வேலையை இடையில் விட்ட பெண்களுக்கு மீண்டும் பணி வாய்ப்பு!

ஏற்கனவே பணியில் இருந்து திருமணம், குழந்தை பிறப்பு, குடும்பச் சூழல் காரணமாக வேலையை விட்டுவிடும் பெண்கள் ஏராளம். அப்படியான ஒரு சூழலுக்கு பின் மீண்டும் பணிக்கு திரும்புவது ஐ.டி துறையில் கொஞ்சம் சவாலானதே !

அப்படிப்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க ஹெச்.சி.எல் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

Ms. Srimathi Shivashankar, Executive Vice President – HCL Technologies along with participants during the launch

‘I Believe’ என்ற இந்தத் திட்டத்தில் பெண் பட்டதாரிகள் 1 முதல் 3 மாதங்கள்வரை பயிற்சி வழங்கப்பட்டு, இன்றைய தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொடுத்து பணியில் அமர்த்தப்படுவர். இதற்கு பயிற்சி கட்டணம் ரூ.2.5 லட்சம்.

 

ஹெச்.சி.எல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் செயல் துணைத்தலைவர் அண்மையில் சென்னையில் இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்தார். முனைவுடனான அவரது உரையாடலில் இருந்து…

 

 ஹெச்.சி.எல் நிறுவனத்தின் முன்னாள் பெண் ஊழியர்களுக்கு கட்டண சலுகை அல்லது விலக்கு உண்டா?

“இதுவரை அப்படி எந்த விலக்கும் இல்லை. ஆனால், உங்கள் கேள்வி என்னை சிந்திக்க வைக்கிறது. வருங்காலத்தில் இதனைப் பரிசீலிப்போம்”.

 

 நீங்கள் இத்திட்டத்தில் 100% வேலைவாய்ப்பை உறுதி செய்கிறீர்களா?

“ஆம், இதில் சேருபவர்களுக்கு 100% வேலைவாய்ப்பு உறுதி”.

 

கிராமப்புறங்களில் இருப்போருக்கு ஏதும் கட்டணக் குறைப்பு இருக்கிறதா?

“சென்னையில் நடக்கும் I Believe திட்டத்தில் அப்படி ஏதுமில்லை. ஆனால், மதுரையில் மிகக்குறைந்த கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.”

 

Ms. Srimathi Shivashankar, Executive Vice President – HCL Technologies

தகவல் தொழில்நுட்பத்தைச் சாராத துறைகளில் பணியாற்றிய பெண்களுக்கும் இந்த வாய்ப்பு உண்டா?

“ஆம். இதர துறைகளில் பணிபுரிந்தவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கிறோம். இன்று கூட நிறைய கல்லூரி  விரிவுரையாளர்கள் வந்திருக்கிறார்கள்”.

 

யார் யார் இதில் சேரலாம்?

“பொறியியல், எம்.சி.ஏ, எம்.எஸ்.சி(கம்ப்யூட்டர்/ஐ.டி) படித்தவர்கள் குறைந்தபட்சம் 65% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். சென்னை அல்லது பெங்களூரைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

 முந்தைய பணியில் இருந்து விடுபட்ட காலம் இரண்டு ஆண்டுகள் முதல் ஆறு ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். முன் பணி அனுபவம் குறைந்தபட்சம் 1 ஆண்டாவது இருக்க வேண்டும்.

   -ஐயன் கார்த்திகேயன்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *