ஐம்பதிலும் வெல்லலாம், ஆசை இருந்தால்!

சொல்லி அடித்த தொழில் சிங்கங்கள்!

இளவயதில் தொழிலை ஆரம்பித்தால் மட்டுமே அந்தத் தொழிலில் உச்சம் தொடமுடியும் என்பதுபோன்ற ஒரு எண்ண ஓட்டம் தொடர்ந்து தொழில் சமூகத்தில் நிலவி வருகிறது. ஆனால் அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. தொழிலுக்கு வயது வரம்பு எதுவும் இல்லை.

 

வடிவேலு சொல்வதைப் போல, “சரியாகப் பிளான் பண்ணினால்” போதும்; எந்த வயதிலும் தொழிலில் பட்டயைக் கிளப்பலாம் என்கின்றனர் மூத்த தொழில் முனைவோர். யார் அவர்கள்?  நாற்பது, ஐம்பது, அறுபது வயதுகளில் தங்கள் தொழிலைத் தொடங்கி சக்சஸ் சிக்ஸர் அடித்த நாயகர்கள் அவர்கள். இதோ, அவர்களைப்பற்றிய சுருக்கமான வெற்றி வரலாற்று அறிமுகம் உங்களுக்காக….

 

லிலியன் குட்வின், நிறுவனர், GEICO

GEICO என்பது அமெரிக்காவில் உள்ள பிரபலமான கார் இன்சூரன்ஸ் நிறுவனம்.இந்த நிறுவனத்தை உருவாக்கிய லிலியன் குட்வின், ஆரம்பத்தில் டெக்சாஸில் உள்ள நிறுவனம் ஒன்றில் கணக்கராகப் பணியாற்றியவர்.

Geico_geico-1080x675

‘காப்பீட்டு நிறுவனமும் மக்களும் நேரிடையாக ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள வேண்டுமே தவிர, இவர்கள் இருவருக்கும் இடையில் தரகர்கள் வரக்கூடாது. இடைத் தரகர்களின் தலையீடு காரணமாக பணம் நிறைய வீணாகிறது’ என்பது லிலியன் குட்வின்-இன் எண்ணம்.

இதன் காரணமாக, 1936-ம் ஆண்டு தன்னுடைய ஐம்பதாவது வயதில் வாஷிங்டன் நகரத்தில்,இந்த GEICO நிறுவனத்தை ஆரம்பித்தார் குட்வின்.

 

அவர் இந்தத் தொழிலை ஆரம்பித்த ஓராண்டு முடிவில் இவரது நிறுவனத்தில் பன்னிரண்டு ஊழியர்கள் இருந்தனர்.  3700 பாலிசிகள் பெறப்பட்டிருந்தன. இன்றோ, இருபத்தியேழாயிரம் ஊழியர்களுடன், 1 கோடியே 40 லட்சம் சந்தாதாரர்களுடன் வீறு நடை போடுகிறது GEICO நிறுவனம்.

 

ஹார்லேன்ட் டேவிட் சாண்டர்ஸ், நிறுவனர்,கெண்டகி ப்ரைட் சிக்கன்(KFC)

அமெரிக்காவைச் சேர்ந்த சாண்டர்ஸ்-ன் வாழ்க்கை ஒன்றும் ரோஜா மலர்ப் படுக்கையாக இருக்கவில்லை.மிக இளவயதிலேயே தந்தையை இழந்த இவர்,தன்னுடைய மாற்றுத்தந்தையிடம் பல இன்னல்களை அனுபவித்தார்.

 

ஆனாலும் சிறுவயது முதலே சாண்டர்ஸ்-க்கு சமையலில் மிகுந்த ஆர்வம். அதனால் தன்னுடைய தாயிடமிருந்து நன்றாகச் சமைக்கக் கற்றுக்கொண்டார்.அதன் பிறகு நிறைய நிறைய வேலைகளைப் பார்த்தார்.குட்டிக் குட்டியாக தொழில்களையும் செய்துபார்த்தார். எதுவும் இவருக்கு உயர்வைத் தரவில்லை.

 

kfc-1574389_640

கெண்டகி என்கிற இடத்தில், ஒரு எரிபொருள் நிரப்பும் நிறுவனத்தில் இவர் வேலை செய்தபொழுது  இவர் தன் கைவண்ணத்தைக் காட்டி சிக்கன் சமையல் வகைகளைச் செய்துகொடுத்து அவ்வப்போது நண்பர்களை அசத்துவாராம்.

 

இதுபோன்ற நிகழ்வுகள் சாண்டர்ஸ்-ஐ தேர்ந்த சமையல் நிபுணராக அடையாளம் காட்ட 1952-ல் தன்னுடைய அறுபத்தியிரண்டு வயதில்  KFC-ஐ ஆரம்பித்தார் சாண்டர்ஸ். இன்றோ, சுமார் 118 நாடுகளில் 18,800 KFC கிளைகள் கோடிகளைக் குவித்தபடி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

 

ராபர்ட் நோய்ஸி, நிறுவனர், இன்டெல்.

இயற்பியலில் டாக்டர் பட்டம் பெற்ற பிறகு,சர்வீஸ் என்ஜினியராகப் பணிபுரிந்து நிறைய பணம் சம்பாதித்தார் ராபர்ட். அதன்பிறகு சொந்தமாகத் தொழில் தொடங்கவேண்டும் என்று முடிவெடுத்து, FAIRCHILD  SEMICONDUCTOR  CORPORATION என்கிற நிறுவனத்தையும் இவர் ஆரம்பித்தார்.

 

இவரது குழு ஆரம்பித்த இந்த நிறுவனம் நன்றாகத்தான் செயபட்டுக்கொண்டு வந்தது. ஆனாலும் தொடர்ந்து, அடுத்து அடுத்து என்று மேலே செல்லத் துடித்த இவர், இந்த நிறுவனத்திலிருந்து விலகி, தன்னுடைய நண்பர் கார்டன் மூரே என்பவருடன் இணைந்து தன்னுடைய நாற்பத்தியோராவது வயதில் இன்டெல் நிறுவனத்தைத் துவக்கினார்.

 

intel

தங்கள் நிறுவனத்தின் ஊழியர்களை வெறும் சம்பளத்துக்கு வேலை செய்யும் மனிதர்களாக நினைக்காமல், தங்களுடைய குடும்ப உறுப்பினர்களைப் போல பாவித்தார். அது நன்றாகவே வேலை செய்தது.

 

தன்னுடைய பதவிக்கு வழங்கப்படும் தேவையற்ற சலுகைகளைப் புறந்தள்ளி, ஊழியர்கள் பதற்றமில்லாமல் மகிழ்ச்சியுடன் வேலை செய்வதற்கு உரிய சூழ்நிலைகளை உருவாக்கினார். இன்று கணினித் துறையில் இன்டெல் தவிர்க்கமுடியாத சக்தியாகத் திகழ்கிறது.

 

ரெய்ட் ஹாப்மென்,நிறுவனர், லிங்க்ட் இன்

லிங்க்ட் இன் மாதிரியான மிக முக்கியமான சமூக  வலைத்தளம் இளைஞர் ஒருவரால்தான் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் என்று தானே நினைக்கிறீர்கள்.  உங்கள் கணிப்பு தவறு. ரெய்ட் ஹாப்மென் லிங்க்ட் இன்-ஐ ஆரம்பிக்கும்பொழுது,அவருக்கு வயது முப்பத்தைந்து. அவருக்கு நாற்பத்தி மூன்று வயது ஆகும்பொழுதுதான் இந்த லிங்க்ட் இன் பொது வெளிக்கே வந்தது.

 

ஆனால்,ரெய்ட் ஹாப்மென்-க்கு இந்த வெற்றி சுலபமாகக் கிடைக்கவில்லை.  பட்டப் படிப்பை முடித்த பிறகு, இவர்,சொந்தமாக நிறையத் தொழிலைச் செய்துபார்த்தார். சோஷியல்நெட் என்கிற பெயரில் நெட்வொர்க்கிங் தளத்தைக்கூட ஆரம்பித்து நடத்தினார்.

 

linkedin

ஆனால்,எதிலும் இவர் பிரகாசிக்கவில்லை. ஆனால் தோல்விகளிலிருந்து கிடைத்த அனுபவங்களைப் பெற்று அதை முதலீடாகக் கொண்டு இவர் ஆரம்பித்த லிங்க்ட் இன், இவரை இன்றைக்கு சிறந்த வெற்றியாளராக அடையாளம் காட்டியிருக்கிறது.

 

வேலி புளூம்,நிறுவனர் டெனாலி ப்ளேவர்ஸ்,

கணவன்,மனைவியால் ஆரம்பிக்கப்பட்ட டெனாலி ப்ளேவர்ஸ் என்கிற ஐஸ்க்ரீம் நிறுவனம் இன்றைக்கு அமெரிக்க மக்களின் மிக முக்கியமான சுவை அடையாளமாகத் திகழ்கிறது.

 

1995-ம்  ஆண்டு தன்னுடைய ஐம்பது வயதுகளில் வேலி என்பவர்,தன்னுடைய மனைவி ப்ளூமுடன் இணைந்து இந்த நிறுவனத்தை ஆரம்பித்தார்.எல்லோரையும் போல, ஒரே மாதிரியான ஐஸ்க்ரீம்களை உருவாக்காமல்,இதில் புதுப்புது உத்திகளைப் புகுத்தினார்.

 

07

குறிப்பாக,இந்த டெனாலி நிறுவனத்தில் உருவாக்கப்படும் மூஸ் ட்ராக் என்கிற ஐஸ்க்ரீம் ப்ளேவர் மிகுந்த புகழ்பெற்றது.

 

வெனிலா ஐஸ்க்ரீமுடன் வேர்க்கடலை மற்றும் வெண்ணெய் சேர்க்கப்பட்டு செய்யப்படும் இந்த மூஸ் ட்ராக்  ஐஸ்க்ரீம் ப்ளேவர்தான் டெனாலி ப்ளேவர்ஸ் ஐஸ்க்ரீம் நிறுவனத்தின் புகழை உச்சிக்குக் கொண்டு சென்றது.

 

இதிலிருந்து தெரிகிற நீதி என்ன? சொந்தமாகத் தொழில் தொடங்க வயது ஒரு பொருட்டே அல்ல. உங்களுக்குள் ஒரு ஜோதி எரிந்துகொண்டே இருக்க வேண்டும். அது பள்ளிப்பருவமாக இருந்தாலும் சரி, பல் போன பருவமாக இருந்தாலும் சரி. எரிதழலுக்கு வடிவம் கொடுத்தால் நீங்கள் வெற்றிகரமான தொழில் முனைவோர்தான்.

-சு.கவிதா.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

4 thoughts on “ஐம்பதிலும் வெல்லலாம், ஆசை இருந்தால்!”

    1. மிக்க நன்றி. தங்கள் நண்பர்களுக்கும் நமது முனைவு.காம் -ஐ அறிமுகப்படுத்துங்கள்-(ஆசிரியர்)

    2. மிகவும் நன்றி. தங்கள் நண்பர்களுக்கும் நமது தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.

      1. BABA Dhevarajan

        தேவராஜன் பட்டாசு கேளம்பாக்கம் புதுப்பாக்கம் வயது 52 அனுபவம் 9 வயதில் வேலை 27 வியாபாரம் 45 வயதில் பட்டாசு மொத்த விற்பனை அனைத்து மக்களும் வியாபாரிகள் குறைந்த விலை விளம்பரங்கள் இல்லை நீங்கள் நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள் நண்பர்களே வணக்கம் 9710881567=9003211567

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *