கடந்த ஒன்றிய நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தலின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ”1991 , 1962 ஆம் வருடத்திய வருமான வரிச்சட்டங்கள் அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் மறு சீராய்வு செய்து மாற்றியமைக்கப்படும்” என்று அறிவித்திருந்தார். அதனையடுத்து வருமானவரிச் சட்ட மறுசீராய்வுப் பணிகளை மேற்கொள்ள மத்திய நேரடி வரிகள் வாரியம் ஒரு அலுவலர் குழுவைப் பணித்துள்ளது.
அந்த வகையில் வருமானவரிச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து பொதுமக்களாகிய நாமும் நமது கருத்துகளை மத்திய அரசுக்குத்தெரிவிக்கலாம். வருமான வரித்துறையின் இணையதளம் மூலம் இதனை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.





