அண்மையில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உறுப்பினர்களின் தேவைக்கேற்ப வசதிகளை மேம்படுத்தவும் சில சவால்களை சரி செய்யவும் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளதால் முக்கிய செய்திகளில் பரபரப்பாக இருந்து வருகிறது .
ஆதார் விலக்கு
மத்திய அரசு குறிப்பிட்ட ஒருசிலர் பிஎஃப் தொகையை பெற ஆதார் அடிப்படையிலான சோதனை செய்ய வேண்டிய தேவை இல்லை என அறிவித்துள்ளதுள்ளது. இந்த பட்டியலில் வருபவர்கள்:
- ஆதார் இல்லாமல் இந்தியாவை விட்டு வெளியேறிய சர்வதேச தொழிலாளர்கள்(IW).
- நிரந்தரமாக வெளிநாட்டிற்கு குடிபெயர்ந்து ஆதார் இல்லாமல் குடியுரிமை பெற்றவர்கள்.
- இந்தியாவுக்கு வெளியே உள்ள, நேபாள மற்றும் பூட்டானின் குடிமக்கள்.
மேற்கண்ட உறுப்பினர்கள் இப்போது ஆதார் பெற முடியாததால் ஏற்கனவே யுஏஎன்(UAN) இருக்கும் பட்சத்தில், தங்களின் யுஏஎன்- உடன் ஆதாரை இணைக்க வேண்டிய தேவை நீக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
EPFO 3.0 அறிமுகம்
EPFO 3.0 திட்டம் தொடங்கப்பட்டு சந்தாதாரர்களின் புகார்களை தீர்க்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. PF பங்களிப்பின் 12% வரம்பு நீக்கப்படும், மேலும் தொழிலாளர்கள் தங்கள் தனிப்பட்ட சேமிப்பு பழக்கத்திற்கு ஏற்ப அதிகம் பங்களிக்க அனுமதிக்கப்படுவர்.
ஏடிஎம் மூலமாகவும் பணத்தை எடுக்கலாம்
2025ஆம் ஆண்டு முதல் பிஎஃப் தொகையை ஏடிஎம் மூலம் நேரடியாக எடுக்க முடியும். இதற்கான டெபிட் கார்டுகளை மே-ஜூன் 2025க்குள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) வட்டி வீதத்தை 8.15%லிருந்து 8.25% ஆக உயர்த்தியது. வட்டி மாதந்தோறும் கணக்கிடப்பட்டு, நிதியாண்டின் குறிப்பிட்ட சில மாதங்களில் அந்த வட்டி வரவு வைக்கப்படும். சுமார் 7 கோடி ஊழியர்கள் இந்த பயனைப் பெறுவார்கள். ஊழியர்களின் இபிஎஃப் கணக்கில் எவ்வளவு வட்டித் தொகை வந்துள்ளது என்பதையும் எளிதாகச் சரிபார்க்கலாம்.
அணுகுவது எளிதாக்கப்படுகிறது
இபிஎஃப் வைப்புத்தொகைக்கான வட்டி வீதம், ஊழியர் வருங்கால வைப்பு நிதியின் மத்திய அறங்காவலர் குழுவால் ஆண்டுதோறும் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. இணையதளம், மிஸ்ட் கால் அழைப்புகள், எஸ்எம்எஸ் அல்லது உமாங் ஆப் போன்ற பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி உறுப்பினர்கள் தங்கள் இருப்பைச் சரிபார்க்கலாம். தங்கள் பாஸ்புக்கை சோதனை செய்வதன் மூலம், உறுப்பினர்கள் தங்கள் பங்களிப்புகள், சம்பாதித்த வட்டி மற்றும் ஒட்டுமொத்த இருப்பு ஆகியவற்றைக் கண்காணிக்க முடியும்.
இனி நிலுவையில் இருக்கும் கோரிக்கைகளுக்கு சரியான நேரத்தில் தீர்வு கிடைக்கும் என நம்பலாம்.
-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.
(pic courtesy: Freepik.com)