சென்னை, மார்ச் 29: பிரபல சிகையலங்கார நிபுணர் தேவ் அவர்களின் ’DCutz By Dev’ எனும் பிரீமியம் சலூனை, சென்னை ஆர்.ஏ.புரத்தில் நடிகர் தனுஷ் துவங்கி வைத்தார். இந்த சலூனின் திறப்புவிழாவில், திரையுலக பிரமுகர்கள், தொழில்முறை நிபுணர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
தென்னிந்திய திரையுலகில் பிரபலமான சிகையலங்கார நிபுணராகப் புகழ் பெற்றவர் தேவ். தமிழ்த் திரையுலக முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றி, அவர்களுக்கு தனி பாணியைக் கட்டமைத்தவர். தனிப்பட்ட சிகை அலங்காரத்தில் அவரது திறமை மிகவும் புகழ்பெற்றது. தற்போது, தனது திறமையையும், தனித்த பாணியையும் ‘DCutz By Dev’ மூலம் மக்களுக்கும் கொண்டு செல்ல இருக்கிறார்.

இந்த அழகு நிலையமானது அதன் அதிநவீன வசதிகள், நிபுணத்துவ ஸ்டைலிஸ்டுகள் மற்றும் சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்புடன் சிகை அலங்காரம் மற்றும் அழகுபடுத்தலை இன்னும் விரிவாகக் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. இங்கு இருபாலருக்குமான சிகையலங்கார சேவைகள் வழங்கப்படும்.
-எல்.குணாளன்.





