ்ந்த உடனேயே பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “இது இதயத்தை நொறுக்கக்கூடிய செய்தி” என்று தெரிவித்துள்ளார். அமித் ஷா தலைமையில் உடனடியாக தில்லி காவல் துறை உயர் அலுவலர்களுடன் கூட்டம் நடத்தி, தில்லியின் பாதுகாப்பை அதிகரிக்க ஆணையிட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு முகாமை உடனடியாகக் களத்தில் இறங்கி இதனை விசாரித்து வருகிறது. தலைநகர் தில்லி மட்டுமல்லாது நாடு  முழுவதிலும் உள்ள ரயில் நிலையங்கள், இதர போக்குவரத்து மையங்களில் பரிசோதனைகள், கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவத்தில் உயிர், உடைமையை இழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல்களை முனைவு தெரிவித்துக்கொள்கிறது. காயமடைந்தோர், பொருட் சேதமடைந்தோருக்கு உரிய இழப்பீடுகளை அரசு வழங்க வேண்டும். இந்தியாவின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் அமைதி வாழ்வையும் சீர்குலைக்கத் துடிப்போரை சட்டத்தின் முன்பு நிறுத்தி உரிய தண்டனைகளைப் பெற்றுத்தர வேண்டும்.

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *