காய்கறி, பழங்கள், பால், மளிகைப்பொருட்களை இல்லம்தேடி விநியோகிக்கும் மின் வர்த்தக நிறுவனமான ஸெப்டோ (Zepto), ரூ.1600 கோடிக்கு மேல் முதலீடு திரட்டியுள்ளது. அமெரிக்காவைச்சேர்ந்த இரு நிறுவனங்கள், தனது முந்தையை முதலீட்டாளர்கள் வழங்கிய முதலீடு ஆகியவற்றை சேர்த்து இத்தொகை ஸெப்டோவுக்குக் கிடைத்திருக்கிறது.
இதன்மூலம் ரூ.1000 கோடிக்கு மேல் மதிப்பு கொண்ட புத்தொழில் நிறுவனத்துக்குக் கிடைக்கும் யூனிகார்ன் என்ற அந்தஸ்து இந்நிறுவனத்துக்கு இவ்வாண்டு கிடைத்துவிட்டது. தற்போது திரட்டப்பட்டுள்ள தொகையைக்கொண்டு சென்னை, பெங்களூரு, புனே, கொல்கத்தா முதலிய 6 நகரங்களில் தங்களது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய இருப்பதாக ஸெப்டோ அறிவித்திருக்கிறது.
(முகப்புப்படம்: நன்றி: பிக்ஸாபே)
‘