மும்பை, நவ.5: நாட்டின் முன்னணி கண்ணாடி நிறுவனமான லென்ஸ்கார்ட்டின் பங்கு வெளியீடு அமோக ஆதரவைப் பெற்றிருக்கிறது. மொத்தம் ரூ.7278கோடி அளவுக்கு முதலீட்டாளர்கள் விண்ணப்பங்களைக் குவித்துள்ளனர். 9.98 கோடி வின்ணப்பங்களைக் கோரியிருந்த நிலையில் 281.88 கோடி விண்ணப்பங்களைப் பெற்றிருக்கிறது லென்ஸ்கார்ட். அக்டோபர் 31 முதல் நவம்பர் 4 வரை பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்று லென்ஸ்கார்ட் அறிவித்திருந்தது. பங்கு ஒன்றின் விலை ரூ.382 – ரூ.402 வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தொடக்கம் முதலாகவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தப் பங்கு வெளியீடு, பங்குச்சந்தையையே ஒரு கலக்கு கலக்கிவிட்டது என்று சொல்லலாம்.
2023-24 நிதியாண்டில் ரூ.10.15 கோடி அளவுக்கு நிகர நட்டத்தைச் சந்தித்திருந்த அந்நிறுவனம், 2024-25ல் ரூ.297.3 கோடி நிகர லாபத்தை ஈட்டியது அந்நிறுவனத்தின்மீதான நம்பிக்கையை முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகரித்தது இதற்கு இன்னுமொரு முக்கியக் காரணம் என்று சந்தை வல்லுநர்கள் தெரித்துள்ளனர்.
-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.





