சென்னை, ஜூலை 24: பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ், தனது முதல் காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளை வெளியிட்டிருக்கிறது. அந்நிறுவனத்தின் மொத்த லாபம் ரூ.13055 கோடியாக அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டில் இது ரூ.12138 கோடியாகத்தான் இருந்தது.
மேலும் தற்போது செயல்பாட்டு லாபம் ரூ.42,279 கோடியாக அதிகரித்திருக்கிறது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது இது 8% வளர்ச்சியாகும்.
அதேபோல நிகர லாபம் 9% அதிகரித்து, ரூ.6921 கோடியாக உயர்ந்திருக்கிறது. இக்கால காட்டத்தில் 3.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு அந்நிறுவனம் ஒப்பந்தப்பணிகளைப் பெற்றிருக்கிறது. அவற்றுள் பாதிக்கும் மேற்பட்டவை புதிய வாடிக்கையாளர் நிறுவனங்களால் வழங்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய நிலையில் 3 லட்சம் ஊழியர்களைக் கொண்டுள்ள, நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழ்ந்துவருகிறது.
-தமிழ்.





