நிப்பான் இந்தியா பரஸ்பர நிதியின் புதிய திட்டம்

நிப்பான் இந்தியா பரஸ்பர நிதியின் புதிய திட்டம்

நிப்பான் இந்தியா பரஸ்பர நிதி நிறுவனம், நிப்பான் இந்தியா நிப்டி 500 ஈக்வல் வெயிட் இண்டெக்ஸ் ஃபண்ட் எனப்படும் புதிய  பரஸ்பர நிதித்திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதில் திரட்டப்படும் தொகையானது,  மொத்தம் 500 வகையான பங்குகளில் முதலீடு செய்யப்படும்.

எல்லா வகையான துறைகளைச் சேர்ந்த பங்குகளாகவும் அவை இருக்கலாம். அதேபோல, சிறிய-பெரிய-நடுத்தரத் தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த பங்குகளாக அவை இருக்கும். இம்மாதம் 21 ஆம் தேதி இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. செப்டம்பர் 4, 2024 வரை இதில் முதலீடு செய்யமுடியும். குறைந்த பட்ச முதலீடு ரூ.1000.

(குறிப்பு:)முழுக்க பங்குச்சந்தை சார்ந்த முதலீடு என்பதால் முதலீட்டாளர்கள், சந்தை அபாயத்தைப் புரிந்துகொண்டு, நன்கு ஆலோசித்து முடிவு எடுக்கவேண்டும்).

(Image by 3D Animation Production Company from Pixabay)

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *