சென்னை, நவ.29: இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர்வரையிலான காலகட்டத்தில் துணிகர முதலீட்டு நிறுவனங்களிடமிருந்து 9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு (ரூ.77,000 கோடி) நிதியுதவியை இந்திய புத்தொழில் நிறுவனங்கள் பெற்றுள்ளன. முந்தைய ஆண்டோடு ஒப்பிட்டால் இது 44.4% வளர்ச்சி ஆகும். 984 வணிக ஒப்பந்தங்கள் மூலம் இவை நடைபெற்றிருக்கின்றன. கடந்த ஆண்டின் இதே காலத்தோடு ஒப்பிடுகையில் இது 5.8% அதிகம் ஆகும். குளோபல் டேட்டா என்ற ஆய்வு நிறுவனம் இப்புள்ளி விபரங்களைத் தெரிவித்திருக்கிறது.
அந்நிறுவனத்தைச் சேர்ந்த ஆரோஜோதி போஸ் பேசும்போது, “ மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய புத்தொழில் நிறுவனங்களின்மீது துணிகர முதலீட்டு நிறுவனங்களின் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது. வழங்கப்பட்ட நிதி, பரிமாறப்பட்ட ஒப்பந்தங்கள் அடிப்படையில் பார்த்தாலும் உலக அளவில் துணிகர முதலீட்டாளர்களின் விருப்பத்துக்குரிய 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.
(Image by Mohamed Hassan from Pixabay)