வழிகாட்டத் தயாரா? இதோ, உங்களுக்கும் ஒரு வாய்ப்பு!

இந்தியாவின் தொழில் தொடக்க சூழல் (Startup Ecosystem) மாற இருக்கிறது. இந்திய அரசின் நிதி ஆயோக் (NITI Aayog) அமைப்பு, தொடக்க நிலை (Startup) நிறுவனங்களுக்கு உதவ “அடல் இன்னோவேஷன் மிஷன்” (Atal Innovation Mission) என்ற அமைப்பை துவங்கி உள்ளது.

business incubation featue

இந்த “அடல் இன்னோவேஷன் மிஷன்” அமைப்பின் கீழ் 100 அடல் இன்குபேஷன் நிலையங்கள் (Atal Incubation Centers) தொடங்கப்பட உள்ளன.  இந்நிலையங்கள்,  தொழில் முனைவோருக்குத் தேவையான பயிற்சிகள் வழங்குவது, ஆலோசனை வழங்குவது, தொழில்  முனைவோர் சந்திப்புகளை ஏற்பாடு செய்வது (Networking), தொழிலுக்குத் தேவையான நிதி திரட்ட உதவுவது, சட்ட ஆலோசனை வழங்குவது போன்ற உதவிகளைச் செய்யும்.

அதாவது, நீங்கள் இம்மையம் ஒன்றைத்தொடங்கினால் அது உங்களுக்கு மட்டும் தொழில் வாய்ப்பல்ல, மாறாக, நூற்றுக்கணக்கான தொழில் முனைவோருக்கு வழிகாட்டியாகவும் நீங்கள் உயர்வீர்கள்.

இந்திய அரசின் நோக்கம் அடல் இன்குபேஷன் நிலையங்கள் மூலம் உற்பத்தி, போக்குவரத்து, ஆற்றல், சுகாதாரம், கல்வி, விவசாயம், நீர் மற்றும் சுகாதார வசதிகள் போன்ற துறைகளில் தொழில் முனைவோருக்கும், சிறு நிறுவனங்களுக்கும் (Startup) தேவையான உட்கட்டமைப்பை ஏற்படுத்தி, தேர்ந்த வல்லுநர்களை கொண்டு தொழில் முனைவோருக்கு ஆலோசனை வழங்கி வெற்றிகரமாக தொழில் நிறுவ உதவுவது தான்.

என்ன யோசிக்கிறீர்கள்?  நிலையங்களை அமைக்க நீங்களும் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய சாராம்சங்கள்:

*அடல் இன்குபேஷன் நிலையங்கள் இந்தியா முழுவதும் நிறுவப்படும்

*முதல் 5 வருடங்களுக்கு அடல் இன்குபேஷன் நிலையங்களை அமைத்து              நடத்த அதிகபட்சமாக ரூ. 10 கோடி உதவி-நிதி (grant-in-aid)                       கொடுக்கப்படும். 5 வருடங்களுக்கு பிறகு நிலையங்கள் தாமாகவே இயங்கும் நிலைக்கு உயர்த்தப்படும்.

*இந்த நிலையங்களை அமைக்க, சொந்தமாக அல்லது ஒப்பந்தம் மூலமாக 10,000 சதுர அடி  இட வசதி இருக்கும் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்புவோர், ஜூலை 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு:

http://niti.gov.in/content/atal-incubation-centres-aics http://niti.gov.in/writereaddata/files/Guidelines%20to%20setup%20AIC%20May%202016.pdf

-கதிரவன் மனோகரன்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *