தமிழ்நாடு அரசு நேற்று சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கையில் புதிய தொழில் முனைவோருக்கான திட்டங்கள் கணிசமான அளவுக்கு இடம்பெற்றிருந்தன. பொதுவான தொழில்முனைவோருக்கு மட்டுமின்றி, சமூகத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி வகுப்புகளைச் சேர்ந்த தொழில் முனைவோருக்கு ஊக்கமளிக்கும் அறிவிப்புகளும் வந்துள்ளன.
கடந்த ஆண்டு அண்ணல் அம்பேத்கர் தொழில் முனோடிகள் திட்டம் என்ற திட்டம் அவ்வகையில் அறிமுகம் செய்யபப்பட்டது. இதுவ்ரை 755 தொழில்முனைவோர் இத்திட்டத்தின்கீழ் ரூ.84 கோடி மானியத்துடன் தொழில் தொடங்கியுள்ளனர். இதனையடுத்து எதிர்வரும் நிதியாண்டில் இத்திட்டத்துக்கு ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டே கூடுதலாக ரூ.75 கோடி கூடுதல் ஒதுக்கீடாக வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.