ஸ்மார்ட் ஃபோனில் நீங்கள் பத்திரம்தானா?

சமூக ஊடகங்களில் நம்முடைய தகவல்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி?

பேஸ்புக், ட்விட்டர், யூ-டியூப் போன்ற சமூக ஊடகங்கள் இல்லாமல் வாழவே முடியாது என்கிற நிலைக்கு வந்துவிட்டோம். ஆனால், நம்முடைய தாய் வீடு போல நினைத்து சமூக ஊடகங்களில் நாம் பகிர்ந்துகொள்ளும் நம்மைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் அந்நியர்களால் உளவுபார்க்கப்படுகிறது என்கிற தகவல் சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்துபவர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

 

1200px-Cambridge_Analytica_logo.svg
சமூக ஊடகங்களில் ஒன்றான ஃபேஸ்புக்கிலிருந்து கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா நிறுவனத்தின்மூலம் தனிமனிதத் தகவல்கள் எடுக்கப்பட்டது உண்மைதான் என்று அதன் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்க் அதுகுறித்து மனிப்புக் கேட்க, இப்பொழுது இந்தப் பிரச்னை இன்னும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கி விட்டது.

 

அதுமட்டுமல்ல,மோசில்லா பயர்பாக்ஸ் போன்ற வெப்-பிரவுசர் நிறுவனங்கள் பேஸ்புக் நிறுவனத்துக்கு விளம்பரம் கொடுப்பதை தற்போது நிறுத்தி வைத்திருக்கின்றன. பங்குச்சந்தையிலும் இந்நிறுவனத்துக்கு தர்ம அடி. பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பங்குகள் சரிந்திருக்கின்றன.

 

மானம் மரியாதை? அது கந்தலாகிக் கிடக்கிறது. காரணம்? நமது அந்தரங்கம் கண்காணிக்கப்படுகிறது அல்லது திருடுபோகிறது என்கிற உலகளாவிய தார்மீகக் கோபம்தான். ‘முகநூலிலிருந்து வெளியேறுவோம்’ என்று ஒரு இயக்கமே இணையத்தில் தொடங்கிவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

 

facebook
நம் தினசரி நடவடிக்கைகளை பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ்களாகப் பதிவிட்டு மகிழ்கிறோம்.நாம் போடும் பதிவுகளுக்கு நன்னுடைய நண்பர்கள் லைக் போடுகிறார்கள். கமெண்ட் போடுகிறார்கள்.இந்த அளவுக்கு மட்டும் முகநூலின் பயன்பாடு இருந்தால் பரவாயில்லை. ஆனால் அதையும் தாண்டி இங்கே பல விஷயங்கள் நடக்கின்றன.
எடுத்துக்காட்டாக, ஒரு உணவகத்தின் பெயரைக் குறிப்பிட்டு, அங்கே இட்லி சாப்பிட்டது குறித்து நீங்கள் ஒரு பதிவு போடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு நிறைய கமெண்ட்கள் மற்றும் லைக்குகள் வரும்.

 

அதன்பிறகு பேஸ்புக் தவிர மற்ற சைட்கள் எதற்குள்ளாவது நீங்கள் நுழையும்பொழுது, சம்பந்தமே இல்லாமல்,இட்லி மாதிரியான உணவுகள் விற்கப்படும் உணவகங்கள் குறித்த விளம்பரங்கள் வரும். அதுமட்டுமல்ல,இதுபோல,வேறு உணவகங்கள் குறித்த தகவல்கள் வேண்டுமா என்றும் கேள்விகள் வரும்.
இது எப்படி சாத்தியம் என்று கேட்கிறீர்களா?பேஸ்புக்கானது உங்களுடைய பேஸ்புக் அக்கவுண்ட்டில் அல்லது இதர சமூக வலைத்தளங்களில் நீங்கள் பதிவிடும் தகவல்களை பல்வேறு நிறுவனங்களுக்கு பகிர்கிறது.இதன்மூலம் பேஸ்புக் நிறுவனத்துக்கு வருமானம் கிடைக்கிறது.
அதேபோல நம்முடைய பயன்பாட்டிற்காக ஸ்மார்ட்போன்களில் நிறைய ‘ஆப்களை’ நாம் இன்ஸ்டால் செய்து வைத்துள்ளோம். அப்படி புதிதாக ஒரு ஒரு “ஆப்-ஐ இன்ஸ்டால் செய்யும்பொழுது,அதனுள் நுழைவதற்கு முன்பு பதிவு செய்து அதன்பிறகு நீங்கள் உள்ளே நுழைய வேண்டும். இதுதான் பொதுவான நடைமுறை. இதற்கு சற்று நேரம் பிடிக்கும்.

 

delete facebook
ஆனால்,இப்படி ரிஜிஸ்டர் எதுவு செய்யாமல்,ஒரு ஆப்-ஐ இன்ஸ்டால் செய்த உடனேயே அதை பேஸ்புக் வழியாக கனெக்ட் செய்து உடனடியாக அந்த ஆப்-பின் உள்ளே சென்றுவிட முடியும்.சோம்பேறித்தனத்தின் விளைவாக நம்மில் நிறையப் பேர் இப்படி ஆப்-ஐ பேஸ்புக் வழியாக கனெக்ட் செய்து உள்ளே சென்று விடுகிறோம்.
இப்படி உள்ளே நுழையும்பொழுது, “உன்னுடைய செல்பேசியில் உள்ள தொலைபேசி எண்ககளை விவரங்களை, புகைப்படங்களை, கேமராவை நாங்கள் பயன்படுத்தலாமா?” என்கிற ரீதியில் அந்த செயலி (ஆப்) நம்மிடம் பல கேட்கும். நாமும் எதைப் பற்றியும் யோசிக்காமல், yes,yes…..என்று கிளிக் செய்துவிடுகிறோம். நாம் நம்மை அறியாமலேயே நம்முடைய பேஸ்புக் தகவல்கள் இப்படி மற்றவர்களுக்குப் போய்சேர்ந்து விடுகிறது.

 

அதனால்,ஒருபோதும் ஆப்-களை பேஸ்புக் வழியாக கனெக்ட் செய்யாதீர்கள். கொஞ்சம் மெனக்கெட்டு முறைப்படி ரிஜிஸ்டர் செய்து ஆப் உள்ளே செல்லுங்கள். இதன் மூலம் உங்கள் தகவல்கள் பாதுகாக்கப்படும்.

 
அதேபோல,உங்களுக்குத் தெரியாத ஆப்-களுக்குள் நுழையாதீர்கள். ஈர்க்கும் வண்ணம் இருக்கிறது என்று தேவையற்ற அப்-களை ஸ்மார்ட்போனில் வைத்துக்கொள்ளாதீர்கள்.
அதுமட்டுமல்ல,உங்கள் ஸ்மார்ட்போனில் GPS கனெக்ட் ஆகியிருந்தால்,நீங்கள் எந்த இடத்திற்குச் சென்றாலும்,கூகிள் மேப் மூலமாக,GPS,நீங்கள் செல்லும் பாதையை கண்காணித்துக்கொண்டே வரும்.பிறகு “ இன்று நீங்கள் இந்த இடத்திற்குச் சென்றீர்கள் போலிருக்கிறது.

 

அந்த இடத்தில் இருக்கும் அந்த உணவகம் எப்படி இருக்கிறது? அதனை மதிப்பிட்டு எத்தனை மதிப்பெண்கள் கொடுப்பீர்கள்?” என்கிற ரீதியில் நமக்கு உரிமையாக ஒரு மெசேஜ் வரும். ஆக, நீங்கள் எங்கு சென்றாலும் கண்காணிக்கப்படுகிறீர்கள். என்ன செய்தாலும் அது தகவல்களாகத் திரட்டப்படுகிறது.இப்படித்தான் நம்முடைய தகவல்கள் நமக்குத் தெரியாமலேயே நம்மிடமிருந்து உருவப்படுகின்றன.

sex-987183_640
அதுமட்டுமல்ல,ஸ்மார்ட்போன்களில் ஆபாச இணையதளங்களைப் பார்க்கும்பொழுது,அந்த ஸ்மார்ட்போன்களில் இருக்கும் கேமரா மூலமாகவே,சம்பந்தப்பட்ட நபர் படம்பிடிக்கப்படும் சூழ்நிலையும் இருக்கிறது. நமது செல்பேசி, நம்மை இயக்கும் வாய்ப்பு அதிகமாகிவிட்டது. எனவே, கவனம் தேவை.

 
சரி….நம்முடைய தகவல்கள் எப்படி உளவு பார்க்கப்படுகின்றன?
அதுவரை சீராக இருந்த பேட்டரியின் சார்ஜ் சட்டென்று கீழே இறங்கினாலோ, அல்லது யாருடனாவது ஸ்மார்ட்போனில் பேசிக்கொண்டிருக்கும்பொழுது, கிராஸ் டாக் கேட்டாலோ,நம்முடைய தகவல்கள் உளவு பார்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்று நாம் யூகிக்கலாம்.

 

 

அதனால் ஸ்மார்ட்போன் உபயோகிப்பவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உங்கள் போனை RESET செய்துகொள்ளலாம்.இதன்மூலம் உங்களைப் பற்றிய தகவல்களை மற்றவர்கள் எடுப்பதைத் தவிர்க்கலாம். மிக மிக முக்கியமான விஷயம்,சம்பந்தமே இல்லாமல், தெரியாத எண்ணிலிருந்து வெளிநாட்டிலிருந்து அழைப்புகள் வந்தால் எடுக்கவே எடுக்காதீர்கள்.

 

eye-3246419_640

உங்கள் தொலைபேசி எண்ணுக்குக் கோடிக்கணக்கில் பணம் விழுந்திருக்கிறது என்பதுபோன்ற பொய்யான தகவல்களுக்கு பதில் கொடுக்காதீர்கள்.

 

உங்களுடைய செல்பேசி எண்ணைக்கொண்டு உங்கள் ஜாதகத்தையே எடுத்துவிடும் அளவுக்கு தொழில்நுட்பம் உச்சத்தில் இருக்கிறது. அதுவும் தொழில்முனைவோரின் தகவல்கள் கிடைத்தால் எவ்வளவு பேருக்கு அது லட்டு மாதிரி இனிக்கும்! குறிப்பாகப் போட்டியாளர்கள், பொறாமைக்காரர்களுக்கு….யோசியுங்கள்.
ஸ்மார்ட் ஃபோனை ஸ்மார்ட் ஆகப் பயன்படுத்தாவிட்டால் அந்தரங்கம் அம்போ-ஆகிவிடும். கவனம்…கவனம்!

சு.கவிதா

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *