ஐடியா-வோடபோன் : இணைந்த கைகள்

தனியாக செயல்பட்டால்தான் வெற்றிக்கனியைப் பறிக்கலாம் என்கிற காலமெல்லாம் மலையேறிவிட்டது. ஒரே துறையைச் சேர்ந்த இரண்டு பெரிய நிறுவனங்கள் இணைந்து வெற்றிகரமாக செயல்பட்டுவரும் காலமிது.

 

அப்படி இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஐடியா செல்லுலார் நிறுவனம் பிரிட்டிஷ் தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் இந்தியா நிறுவனத்துடன் இணையப் போகிறது. இதற்கான அனுமதியை இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்  அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுவிட்டது.

 

இதன் காரணமாக இந்தியாவின் மிக பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் என்கிற பெருமையோடு ’வோடபோன் ஐடியா லிமிடெட்’ (VODAFONE  INDIA  LTD) என்ற பெயரில் இந்த இரண்டு தொலைத்தொடர்பு  நிறுவனங்களும் இனி இந்தியாவில் இயங்கப் போகின்றன.

 

KMB_about-us

ஐடியா செல்லுலார்  நிறுவனத்தின் தலைவர்  குமார் மங்கலம் பிர்லா ’வோடபோன் ஐடியா லிமிடெட்’ நிறுவனத்தின் தலைவராக செயல்படுவார். வோடபோன் நிறுவனத்தைச் சேர்ந்த பலேஷ் ஷர்மா, புதிய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்படுவார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

 

இந்த இணைப்பின் காரணமாக இருபத்திமூன்று பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்தியாவின் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் என்கிற பெயரும் “வோடபோன் ஐடியா லிமிடெட்” நிறுவனத்திற்குக் கிடைக்கும்.

 

அதுமட்டுமல்ல, 430 மில்லியன் சந்தாதாரர்கள் இவர்களுக்குக் கிடைப்பார்கள். இதன்காரணமாக ரிலையன்ஸ் ஜியோ,ஏர்டெல் நிறுவனங்களுக்கு சரியானதொரு போட்டியையும் இந்த “வோடபோன் ஐடியா லிமிடெட்” நிறுவனம் கொடுக்கும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

 

வோடபோன் இந்தியா நிறுவனத்துடன் ஐடியா செல்லுலார் நிறுவனம் இணையப் போகிறது என்பதால் வோடபோன் 45.1% பங்குகளைத் தன் வசம் வைத்திருக்கும் என்கிற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆதித்ய பிர்லா குழுமம் 26% பங்குகளையும் ஐடியா பங்குதாரர்கள் 28.9% பங்குகளையும் வைத்திருப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

 

வோடபோன் இந்தியாவும் சரி, ஐடியா செல்லுலார் நிறுவனமும் சரி இரண்டுமே கடனில்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இரண்டு நிறுவனங்களும் மொத்தமாகச் சேர்த்து ரூ.1.15 லட்சம் கோடி கடன் வைத்திருக்கின்றன. அதனால் இந்த இணைப்பின் காரணமாக தங்களுக்கு நல்லது நடக்கும் என்று இரண்டு நிறுவனங்களுமே பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கின்றன.

 

எது எப்படியோ, வாடிக்கையாளர்களுக்கு நல்லது செய்யுங்கப்பா!

-பாலாஜி.

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *