சிறுமலைக்கு வாழ்வு எப்போது?  

சிறுமலைக்கு வாழ்வு எப்போது?      

திண்டுக்கல் மாவட்டம் என்றவுடன் நமது மனக்கண்ணில் விரியும் சுற்றுலாத்தலம் சிறுமலைதன். ஆனால், இன்னும் காற்று மாசுபடுதலின் கோரங்கரங்களுக்குள் சிக்காத இன்னுமோர் கோடை வாழிடமும் உண்டு. அதுதான் சிறுமலை.  சிறுமலையில் நிலவும் குளிர்ந்த காற்றுக்கு ஏங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அங்கு வீசும் குளிர்ந்த காற்றும்,மூலிகை மணமும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை…

18 கொண்டை ஊசி வளைவுகளைக் கடக்கும்போது  நம் மனதில் உற்சாகம் ஊற்றெடுக்கும். வானுயர நெடிது நிற்கும் மரங்களை பார்க்கும்போது மனதில் எல்லை இல்லா மகிழ்ச்சி கொப்பளிக்கும். தரையிலிருந்து ,மேலேச செல்லச் செல்ல உள்ளத்தின் ஆர்ப்பரிப்பு எல்லை கடக்கும். .

நீர்வீழ்ச்சிகள்

சிறுமலையில் அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் வெண்ணியர்நீர் வீழ்ச்சியும், மேகமலை அருவியும் மிக உற்சாகத்தையும் புத்துணர்ச்சியும்  கொடுக்க கூடியவை. .மழைக் காலங்களில் நீர் வரத்து அதிகம் காணப்படும்போது அழகிய மூடு பனியை ரசிக்கலாம்.

 இனிமையான இயற்கை நடை

இயற்கை விரும்பிகளுக்கு இந்த இடம் ஒரு சொர்க்கபுரி என்றே சொல்லலாம். .கிராமங்கள் வழியாக செல்லும் பாதைகள் பல உள்ளன.மேலும் வன விலங்குகளைக் காண ஒரு  ரம்மியமான சூழல் நிலவுகிறது. பூக்கள் நிறைந்த பகுதிகளையும்  மூலிகைச் செடிகளையும் பார்க்கும்போதும் மூலிகைக் காற்றை சுவாசிக்கும் போதும் ஆனந்தமாக உணர்வீர்கள்.

வெள்ளி மலை

அகஸ்தியர் புரத்தில் வெள்ளிமலை உள்ளது .சிறுமலையிலேயே மிகவும் உயர்ந்த மலை இதுவாகும். இம்மலையில் உச்சி முழுவதும் வெள்ளியாக இருந்தது.க லியுகத்தில் இது மக்களால் திருடப்பட்டுவிடும் என்பதால் அகத்தியர் இதனைக் கல்லாக மாற்றிவிட்டார் என்று கூறுகின்றனர். இந்த மலையின் உச்சியில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலிங்கம் ஒன்று இருக்கின்றது.

புகைப்படம்: நன்றி: தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் இணையதளம்.

 பெருமாள் மலை

பெருமாள் மலை சிறுமலையில் ஒரு முக்கியப் பகுதியாகும். .இது பெருமாளுக்கே அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புனித மலையாகும். .இங்கு பக்தர்கள் வேண்டுதல் வைக்கப்பட்டு கோவிந்தா கோவிந்தா என வணங்கும் காட்சி மெய் சிலிர்கிறது.இந்த கொவிலுக்காகவே இந்த மலை வடிவமைக்கப்பட்டது போல் தோன்றும். அப்படி ஒரு தெய்வீக மணம் கமழும்.

 தோட்டங்கள் மற்றும் காப்புக் காடுகள்

இங்கு புகழ் பெற்ற காப்பி,தேயிலை தோட்டங்கள் உள்ளன., மேலும் மிளகு,மற்றும் வாசனை மிகுந்த பட்டை , கிராம்பு, ஏலம் ஆகியவை விளைகின்றது. இங்கு செல்கின்றவர்கள் புத்துணர்வுடன் கூடிய காஃபி, ,தேநீர் ஆகியவற்றை வாங்கிப்  பருகலாம். மேலும், இந்தக் காப்புக் காடுகளில் மூலிகைச் செடிகள் மரங்கள் பல வகையான பூக்கள் அனைத்தும் பார்க்கும் போது புதிய உத்வேகத்தை மனதில் எழுப்பவல்லவை.

  பாரம்பரியம் மிக்க உணவு

சிறுமலையில் தேநீர்,காஃபி,  இட்லி தோசை மற்றும் மூலிகைத் தேநீர் அனைத்தும் கிடைக்கும்.ப் மேலும் முக்கனிகளில் இரண்டு வகையான வாழை,பலாபழம் ஆகியவையும்  தித்திக்கும் சுவையோடு கிடைக்கும். இங்குள்ள .மலைவாழை புகழ்பெற்ற  ஒன்றாகும்.  மிகுந்த குளிர்ச்சியைக்  கொடுக்கும் இப்பழத்தால் சளி பிடிக்காத. ஆகவே,  இது குழந்தைகளுக்கு கொடுக்கவும் ஏற்றது. அளவில் சிறியதான சிறுமலைபழம்தான் பழநி பஞ்சாமிர்த தயாரிப்பில் இடம்பெறுகிறது.

Buy Fresho Hill Banana - Rich In Antioxidants, Supports Immune System Online at Best Price of Rs 175 - bigbasket

இதுதவிர, தேன்பலா,சதைப்பலா,நார்ப்பலா என்று  பல வகையான பலாவும் இங்கு கிடைக்கும்.  அனைத்தும் சக்கரை பாகில் ஊறவைத்தது போன்ற சுவையில் இருக்கும்.

வருகிறது மிகப்பெரிய பூங்கா

திண்டுக்கல் தோட்டக்கலைத்துறை  20 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய பூங்கா ஒன்றை இங்கு அமைக்கத் திட்டம் தீட்டியுள்ளது. தென்மலை செல்லும் வழியில் தோட்டக் கலைத்துறைக்குச் சொந்தமான பண்ணை உள்ளது. அதன்  ஒரு பகுதியில் 20 ஏக்கரில் 15 சிறப்பம்சங்களைக் கொண்ட பொழுது போக்கு அம்சங்கள் கொண்ட அழகிய  பூங்கா அமைக்க ( ரூ5 . ½ கோடி செலவில்) திட்டமிடப்பட்டிருக்கிறது.

இருப்பினும், இன்னும் போதுமான அளவுக்கு அடிப்படை வசதிகள் இல்லை என்பதே சிறுமலையின் ஆதங்கம்.  சிறுமலையை  மிகப்பெரிய அளவுக்கு சுற்றுலாத் தலமாக மாற்றினால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் செல்வது தடை பட்டு விடும் என்று சுற்றுலாத்துறையினர் நினைக்கிறார்களோ என்று ஐயம் தெரிவிக்கிறார்கள் உள்ளூர்வாசிகள். இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தமிழக அரசின் சுற்றுலாத்துறையும் மாவட்ட நிர்வாகமும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

ஏற்கனவே சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்பட்ட  பகுதி தான் இந்த சிறுமலை. இன்னும் கூடுதல் அடிப்படை வசதிகள்  (அரசு சார்பில் தங்குமிட வசதிகள், சுற்றுலா வழிகாட்டிகள், மலிவு விலை உணவகங்கள், குறைந்த கட்டண சிற்றுந்துகள் முதலிய) செய்து கொடுத்தால் இங்கு வரும் சுற்றுலாப் பிரியர்களுக்கு மட்டுமல்லாமல் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அது வாய்ப்பாக அமையும். மேலும், சுற்றுலாத்துறைக்கும் அரசுக்கும் இதன்மூலம்  நல்ல வருமானமும் கிடைக்கும் என்பதும் கூடுதல் பயன் அல்லவா!

-கிருஷ்ணவேணி.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

No Content Available

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *