“வாட்ஸ் அப் தந்த வெற்றி இது” – அபர்ணா.

வெறும் செய்திகளையும்,வீடியோக்களையும் பகிர மட்டுமே வாட்ஸ்-அப் துணை நிற்கும் என்றுதான் நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த வாட்ஸ்-அப் பலரைத் தொழில் முனைவோர் ஆகியிருக்கிறது. அதில் அவர்களை வெற்றியும் பெற வைத்துக்கொண்டிருக்கிறது.

whatsapp-1889081_640

எங்கே? இதோ, நம்ம சென்னை குரோம்பேட்டையில்தான். அப்பகுதியைச்  சேர்ந்த அபர்ணா ஹரிபிரசன்னா என்ற குடும்பத்தலைவி  வாட்ஸ்-அப் உதவியோடு  வெற்றிகரமான  தொழில் முனைவராக பிரகாசித்துக் கொண்டிருக்கிறார். அப்சனா பொட்டிக் என்பது அவரது நிறுவனத்தின் பெயர்.

 

“குழந்தை பிறந்து,அதற்கு  இரண்டு வயது ஆகும்வரை  நானும் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தேன். ஆனால், ஒரு கட்டத்தில் குழந்தையுடன் சரியாக நேரத்தை செலவிட  இயலவில்லை. எனவே, வேலையை விட்டுவிட்டு சொந்தத் தொழில் செய்ய முடிவெடுத்தேன்.

இந்தத் தொழிலுக்காக நான் கடை எதுவும் போடவில்லை. இன்னும்  எங்களுக்கு இணைய தளம் கூடக் கிடையாது. முழுக்க முழுக்க வாட்ஸ்-அப்-ஐ மட்டுமே நம்பிக் களமிறங்கினேன்.

 

smartphone-1701086_640விற்பனைக்குத் தேவையான மெட்டீரியல் அனைத்தையும் வாங்கி என் வீட்டில் வைத்துக்கொள்வேன். என்னென்ன புது மாதிரியான புடவைகள் மற்றும் சல்வார்கள் வந்திருக்கின்றன அவற்றின் விலை என்ன போன்ற தகவல்களை  வாட்ஸ்-அப் மூலமாக   படத்துடன் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைப்பேன்.

 

எந்தப் புடவை அல்லது எந்த சல்வார் பிடிக்கிறதோ, அதுகுறித்து வாடிக்கையாளர்கள் சொல்வர். பிறகு, அவர்கள் குறிப்பிடும் அந்தப் புடவை அல்லது சல்வாரை அவர்களுக்கு அனுப்பி வைப்பேன்.

indian-767872_640

வாட்ஸ் அப் மூலமாக மட்டும் பல வாய்ப்புகளைப் பெற்றுவரும்  நான், இந்தியா முழுக்க கொரியரில் ஆடைகளை அனுப்பி வைக்கிறேன்.

 

அதுமட்டுமல்ல… மலேசியா,சிங்கப்பூர் போன்ற இடங்களுக்கும் பார்சல் சேவை மூலமாக,வாடிக்கையாளர் கேட்கும் ஆடைகளை அனுப்பி வைக்கிறேன்” என்கிறார்.

 

இன்றைய சூழலில் வாட்ஸ்-அப்  செயலியைப் பயன்படுத்தாத பெண்களே  இல்லை  என்ற அளவுக்கு சூழல் மாறியிருப்பதால் இதையே நம் தொழிலுக்கான முக்கியக் கருவியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிறார்.

 

“தெரிந்தவர்கள்,தோழிகள்,உறவினர்களிடம் மட்டுமே  புடவை, சல்வார் போன்றவற்றை வாட்ஸ்-அப் மூலமாக விற்க முடியும் என்பதில்லை.

 

பெண்களுக்கு எளிதில் பிறருடன் இயல்பாகப் பழகும் குணம் இருப்பதால், ஒருவரைப் பார்த்த மாத்திரத்திலேயே  அவருடன் நட்பாகப் பழகி, அவரின் நன்மதிப்பை நம்மால் பெற முடியும். அதன்பிறகு மெல்ல,மெல்ல நம் தொழிலைப் பற்றிப் பேசி, வாட்ஸ்-அப் மூலமாக நம் விற்பனையை ஆரம்பித்துவிடலாம்.

 

அதுமட்டுமல்ல,வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை நம் முடைய சிறப்பான சேவை மூலமாகப் பெற்றுவிட்டால் போதும், அவர்கள் இன்னும் ஐந்தாறு பேரை நமக்காகப் பரிந்துரைப்பர். இதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பிக்கும்” என்றும்  சொல்கிறார் அபர்ணா.

 

“காஞ்சிபுரம், ஆரணி,சூரத் என்று  நாட்டின் பல இடங்களில் இருந்தும்  அந்ததந்தப் பகுதிகளில் புகழ்பெற்று விளங்கும் ஆடைகளைத் தருவிப்பேன். அதேபோல,எல்லோருக்கும் எல்லா ஆடைகளையும் பிடித்துவிடாது.

 

saree-720719_640

கல்லூரி மாணவிகளின் ரசனை நவீனத்துவம் நிறைந்ததாக இருக்கும். அதனால் அவர்கள் புதுவரவை எதிபார்ப்பர். குடும்பத் தலைவிகள், மற்றும் வயதானவர்களின் ரசனைகள் வேறு மாதிரியானவை. பள்ளி ஆசிரியைகள் ஒரே மாதிரியான செட் புடவைகளை விரும்புவர்.

 

அதனால்,அந்தந்த வாடிக்கையாளருக்கு ஏற்ப வாட்ஸ்-அப்பில் ஆடைகள் குறித்த தகவல்களை,படங்களை அனுப்பி,விற்பனை செய்வதற்கான வாய்ப்பைப் பெற்று வருகிறேன்.

 

நேர்மையாகவும்,நாணயமாகவும் நடந்துகொண்டால் போதும்,வாடிக்கையாளரை நேரில் பார்க்காமலேயே வாட்ஸ்-அப் மூலமாக விற்பனை செய்து,மெல்ல,மெல்ல  இந்தத் தொழிலில் சிகரம் தொட்டுவிடலாம் “ என்கிறார் வளரும் தொழில் முனைவரான அபர்ணா.

-சு.கவிதா.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *