கோவையில் ஏற்றுமதி கருத்தரங்கு : செப் 3ல் நடக்கிறது.

கோவையில் ஏற்றுமதி கருத்தரங்கு : செப் 3ல் நடக்கிறது.

கோயம்புத்தூர், செப்.2,2025: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான ஏற்றுமதி வணிக மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் தேசிய கருத்தரங்கம் செப்டம்பர் 3, 2025 (புதன்கிழமை) காலை 9.30 மணி முதல் கோயம்புத்தூர், அவாரம்பாளையம், கோ-இந்தியா அரங்கில் (CO-India Hall) நடைபெறவுள்ளது.

இந்தக் கருத்தரங்கம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி அலுவலகம் (MSME-Development & Facilitation Office (MSME-DFO)) கோயம்புத்தூர், மற்றும் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (Federation of Indian Export Organisations -FIEO) ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

முக்கிய நோக்கம்:

 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு உலகளாவிய சந்தை வாய்ப்புகள், ஏற்றுமதி ஆவண செயல்முறைகள், சர்வதேச வணிகப் போக்குகள், அரசின் ஊக்குவிப்பு திட்டங்கள், மற்றும் உலகளாவிய போட்டித் திறனை மேம்படுத்தும் உத்திகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும்.

தலைப்புகள்:

  • சர்வதேச வர்த்தக அறிமுகம்(Introduction to International Trade)

  • பொருள் மற்றும் சந்தை தேர்வு(Product & Market Selection)

  • வாடிக்கையாளரை அடையாளம் காணும் முறை
    (Identification of Buyers.)

  • சர்வதேச போக்குவரத்து (International Logistics)

  • சர்வதேச வணிகத்தின் ஏற்றுமதி விலை நிர்ணயம் மற்றும் கட்டண முறைகள்(Export Pricing and Payment Methods in international Trade)

  • வெளிநாட்டு வர்த்தக கொள்கை (FTP)-யின் திட்டங்கள் மற்றும்  நன்மைகள் (Schemes and Benefits under FTP)

  • INCO Terms

  • ஏற்றுமதியின்  முன் மற்றும் பிந்தைய ஆவணப்படுத்துதல் –(Pre Shipment and Post Shipment Documentation)

  • இந்தியாவின் வணிக இணையதளம் (Indian Trade Portal)

  • ஏற்றுமதியை மேம்படுத்த அரசின் ஊக்குவிப்பு திட்டங்கள் (Government Schemes & Incentives for Export Promotion)

  • ஏற்றுமதியில் டிஜிட்டல் தளங்கள் மற்றும் ஈ-காமர்ஸின் பங்கு(Role of Digital Platforms and E-Commerce in Exports)

  • குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் உலகளாவிய போட்டித்திறன் மேம்படுத்துதல் (Building Global Competitiveness of MSMEs)

நிகழ்ச்சியில் கொள்கை நிபுணர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டு பங்கேற்பாளர்களுக்கு முக்கியமான தகவல்களை பகிர உள்ளனர்.

பதிவு செய்ய: 

பங்கேற்க விரும்புவோர்  ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

அனைத்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியில் ஆர்வமுள்ளவர்கள் இந்த கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு, தங்கள் வணிகத்தை உலகளவில் விரிவுபடுத்தும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *