தொழிலுக்கும் தொண்டாற்றிய கலைஞர்

தொழிலுக்கும் தொண்டாற்றிய கலைஞர்

தமிழுக்கு மட்டுமல்ல தமிழகத்தில் தொழில்துறை மேம்படவும் தனது ஆட்சிக்கலங்களில் தொண்டாற்றியிருக்கிறார் கலைஞர் கருணாநிதி. அப்படி தொழில் உலகத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பில் முக்கியமானவற்றை இங்கே காணலாம்.

எழுபதுகளில் கோயம்புத்தூரில் முதல் வேளாண் பல்கலைக்கழகத்தை கலைஞர் ஏற்படுத்தினார்.

விவசாயிகளுக்கு உதவுவதற்காகவும், விவசாயத்தை அடுத்தடுத்த தலைமுறைகள் சரியாகக் கற்றறிந்து விவசாயத் தொழிலை முன்னேற்ற வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த வேளாண் பல்கலைக்கழகம் இன்று கோவையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இருக்கின்றது.

 

செயில்

“ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா” என்கிற இந்திய பொதுத்துறை நிறுவனத்தின் ஒரு அங்கமான “சேலம் ஸ்டீல் பிளாண்ட்” நிறுவனத்தைக் தமிழகத்திற்குக் கொண்டுவந்ததும் இவர்தான்.

 

இன்று மாம்பழத்துக்கு அடுத்தபடியாக இந்த “ஸ்டீல் பிளாண்ட்” நிறுவனமும் சேலத்துக்கு பெருமை சேர்த்து வருகிறது. உயர்தர ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தகடுகளை உருவாகும் இந்த நிறுவனம் எண்ணற்றவருக்கு வேலைவாய்ப்பையும் வழங்கி வருகிறது.

 

பழுப்பு நிலக்கரி நிறுவனம்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இரண்டாவது சுரங்கப்பணிகள்(MINE-CUT) மற்றும் மின்சாரத் திட்டம் இவரது ஆட்சிக்காலத்தில்தான் கொண்டுவரப்பட்டது.

தூத்துக்குடியில் இயங்கிவரும் “பெட்ரோலியம்,இண்டஸ்ட்ரியல் கெமிக்கல்ஸ்”( PETROLIUM  AND  INDUSTRIAL  CHEMICALS)நிறுவனம் இவரது முயற்சியால்தான் கொண்டுவரப்பட்டது.

 

ஹைட்ரோகுளோரிக் அமிலம்,சல்பியூரிக் அமிலம்,டைட்டானியம் ஆக்சைட் போன்ற வேதிப்பொருட்கள் இங்கே உருவாக்கப்படுகின்றன. இந்த நிறுவனத்தால் தூத்துக்குடி தொழில் நகரமாக மாறியதோடு மட்டுமல்லாமல் பலருக்கு வேலைவாய்ப்பும் இதன் மூலம் கிடைக்க ஆரம்பித்தது.

சிட்பி

சிறுதொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காகவும், தொழில்முனைவோரை கைதூக்கி விடவும் கலைஞர் தனது ஆட்சிக்காலத்தில் உருவாக்கிய மிக முக்கிய அமைப்புதான் சிட்கோ. அதாவது “ஸ்மால் இண்டஸ்ட்ரீஸ் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட்.”(SMALL  INDUSTRIES  DEVELOPMENT  CORPORATION  LIMITED).

இதன்மூலம் தமிழகம் முழுக்க இருக்கும் சிறுதொழில்முனைவோர் வாய்ப்புகளையும் அதன் மூலம் முன்னேற்றத்தையும் அடைந்து வருகிறார்கள்.

 

அதுமட்டுமல்ல, மாநிலத்தின் ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக சிப்காட், அதாவது ஸ்டேட் இண்டஸ்ட்ரீஸ் புரமோஷன் கார்ப்பரேஷன் ஆப் தமிழ்நாடு லிமிடெட்  (STATE  INDUSTRIES  PROMOTION CORPORATION  OF TAMILNADU  LIMITED ) என்கிற அமைப்பையும் நிறுவினார்.

 

தொழில்நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை அமைப்பதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை தமிழகம் முழுக்க சிப்காட் செய்துதருகிறது.

இதன்மூலம் நிறையத் தொழில்நிறுவனங்கள் தமிழகத்தில் காலூன்றியதோடு மட்டுமல்லாமல் எண்ணற்றவர்கள் வேலைவாய்ப்பையும் பெற்றார்கள்.

பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம்

கப்பலில் சென்று வாணிகம் செய்தது நம் தமிழ்ச் சமூகம். இதை மனதில் கொண்டு பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தை கலைஞர் தனது ஆட்சிக்காலத்தில் நிறுவினார்.

 

இந்த நிறுவனத்தைச் சேர்ந்த கப்பல்களின் மூலம் வெப்ப அணு உலை நிலையங்களுக்கு கரி எடுத்துச் செல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல இந்த பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் மூலம்தான் கன்னியாகுமாரியில் படகுப் போக்குவரத்து நடத்தப்படுகிறது.

-சு.கவிதா.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *