நாடின் முன்னணி வங்கிச்சேவை நிறுவனமான கோட்டக் மஹிந்த்ராவுக்கு புதிய தலைவர் வர இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல, வங்கித்துறையில் 35 ஆண்டுகள் அனுபவம் பெற்ற அசோக் வாஷ்வாணிதான். இதற்கான ஒப்புதலை ரிசர்வ் வங்கி அளித்ததை அடுத்து, அவர் கோட்டக் மஹிந்த்ரா வங்கியின் தலைவர் (ம) தலைமைச் செயல் அதிகாரியாகப் பதவி ஏற்பது உறுதியாகியிருக்கிறது.
பார்க்ளேஸ் வங்கி, சிட்டி குழுமம் ஆகிய பல்வேறு நிறுவனங்களில் தலைமைப்பதவியை அலங்கரித்தவர் அசோக். வணிகம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் பட்டம் பெற்ற அவர், பட்டயக் கணக்கியல், நிறுமச் செயலரியல் ஆகிய பட்டங்களையும் பெற்றவர் என்பது குறிப்பிடவேண்டிய விஷயம்.
அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி புதிய பதவியை ஏற்கும் அசோக், மூன்று ஆண்டுகள் கோட்டக் வங்கியின் நிர்வாக இயக்குநராக செயலாற்றுவார். கடந்த 20 ஆண்டுகளில் கோட்டக் வங்கி, நிறுவனத்துக்கு வெளியிலிருந்து ஒருவரை தலைமைப்பதவிக்கு அமர்த்துவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
-அருள்.