சென்னை, மார்ச் 14: இன்று தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை (2025-26) நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருக்கிறார். வழக்கமான அறிவிப்புகள் ஒருபுறமிருக்க, பல புதிய திட்டங்களும் அறிவிப்புகளும் நிறைந்து காணப்பட்டிருக்கிறது இந்த அறிக்கை. தொழில் முனைவோருக்கும் தொழில் துறையினருக்கும் நம்பிக்கையூட்டும் பல அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் சில….
*தமிழ்நாடு செமி கண்டக்டர் இயக்கம்-2030 எனும் ஐந்தாண்டுத்திட்டம் ரூ.500 கோடியில் செயல்படுத்தப்படும். இதற்கான பரிசோதனை மையம் சென்னையில் ரூ.100 கோடி செலவில் உருவாக்கப்படும்.

*கோவை சூலூரிலும் பல்லடத்திலும் தலா 100 ஏக்கர் பரப்பில் செமி கண்டக்டர் உற்பத்திக்கான உற்பத்திப்பூங்காக்கள் தொடங்கப்படும்.
*ஓசூரில் 5 லட்சம் சதுர அடி பரப்பில் ஓசூரில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் டைடல் பார்க் அமைக்கப்படும். விருதுநகரில் மினி டைடல் பார்க் உருவாக்கப்படும்.
*ஓசூர் அறிவுசார் பெருவழித்தடம் உருவாக்கப்படும்.
*கோவையில் வார்ப்பகத் தொழிலுக்கான உயர்திறன் மையம் திறக்கப்படும். கடலூரில் 500 ஏக்கர் பரப்பிலும் புதுக்கோட்டையில் 200 ஏக்கர் பரப்பிலும் புதிய தொழிற்பூங்காக்கள் தொடங்கப்படும்.
*மேலூர், கடலூரில் காலணி உற்பத்திப்பூங்காக்கள, காலணி திறன் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்.
*திருச்சியில் பொறியியல் மற்றும் வார்ப்பக தொழிற்பூங்கா அமைக்கப்படும். தூத்துக்குடியில் செயற்கை இழை மற்றும் தொழில்நுட்ப ஜவுளி தொழிற்பூங்கா அமைக்கப்படும்.
*கடலூரிலும் புதுக்கோட்டையிலும் புதிய தொழிற்பூங்காக்கள் தொடங்கப்படும்.
*ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் உருவாக்கப்படும்.
*தமிழ்நாடு கடல் போக்குவரத்து உற்பத்திக்கொள்கை 2025 உருவாக்கப்படும்.
*சென்னை அருகே உயிர் அறிவியல் பூங்கா உருவாக்கப்படும்.
மொத்தத்தில் தொழில் துறைக்கு ரூ.3915 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
-கா.சு.துரையரசு





