”வேளாண் தொழிலில் வாய்ப்புகள் ஆயிரம்”-ஃபிஸ்சா சலீம்.

மகளிர் தினத்தன்று வளர்ந்துவரும் ஒரு சிறந்த பெண்சக்தியை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறது “முனைவு”.

2019 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இந்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்த மாநில இளைஞர் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய பேச்சாளர், பன்மொழி வித்தகர், இளம் வயதிலேயே பல விருதுகளை பெற்றவர் தான் ஃபிஸ்ஸா சலீம்

ஃபிஸ்சா சலீம்,  தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார் 

வணக்கம் நான் ஃபிஸ்சா சலீம். நான்  உழவியல் துறையில் (Agronomy department) உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறேன். நான் ஊக்கமளிக்கும் பேச்சாளராகவும் பேசி வருகிறேன்.  குறிப்பாக, கல்லூரி – பள்ளி மாணவர்களுக்கு  தொழில்முனைவோருக்கு முக்கியமாக பெண் தொழில்முனைவோருக்கு முக்கியத்துவம் கொடுத்து பல மேடைகளில் பல தகவல்களை பல எழுச்சியூட்டும் சிந்தனைகளை கொடுத்து வருகிறேன். நான் விகடனில் மாணவ பத்திரிகையாளராக ஒரு வருடம் பணி புரிந்துக்கிறேன். அது மட்டுமில்லாமல் ‘நாங்கள்’என்ற பத்திரிகையின் ஆசிரியராக உள்ளேன்.

கேள்வி தமிழ்நாட்டில் வேளாண்மை சார்ந்த தொழில்முனைவோருக்கு எவ்வளவு வாய்ப்புகள் உண்டு ?

பதில் கொரொனா டைம்ல நாம நிறைய பாத்திருக்கோம். நிறைய மக்கள் அவங்க வீடுகள்ல மாடி தோட்டம் அமைத்தது . வேளாண்மை படித்தவர்களும் படிக்காதவர்களும் ஒரே மாதிரி மிக எளிமையா செய்யக்கூடிய ஒரு விஷயம் இது.

கேள்வி – முதலீடு குறைவான வேலை வாய்ப்புகள் வேளாண்மையில் இருக்கா? கொஞ்சம் எடுத்துக்காட்டோட விளக்கவும் .

பதில் – முதலீடு குறைவான வாய்ப்புகள்ல முதலிடம்  மாடித்தோட்டத்துக்கு தான். இதுக்கு பெரிசா முதலீடு தேவைப்படாது.அதிகபட்ச தேவை என்றால் செடி வளர்ப்பதற்கான க்ரோ பேக் (Grow bag) , செடிக்கு போடுவதற்கான உரம், அப்புறமா விதைகள் வாங்க . இப்போ விதைகள் நமக்கு மிகவும் மலிவான விலையில் கிடைக்குது. Grow bag-ல் தான் வளர்க்கணும்ங்கற அவசியம் கிடையாது.

புதுசா ஆரம்பிக்கிற தொழில் முனைவோர் இதை பெரிய அளவுல தொடங்காதீங்க. எதுவா இருந்தாலும் நீங்க முதல்ல உங்க சூழ்நிலைக்கேற்றவாறு ஒரு test மாதிரி ஒரு research மாதிரி தொடங்குங்க. அப்படி செய்யும்போது என்னென்ன தவறுகள் வருதுன்னு பார்த்துட்டுக் கத்துக்கலாம். அதன் பிறகு அத நீங்க பெரிய அளவுக்கு செய்ய ஆரம்பிக்கலாம்.

 

எதுக்கு அதிகமா செலவு செய்யணும், எதுக்கு செய்ய கூடாது என்பது நமக்கு தெரிஞ்சுடும். அப்புறம் மாடி தோட்டம் அமைக்க grow bag தான் பயன்படுத்தணும்னு இல்ல பழைய பிளாஸ்டிக் பக்கெட், வீணாப்போன சட்டி இருந்தாலும் போதும். தினமும் தண்ணி ஊத்த அவசியமில்லை. ஈரப்பதம் இருந்தா போதுமானது, வழிய வழிய தண்ணி ஊத்த கூடாது.

அதனால, மாடி தோட்டம் அமைக்க முதலீடுன்னு சொல்றதுக்கு பெரிய தேவைகள் இதுக்கு கிடையாது. குறைந்த முதலீட்டில் ஆரம்பிக்கலாம் . தனக்கு தேவையானதை பூர்த்தி செஞ்சுக்க மாடி தோட்டம் வேளாண்மையில் மிக சிறப்பான ஒன்னு. இத எல்லாரும் கண்டிப்பா செய்யலாம்.

கேள்வி வேளாண்மை சார்ந்த தொழில்களுக்கு பயிற்சிகள் அளிப்பதுண்டா?

பதில் – இயற்கை விவசாயம், தேனீ வளர்ப்பு, பஞ்சகவ்யம் தயாரித்தல், ரசகவ்யம் தயாரித்தல் , காளான் வளர்ப்பு , இதற்கெல்லாம் கோவை வேணாண் பல்கலைக்கழகத்துல  பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதற்கான விவரங்கள் அவர்களுடைய வெப் சைட்டில் தேடினா கிடைக்கும்.

அடிக்கடி இந்த இணைய தளங்கள நம்ம பாத்துக்கிட்டே இருக்கணும். அதுல எந்தெந்த மாதத்தில் எதெற்கெல்லாம் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது என்ற தகவல்கள் கிடைக்கும். ஓரிரண்டு நாட்களுக்கான கட்டணம் செலுத்தி நாம எப்படி தொழில் செய்யணும்கறது கத்துக்கலாம் .

இப்போ நீங்க தேனீ வளர்ப்பு பற்றி பயிற்சி எடுக்கறீங்கன்னா, அது முடிச்ச கையோடே அத தொடர்வதற்கான முயற்சியில இறங்கணும். பயிற்சி முடிந்த பின் என்ன செய்யணும் எப்படி செய்யணும் என்கிற வழிகாட்டுதல்  EDII (Entrepreneurship Development Institute of India.) என்கிற அமைப்பு , பயிற்சி வகுப்புகள் நிறைய பட்டறைகள் நடத்தறாங்க. அந்த மாதிரி சமீபத்தில் நடந்த பயிற்சி பட்டறை தான் ‘செம்மை மாதர் 1.0’ – பெண் தொழில்முனைவோருக்காகவே நடத்தப்பட்ட பயிற்சிப்பட்டறை. சிலருக்கு தொழில் செய்ய தெரியும் ஆனா எப்படி சந்தைப்படுத்துவது என்பது தெரியாது. இது தான் தொழில் முனைவோருக்கு பெரிய சவாலாக அமைவது. இதைப்பற்றி தகவல்கள் செய்முறை என்ற விவரமும் இந்த பயிற்சிப்பட்டறையில் அளிக்கப்பட்டது. இதற்கு கட்டணம் செலுத்த வேண்டாம்.

கேள்வி – தொழில்முனைவோருக்கு கடன் உதவியை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் கொடுக்கிறதா? இதற்கு யாரை அணுக வேண்டும்?

பதில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தனிப்பட்ட முறையில் கடனுதவி கொடுப்பது  கிடையாது.ஆனா,தமிழக அரசு கொடுக்கிறது. அதற்கென்ற சிறப்பு திட்டங்கள் உண்டு.

  1. PMFME Scheme (Pradhaan Manthiri Formalisation of Micro-food Processing Enterprise) – இது மத்திய அரசு திட்டம், வேளாண்மை சார்ந்த கம்பெனிக்கு கடன் உதவி கிடைக்கும்.
  2. NEEDS (New Entrepreneur & Enterprise Development Scheme) – புதுசா ஸ்டார்ட் அப் செய்யறவங்களுக்கு பெரிய அளவுல முதலீடு தேவை அதாவது 10 லட்சத்துக்கு மேல முதலீடு செய்யவேண்டுமென்றால் இந்த திட்டத்தின் கீழ் அரசு அதற்கு கடன் உதவி அளிக்கிறது.
  3. EDII (Entrepreneurship Development Institute of India ), அவர்களுடைய , குறிப்பா அண்ணாமலை பல்கலை கழகத்தில் ஒரு Incubation Forum ஒன்று உண்டு . (Website: ediiphbif.org.in & https://aiirf.com) . தொழில்முனைவோர்கள் தங்களுடைய எந்த விதமான சந்தேகங்களையும் இங்கு கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
  4. தேனி பெரியகுளம் வளாகத்திலும் ஒரு Incubation Forum உண்டு. (தொழில் முனைவோரை அடைகாத்து, வளர்த்தெடுப்பதையே இன்குபேஷன் என்கிறோம்).
  5. AC & ABC (Agri Clinic & Agri Business Centres) என்ற ஒரு திட்டம் உண்டு. இது யாருக்காக என்றால் குறிப்பாக, வேளாண்மை, தோட்டக்கலை, தாவரவியல், விலங்கியல், மற்றும் விவசாயத்துறையின் கீழ் வரும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள திட்டம். இந்த துறையை சார்ந்தவர்களுக்கு 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. பெண்கள், SC, ST பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு 44% மானியத்துடனும் ஆண் விவசாயிகளுக்கு 36% மானியத்துடனும்  கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை குறித்து யாருக்கும் அதிகமான விழிப்புணர்வு இல்லை. இதற்கு எந்தவிதமான கட்டணமும் இல்லை. சில ஆவணங்கள் மட்டும் தேவைப்படும்.

கேள்வி – பெண்கள் வேளாண்மை துறையில் / தோட்டக்கலை சார்ந்த தொழில் முனைவோராக இருக்கிறார்களா?

பதில் – வேளாண்மை துறையில் அதிகமாக பெண்கள் தான் இருக்க்கிறார்கள். Soap, Phenyl, Coconut oil, Cosmetics, மாடி தோட்டம் இவையெல்லாம் அதிகமாக பெண்கள் தான் செய்கிறார்கள். ஆனா, பெண்கள் செய்வது நிச்சயமா அவ்வளவு சுலபம் கிடையாது. அவர்கள் பல தடைகளை தாண்டி தான் செய்யணும்.

கேள்வி தொழில்நுட்பம் புதுசா நிறைய வருது . அது, கிராமப்புற மக்களுக்கு போய் சேருதா? பயன்பாட்டுக்கு கொண்டு வருகிறார்களா?

பதில் – புதுசா வர்ற தொழில்நுட்பத்தை கிராமப்புற மக்களுக்கு கொண்டுபோய் சேர்க்கும் பொறுப்பு என்பது அந்ததந்த ஒன்றியங்களில் இருக்கும் AO, AEO, ADH, ADA போன்ற அலுவலர்களுடையது.அவர்கள் தான் அந்த பகுதியில் இருக்கிற விவசாயிகளுக்கு இந்தத் தொழில்நுட்பத்தைப் பற்றிச் சொல்லணும்.

நானே 2-3 முறை இயற்கை விவசாயத்தை குறித்து கிராமப்புற விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம் கொடுத்திருக்கிறேன். என்னை பொறுத்த வரை தொழில்நுட்பம்ங்கிறது முழுக்க முழுக்க அவர்கள் கையில் தான் இருக்கிறது. தொழில்நுட்பத்துக்கும் தொழில்முனைவோருக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. நிறைய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியோ அல்லது பயன்படுத்தியோ தங்கள் தொழிலை வளர்ச்சியடைய செய்ய தொழில்முனைவோர் முன்வரவேண்டும் எதிர்பார்க்கிறேன்.

-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

3 thoughts on “”வேளாண் தொழிலில் வாய்ப்புகள் ஆயிரம்”-ஃபிஸ்சா சலீம்.”

  1. Dr. T. M. Raghuram

    Very well conducted interview. Provides a lot of valuable information for the horticulturist as well as the budding entrepreneur. Congrats Sreeja.

  2. கிசா கவிதா இராசேந்திரன் திருச்சி

    மிகவும் சிறப்பு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *