சிறுகக் கட்டிப் பெருக வாழ்!

சிறுகக் கட்டிப் பெருக வாழ்!

இந்தத் திருக்குறளை நாம் கேள்விப்பட்டிருப்போம் படித்திருப்போம்:

‘‘ஆகாது அளவிட்டி தாயினும் கேடில்லை

போகாறு அகலாக் கடை’’

பணம் செல்கின்ற வழியானது வருவாய் வருகின்ற வழியை விட பெரியதாய் ஆகிவிடாத பட்சத்தில் வரவு எவ்வளவு சிறியதாக இருந்தாலும்,செலவு அதனை மிஞ்சி விடாமல் கட்டுக்குள் இருந்தால், என்றும் நமது வாழ்வில் கேடு வராது  என்று கூறுகிறார் வள்ளுவர் .

எவ்வளவு வருமானம் வந்தாலும் செலவுகளை முறையாகச் செய்யத்  திட்டம் தெரிந்திருக்க வேண்டும். பணம் இருகின்றதே என்று எண்ணிக் கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்தால் பேராபத்துதான் நிகழும்.

இப்படி வரவுகளை செலவுக்குள் கட்டுவதன் மூலம் சிக்கனம் கடைபிடிக்க படுகிறது.சிக்கனம் வந்தால் சேமிப்புவந்துவிடுகிறது., நமது வருமானத்தில் முதன்மைச் செலவாக சேமிப்பு என்கிற நிலையில் ஒரு தொகையை எடுத்து வைக்க வேண்டும்.இந்த தொகையை அவசர தேவை இருந்தாலும் எடுக்கக் கூடாது என்று மனதில் உறுதி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்தத் தொகையை வங்கியிலோ அல்லது அஞ்சலகங்களிலோ சேமிக்கலாம். ஏனெனில்,  நமது கையிலோ ,நமது வங்கி கணக்கிலோ இருந்தால் அதை அவசரத்திற்கு செலவு செய்து விடுவோம். மேற்கூறியவாறு சேமித்தால் நமது முதலீடு பல மடங்கு பல்கி வளம் சேர்க்கும்  வகையில் இருக்கும்.

மேலும் வீட்டினில் கடுகு டப்பாவிலும், சீரக டப்பாவிலும் முடங்கி கிடக்கும் பணத்திற்கு வட்டி கிடைக்காது .அக இந்த பணத்தை வைப்புகளில் இட்டு வைக்கலாம்.  திருமணம், வீடு கட்டுதல்,வாகனம் வாங்குதல்,ஓய்வு காலத்தை நிம்மதியாக கழித்தல் ஆகியவை பிற்காலத்தில்வர கூடிய செலவுகளை முன்கூட்டியே கணித்து  அதற்கேற்ப சேமிப்பை சேமிக்க வேண்டும்.

திட்டமிட்டுக்குடும்பம் நடத்துவது எப்படி என்று இங்கு பார்ப்போமா!

1.கலந்து ஆலோசித்தல்

       நமது குடும்ப உறுப்பினர் இடையே ஒன்றிணைந்து ஆலோசிக்க வேண்டும்.எந்தெந்த செலவுகளை குறைப்பது ,தேவையானது எது தேவையில்லாதது எது என்று முதலில் ஆராய வேண்டும். கல்வி,மற்றும் அத்தியாவசிய செலவுகள்,மற்றும் திருவிழா போன்ற செலவுகள் ஷாப்பிங் என்கிற செலவுகள், நம் வீட்டு விழாக்கள் போன்ற ஆடம்பர செலவுகள் என்று பட்டியலிட்டு ஆலோசனை செய்தல் வேண்டும்.  .

2.சிக்கனத்தை கடைபிடித்தல்

       நாம் கலந்து ஆலோசித்ததில் தேவையில்லாத செலவுகளை முதலில் குறைக்க வேண்டும் .மேலும், எதிலெல்லாம் செலவுகளை சுருக்க முடியும் என்று பார்த்து அதன் மூலம் நமது பணம் வீணாகாமல் பார்த்து கொள்ளலாம். .ஆடம்பர செலவை அத்தியாவசிய செலவாக மாற்றாமல் முடிந்த அளவு சேமித்து கொள்ளுங்கள்

3.இலக்கை நிர்ணயித்தல்

உங்களது சிக்கனத்தின்மூலம் அன்றாடம்,வாரம்,மாதந்தோறும் அல்லது வருடம் தோறும் உங்களது ஊதியத்திற்கு ஏற்ப உங்களது பணத்தைச் சேமிக்க முடியும். ஆகையால் ஒரு நல்ல பண மதிப்பையும் பெற முடியும்.

4.பணத்தை பெருக்கு

சில சமயம் நீங்கள்பெறும்  ஊதியம் உங்களுக்குப் பற்றாகுறையாக இருக்கலாம். ஆனால் நமது தேவைக்காக உனது உழைக்கும் திறனை  அதிகபடுத்தலாம் அதன் மூலம் உங்களது வருவாயைப் பெருக்கிகொள்ளலாம்

Free people human group vector
photo courtesy: Harishs from pixabay

5.திட்டம் தீட்டு

    நீங்கள் மாதந்தோறும் அல்லது எப்படி தொகையை சேமிக்கலாம் என்று உறுதி செய்து கொண்ட பிறகு பாதுகாப்பான எந்த நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யலாம் என திட்டம் தீட்ட வேண்டும்.

6 .சிறுசேமிப்பு

      ’சிறு துளி பெருவெள்ளம்’ என்பதைப் போல் சிறிய தொகையை முதலீடாகப் போட்டு நமது சேமிப்பை சேர்க்க தொடங்க வேண்டும். .அதிலும் எப்படிப்பட்ட திட்டங்களை தேர்ந்தேடுத்தால் நமக்கு நன்மை என்று பார்த்து ஏற்கனவே ஆய்வு செய்து  நிறுவனங்களில் சேமிக்க துவங்க வேண்டும். யாரிடமும் கையேந்தும் நிலை வராமலிருக்க.

7.கூடுதல் முதலீடு

    நாம் செய்த முதலீடுகளின் முதிர்வுத் தொகையை மீண்டும் அதனை மறு முதலீடு செய்ய வேண்டும். இதனால் நமது தொகை பன்மடங்கு உயர்வதுடன் பாதுகாப்பான சூழல் ஏற்படும் .சிறுசேமிப்புத் திட்டங்களில் தொடர் வைப்புத் தொகை(RD) திட்டம் மிகவும் பிரபலமான சேமிப்பு திட்டமாகும். மாதந்தோறு  சிறிய தொகையை முதலீடு செய்வதன்மூலம் பெரிய லாபத்தை ஈட்ட முடியும். சிறிய முதலீடு,  நிறைந்த லாபத்தை தரும். நமது சந்ததியரின் வாழ்வை மேம்படுத்தும்.

8.காலத்தை ஆய்வு செய்

     நமது முதலீடு எந்தெந்த தேவைக்காக என்று உறுதி செய்து  கொள்ளவேண்டும். நமது குழந்தைகளின் கல்வி,திருமணம்,எதிர்காலத்திர்க்கான தேவை என்பது போன்ற காலத்திற்கு ஏற்றார்போல் ஆய்வு செய்ய வேண்டும்.வரும் காலங்களில் நமது ஒய்வூதியம் மிக முக்கியம்.நமது தேவைக்கு பிற்கால தேவைகளுக்கு பட்டியலிட்டு அதற்கேற்ப சேமிப்பது நமது வாழ்க்கைக்கு மிகப்பெரிய பங்களிப்பாக இருக்கும்.

9.சேமிப்பைக் கண்காணி

    நமது சேமிப்பின் வளர்ச்சி எப்படி உள்ளது?; வங்கியில் மற்றும் நிதி நிறுவனங்களில் வட்டி விகிதங்களில் மாற்றங்கள் ஏதேனும் உள்ளனவா?; முதலீட்டில் ஏதேனும் மாற்றங்களைச் செய்ய வேண்டுமா? -என்றெல்லாம் யோசிக்க வேண்டும்.  சிங்கப்பூரின் பொருளாதாரம் உயர்ந்ததற்கு காரணம்  தெரியுமா சிக்கனமும் சேமிப்பும்தான் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகாத்தின்  பொருளாதார அறிஞர்  டோ முன் ஹுங்( TOH MUN HUNG) சொல்கிறார்.

Free money plant investment vector
pic: mohammed hassan from pixabay

10.பொறுமை காத்தல்

     நமது பணத்தை சேமித்து பெருக்க நினைத்தால் காலவரையறை முடியும் வரை மிகவும் பொறுமை காக்கவேண்டும். திடீர் தேவைக்காக சேமித்த தொகை செலவு செய்திடல் கூடாது. திடீர் மருத்துவ செலவோ, உயிர் சம்மந்தபட்ட செலவோ ஏற்படின் அதை தவிர எந்த செலவுக்காகவும்  செலவிடாமல் இருக்க வேண்டும்.

-கிருஷ்ணவேணி.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *