சென்னை, மார்ச் 30: சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் அவர்களின் மகள் பிரீத்தா கணேஷுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது.
திரைப்பட தயாரிப்பாளர், நடிகர், கல்வியாளர், சென்னை வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் என்ற பன்முகம் கொண்ட ஐசரி கணேஷ், மறைந்த நடிகர் ஐசரி வேலனின் மகன் ஆவார். இவர்பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளார்.
திருச்சியைப் பூர்விகமாகக் கொண்ட தொழிலதிபர் உமாசங்கர் – சித்திரா தம்பதியரின் மகனான லஷ்வின் குமார் ஐசரி குடும்பத்தின் மருமகனாகப் போகிறார்.
திருமணம், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்ட்டரில் மே 9-ம் தேதி நடைபெற உள்ளது. திருமண வரவேற்பு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாஷ்யம் பிரார்த்தனாவில் நடைபெற உள்ளது.
திருமணத்துக்காக அழகான வடிவமைப்பில் அச்சிடப்பட்டுள்ள பத்திரிகை பிரபலங்களுக்கும், பிரமுகர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. பிரீத்தா கணேஷ் தற்போது வேல்ஸ் பல்கலைக்கழக நிர்வாகத்தை கவனித்து வருகிறார்.
-எல்.குணாளன்.





