ஆயுர்வேத துறை தொழில்முனைவோருக்கு அட்டகாசமான போட்டி!

ஆயுர்வேத துறை தொழில்முனைவோருக்கு அட்டகாசமான போட்டி!

ஒன்றிய அரசின் அரசாங்கத்தின் ஆயுஷ் அமைச்சகம், கடந்த மாதம் 10 ஆம் தேதியன்று ஹரியானாவில் உள்ள பஞ்ச்குலாவில் 8 வது ஆயுர்வேத தினத்தின்போது மாண்புமிகு மத்திய ஆயுஷ் அமைச்சர், ஸ்ரீ சர்பானந்தா சோனோவால் அவர்கள்மூலம் ஒரு போட்டியை அறிவித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

ஆயுர்வேத துறையில் புத்தாக்க தொழில்  நிறுவனங்களுக்கான (புதிய தொழில்முனைவோருக்கு) ஒரு பெரும் சவால் (Ayurveda Start-up Grand Challenge)  என்பதுதான் இப்போட்டியின் பெயர்.  ஸ்டார்ட்அப் இந்தியா மற்றும் இன்வெஸ்ட் இந்தியா ஆகிய திட்டங்களை அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் ஒருங்கிணைத்து இது நடத்தப்படுகிறது.

Gundula Vogel

இப்போட்டியின்  முக்கிய நோக்கங்கள்:

  • ஆயுஷ் மற்றும் ஆயுஷ் துறையில் உள்ள ஸ்டார்ட்அப்களின் (புதிய தொழில்முனைவோரின்) கண்டுபிடிப்புகளால் சீரமைக்கக்கூடிய சமூக மற்றும் துறை சார்ந்த பிரச்சனைகளைக் கண்டறிந்து அங்கீகரிப்பது…
  • ஆயுஷ் துறையில் உள்ள சவால்களைத் தீர்க்கும் திறன் கொண்ட புத்தாக்க தொழில் முனைவோரைக் கண்டறிந்து ஊக்குவிப்பது…
  • ஆயுஷ் துறையில் நிலையான வளர்ச்சியை உருவாக்குவதற்கு புது தொழில்நுட்பம் மற்றும் நடைமுறையில் கொண்டுவர ஊக்கிவிக்கவும் .

ஆயுர்வேத ஸ்டார்ட்-அப் கிராண்ட் சேலஞ்சில் பங்கேற்க தகுதிகள் :

  1. ஆயுர்வேத துறையில் DPIIT அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட ஆரம்ப கட்ட நிறுவனங்களாக இருத்தல் வேண்டும்.
  2. தேர்ந்தெடுக்கப்பட்டால், ஏதேனும் பரிசோ அல்லது மானியமோ பெற ஏதுவான வகையில் புத்தொழில் நிறுவனம் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக இருக்க வேண்டும் (தனிநபர் நிறுவனங்கள் பங்கேற்க இயலாது).

கூடுதல் விவரங்கள் அறிய கீழ்க்காணும் இணைப்பைச் சொடுக்கவும்: https://www.startupindia.gov.in/content/sih/en/ams-application/challenge.html?applicationId=6555c15be4b0eb76656927bd

ஸ்டார்ட்அப் சவாலுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி இப்போது 31 ஜனவரி 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்களுக்கு முதல் பரிசு ரூ.5 லட்சம். இரண்டாம் பரிசு ரூ.2.5 லட்சம். மூன்றாம் பரிசு ரூ.1 லட்சம்.

-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.

 

(முகப்பு புகைப்படம்: நன்றி: Image by Sarah Sever from Pixabay)

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *